Home
Gadgets

மிரண்டுபோன மார்க்கெட்.. 32ஜிபி மெமரி.. 65 இன்ச்.. பிரமாண்டமான டிவியை அறிமுகம் செய்த TCL.. என்ன விலை?

டிசிஎல் நிறுவனம் இந்தியாவில் அசத்தலான ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்து வருகிறது. அதுவும் மற்ற நிறுவனங்களைச் சற்று குறைவான விலையில் தரமான அம்சங்களுடன் டிசிஎல் நிறுவனம் டிவிகளை அறிமுகம் செய்வதால் நல்ல வரவேற்பு உள்ளது.

இந்நிலையில் டிசிஎல் நிறுவனம் புதிய பிரமாண்டமான 65-இன்ச் டிவியை அறிமுகம் செய்துள்ளது அதாவது டிசிஎல் டி75கே என்று அழைக்கப்படும் ஸ்மார்ட் டிவி ஆனது 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் ஆதரவு, 32ஜிபி மெமரி எனப் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த டிவியின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

பிரமாண்டமான டிவியை அறிமுகம் செய்த TCL.. என்ன விலை?

டிசிஎல் டி7கே டிவி அம்சங்கள் (TCL T7K TV Specifications): 3840 x 2160 பிக்சல்ஸ் மற்றும் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட ட்ரூ எக்ஸ்டிஆர் மினி எல்இடி டிஸ்பிளே (True XDR Mini LED display) வசதியுடன் இந்த டிவி வெளிவந்துள்ளது. மேலும் 512 டிம்மிங் ஜோன்ஸ் (dimming zones), 1600 நிட்ஸ் பிரைடன்ஸ் (1600nits brightness), எச்டிஆர் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த டிவி வெளிவந்துள்ளது.

அதேபோல் ஆப்டிகல் இமேஜிங் மைக்ரோ லென்ஸ்கள் (optical imaging micro lenses) இந்த டிவியில் உள்ளதால் தெளிவான படங்களைப் பார்க்க முடியும். மேலும் டிசிஎல் டி7கே டிவியில் 16 மில்லியன்: டைனமிக் கான்ட்ராஸ்ட் ரேஷியோ (16 million:1 dynamic contrast ratio) வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த டிவி மினி தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும் என்றே கூறலாம்.

பிரமாண்டமான டிவியை அறிமுகம் செய்த TCL.. என்ன விலை?

குவாண்டம் டாட் ப்ரோ 2024 டெக்னாலஜி ஆதரவுடன் இந்த டிசிஎல் டி7கே டிவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது டிசிஐ-பி3 கலர் காமட் (DCI-P3 Color Gamut) வழங்குகிறது. சுருக்கமாக கூறவேண்டும் என்றால் இந்த டெக்னாலஜி தெளிவான வண்ணங்களை உறுதி செய்கிறது. குறிப்பாக இந்த டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது டிசிஎல் நிறுவனம்.

Linyao Chip எம்2 மற்றும் டிஎக்ஸ்ஆர் மினி எல்இடி இமேஜ் என்ஹான்ஸ்மென்ட் சிப் (TXR Mini LED image enhancement chip) ஆதரவுடன் இந்த அசத்தலான டிசிஎல் டி7கே டிவி வெளிவந்துள்ளது. இதுதவிர ஏஐ (AI) என்ஹான்ஸ்டு கலர் அட்ஜஸ்ட்மென்ட் ( (color adjustments) வசதியும் கொண்டுள்ளது இந்த டிவி.

4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான டிசிஎல் டி7கே டிவி. எனவே இந்த டிவியில் நீங்கள் நினைத்த அனைத்து ஆப்ஸ்களையும் பயன்படுத்த முடியும். மேலும் 2.1 சேனல் Hi-Fi ஆடியோ அமைப்புடன் இந்த டிவி வெளிவந்துள்ளது. அதாவது இது 70W ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த டிவி. எனவே இந்த டிவியை வாங்கும் பயனர்களுக்குச் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரமாண்டமான டிவியை அறிமுகம் செய்த TCL.. என்ன விலை?

இதுதவிர டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆரவையும் வழங்குகிறது இந்த புதிய டிசிஎல் ஸ்மார்ட் டிவி மாடல். 4எச்டிஎம்ஐ போர்ட்கள், யுஎஸ்பி போர்ட், ஆர்ஜே45, ஏவி போர்ட், ஆர்எப் இன்புட், டிஜிட்டல் ஆடியோ அவுட்புட் போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக 65-இன்ச் கொண்ட டிசிஎல் டி7கே டிவி (TCL 65T7K Mini-LED TV) ஆனது தற்போது சீனாவில் மட்டும் தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட் டிவி ஆனது இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த புதிய 65-இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை 4299 yuan (ரூ.50,551) ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
TCL 65T7K Mini-LED TV launched: check specifications, price,
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X