எகிப்தை மீண்டும் புரட்டி போட்ட 4500 ஆண்டு மர்மம்: விடாத மம்மிகள்.!

தற்போது எகிப்தில், 4,500 ஆண்டுகள் பழமையான கல்லறை தோட்டம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கீசா பீடபூமியின் தெற்கு பகுதியில் உள்ள இந்த தோட்டத்தில் அந்த காலத்தில் முக்கிய பொறுப்புகள் வகித்த பெனுய்- கா((Behn

|

உலகில் இன்று வரை பல்வேறு மர்மங்களையும் கொண்டுள்ளது எகிப்த். முன்பு எகிப்தியர்கள் எவ்வாறு அரிய கலை நடயத்துடனும் வாழ்ந்துள்ளனர் என்று நாம் இன்று நடக்கும் ஆய்வுகள் மூலம் நாம் அறிய முடிகின்றது.

எகிப்தை மீண்டும் புரட்டி போட்ட 4500 ஆண்டு மர்மம்: விடாத மம்மிகள்.!

மேலும், தொழில்நுட்பம் கூட இல்லாமல் மிரள வைக்கும் கட்டிட கலையும், தொழில்நுட்பத்தால் இன்று வரை கணிக்க முடியாத கலையாகும் இருக்கின்றது எகிப்தின் குவிந்து கிடக்கும் மம்மிகள்.

பிணக் குவியல்:

பிணக் குவியல்:

எகிப்தில் ஏராளமான பிணங்களின் குவியல்கள் கிடக்கின்றன. அதில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இறந்தவர்களின் உடலும் பதப்படுத்தப்பட்டுள்ளது. விலங்குகளின் உடல்களும் அங்கு பதப்படுத்தப்பட்டுள்ளது. இறந்த உடல்களை ஆராய்ச்சியாளர்கள் மிம்மி என்று வகைப்படுத்தி வருகின்றனர்.

எகிப்த் 4500 ஆண்டு கல்லறை:

எகிப்த் 4500 ஆண்டு கல்லறை:

தற்போது எகிப்தில், 4,500 ஆண்டுகள் பழமையான கல்லறை தோட்டம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கீசா பீடபூமியின் தெற்கு பகுதியில் உள்ள இந்த தோட்டத்தில் அந்த காலத்தில் முக்கிய பொறுப்புகள் வகித்த பெனுய்- கா((Behnui-Ka)) மற்றும் நிவை((Nwi)) ஆகிய இருவரின் கல்லறைகளை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ள எகிப்திய தொல்லியல் துறை, பல்வேறு காலகட்டங்களில் உயிரிழந்தவர்களின் கல்லறைகளும் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.

சவப்பெட்டிகள்:

சவப்பெட்டிகள்:

கல்லறை தோட்டத்திலிருந்து மரத்தாலான சவப்பெட்டிகள், சுண்ணாம்பு கற்களால் செய்யப்பட்ட ஒரே குடும்பத்தின் சிலைகள், விலங்குகள் உருவம் ஆகியவற்றை கண்டறிந்துள்ளதாக தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்பு:

இதற்கு முன்பு:

சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் பதப்படுத்தப்பட்ட (மம்மி) எலிகள், வேறு சில விலங்குகள் மற்றும் இரண்டு மனிதர்களின் உடல்கள் எகிப்திலுள்ள சஹோகே என்னும் நகரத்தின் பூமிக்கடியில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள கல்லறையில் கிடைத்துள்ளது. இரண்டு மனித மம்மிகளின் உடலை சுற்றி எலிகள் உள்பட மற்ற விலங்குகளின் பதப்படுத்தப்பட்ட உடல்கள் காணப்படுகின்றன. இவை புதைக்கப்பட்டுள்ள அறையிலுள்ள சுவர் முழுவதும் இறுதிச் சடங்குகள் குறித்த ஓவியங்கள் உள்ளன.

சுமார் 2000 ஆண்டு மம்மிகள்:

சுமார் 2000 ஆண்டு மம்மிகள்:

சுமார் 2,000 ஆண்டுகள் பழமையான கல்லறையான இது, முற்காலத்தில் எகிப்தின் உயரதிகாரியாக இருந்த டுட்டு மற்றும் அவரது மனைவிக்கான ஓய்வெடுக்கும் பகுதியாக விளங்கியதாக தொல்லியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எகிப்து தலைநகர் கெய்ரோ:

எகிப்து தலைநகர் கெய்ரோ:

எகிப்து தலைநகர் கெய்ரோவிலிருந்து சுமார் 390 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பாலைவன பகுதியான இது, இனி சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் நாட்டின் மற்றொரு பகுதியாக உருவெடுக்கும் என்று அந்நாட்டின் தொல்லியல் துறை நம்புகிறது.

Best Mobiles in India

English summary
4500 Years Old Cemetery Gardening In Egypt : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X