இஸ்ரோவின் 5 சேட்லைட்களோடு பானிபுயலை விரட்டிய இந்தியா: ஐநா பாராட்டு.!

இடைவிடாமல் இஸ்ரோவின் Insat-3D, Insat-3DR, Scatsat-1, Oceansat-2 மற்றும் மெகா ட்ரோபிக்ஸ் ஆகிய செயற்கைகோள்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில், துல்லியமாக கணித்து, மக்களை வேறு பகுதிக்கு மாற்றியது. இதன

|

வங்ககடலில் பானி புயல் உருவானது முதல் இந்தியா வானிலை ஆய்வு மையம் இஸ்ரோவின் 5 செயற்கைகோள்களின் உதவியுடன் புயலை ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே கண்காணித்து வந்துள்ளது.

இஸ்ரோவின் 5 சேட்லைட்களோடு பானிபுயலை விரட்டிய இந்தியா: ஐநா பாராட்டு.!

இடைவிடாமல் இஸ்ரோவின் Insat-3D, Insat-3DR, Scatsat-1, Oceansat-2 மற்றும் மெகா ட்ரோபிக்ஸ் ஆகிய செயற்கைகோள்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில், துல்லியமாக கணித்து, மக்களை வேறு பகுதிக்கு மாற்றியது.

அமேசான் நிறுவனரை பாதுகாக்க புல்லட் புரூப் கட்டிடம்அமேசான் நிறுவனரை பாதுகாக்க புல்லட் புரூப் கட்டிடம்

இதனால், பெருமளவு உயிர்சேதம் தவிர்க்கப்பட்டதாக ஐநா இந்தியாவுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டது.

33 பேர் இறந்தனர்:

33 பேர் இறந்தனர்:

வங்கடலில் நிலை கொண்ட பானி புயல் காரணமாக 32 பேர் இறந்துள்ளனர். 160க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். ஒடிசாவில் 52 நகரங்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் மின் கம்பம், தொலைத்தொடர்பு கோபுரங்கள் முறிந்து விழுந்தன. போக்குவரத்தும் பல்வேறு பகுதிகளில் முடங்கியுள்ளது. மேலும், தொலைத்தொடர்பு சேவை அடியோடு முடங்கியுள்ளது. தற்போது முழு நிவாரணப்பணிகளும் முழுவீச்சில் நடக்கின்றது.

ஒடிசாவில் கரையை கடந்தது:

ஒடிசாவில் கரையை கடந்தது:

ஒடிசாவில் பானி புயல் கரையை கடந்து இருந்தாலும், இந்திய வானிலை ஆய்வு மையம் எவ்வாறு பெரும் உயிர் சேதத்தை தடுத்து என்பது தான் ஆச்சரியமான விஷயமாக பார்க்கப்படுகின்றது.

புயலை துல்லியமாக கணிக்க காரணமாக இருந்த இஸ்ரோவின் செயற்கைகோள் தான் என்று நமக்கு சற்றும் ஆச்சரியமளிக்கும் வகையில் இருக்கின்றது.

உடனுக்குடன் தகவல் அனுப்பிய செயற்கைகோள்:

உடனுக்குடன் தகவல் அனுப்பிய செயற்கைகோள்:

வானிலை மற்றும் புயல் சின்னங்களை கண்காணிக்க இஸ்ரோ அனுப்பிய செயற்கைகோள்கள், பானி புயலானது அதிதீவிர புயலாக மாற துவங்கியதும் ஒவ்வொரு 15 நிமிடத்திற்கு ஒருமுறை, பூமியில் உள்ள கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் அனுப்பி உள்ளது. புயல் செல்லும் பாதை, அதன் தன்மை, வானிலை நிலவரம் உள்ளிட்ட தகவல்கள் உடனுக்குடன் அனுப்பப்பட்டதால் நூற்றுக் கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.

 துல்லியமாக கணித்த செயற்கைகோள்:

துல்லியமாக கணித்த செயற்கைகோள்:

இது குறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலில், Insat-3D, Insat-3DR, Scatsat-1, Oceansat-2 மற்றும் மெகா ட்ரோபிக்ஸ் ஆகிய செயற்கைகோள்கள் அளித்த தகவல்கள் உடனடியாக ஆய்வு செய்யப்பட்டன. இவைகள் பானி புயலின் இருப்பிடம், நகர்வு ஆகியவற்றை உடனுக்குடன் அனுப்பின.

செயற்கைகோளின் முக்கிய பங்கு:

செயற்கைகோளின் முக்கிய பங்கு:

புயல் சின்னம் 1000 கி.மீ., சுற்றளவில் இருக்கும் போதே மழை மேகங்கள் குறித்த தகவல்களும் அனுப்பியது. வானிலையை கணிப்பதில் செயற்கைகோள்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக புயல் சமயங்களில் சரியான வானிலை நிலவரங்களை கண்காணிக்க உதவுகின்றன என தெரிவித்துள்ளது.

மக்களுக்கு பாதுகாப்பு:

மக்களுக்கு பாதுகாப்பு:

இந்த செயற்கைகோள்களின் உதவியால் புயலின் போது எந்த இடத்தில் மழை பெய்யும் என இந்திய வானிலை மையம், ஒடிசா, ஆந்திரா மற்றும் மேற்குவங்க அரசுகளுக்கு தகவல் அனுப்பி உள்ளது. இதனால் 11.5 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

எகிப்தை மீண்டும் புரட்டி போட்ட 4500 ஆண்டு மர்மம்: விடாத மம்மிகள்.! எகிப்தை மீண்டும் புரட்டி போட்ட 4500 ஆண்டு மர்மம்: விடாத மம்மிகள்.!

புயலை முழுமையாக கணித்தன:

புயலை முழுமையாக கணித்தன:

Scatsat-1 செயற்கைகோள் மூலம் பானி புயலின் கண் பகுதி எந்த இடத்தை நோக்கி நகர்கிறது என்பதை துல்லியமாக கணிக்க உதவியது. Oceansat-2 செயற்கைகோள் மூலம் கடல் நிலவரம், காற்றின் வேகம், காற்றின் திசை ஆகியன அறியப்பட்டன.

இந்தியாவுக்கு ஐநா பாராட்டு :

இந்தியாவுக்கு ஐநா பாராட்டு :

இந்தியா பானி புயலை வெற்றிகரமாக கணித்து சாதாரண விஷயமல்ல. இது புயல் வரும் பாதைகளுக்கு முன்பே இந்தியா மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சேர்த்துள்ளது. மேலும், பல்வேறு அறிவிப்புகளையும் கொடுத்து காத்துள்ளது. மேலும் அதீத புயலை செயற்கைகோள் உதவியோடு உயிரிழப்பை வெகுவாக குறைத்துள்ளது என்று ஐநா இந்தியாவை பாராட்டுள்ளது.

ஸ்பேஸ் எக்ஸ் ஹைப்பர்லூப் பாட் போட்டியின் இறுதிச்சுற்றில் ஐ.ஐ.டி. மெட்ராஸ் அணி.!ஸ்பேஸ் எக்ஸ் ஹைப்பர்லூப் பாட் போட்டியின் இறுதிச்சுற்றில் ஐ.ஐ.டி. மெட்ராஸ் அணி.!

Best Mobiles in India

English summary
India accurately predicted Bani storm with ISRO satellite : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X