மீண்டும் இந்திய வலைத்தளங்களில் சைபர் தாக்குதல்.!

Written By:

இந்திய வலைத்தளங்களில் சைபர் தாக்குதல்கள் கிட்டத்தட்ட ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது, உலகநாடுகள் அனைத்தும் தற்போது அதிகமாக வலைத்தளத்தைப் பயன்படுத்துகின்றன, இருந்தபோதிலும் அனைத்து இடங்களில் குறிவைத்து சைபர் தாக்குதல்கள்அதிகமாய் நடத்தப்படுகிறது.

பிடபள்யுசி கொடுத்துள்ள ஆய்வின் படி, கடந்த நான்கு ஆண்டுகளில் இந்திய வலைத்தளங்களின் இணைய தாக்குதல்கள் கிட்டத்தட்ட ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
சைபர் பாதுகாப்பு:

சைபர் பாதுகாப்பு:

2012-13-ஆம் ஆண்டில் இந்தியாவின் சைபர் பாதுகாப்புக்கு ரூ. 42.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது மேலும் இதறக்குமுன்
2010-11ல் 35.45 கோடி ஆக இருந்தது, தற்போது 19சதவீதமாக உயர்ந்துள்ளது.

சைபர் தாக்குதல் :

சைபர் தாக்குதல் :

பொருளாதாரம், நிதியியல் துறை, முக்கிய அரசாங்க துறைகள் மற்றும் உள்கட்டமைப்பு அமைப்பு ஆகியவற்றிற்கு இடையிலான அச்சுறுத்தலாக உள்ளது இந்த சைபர் தாக்குதலால் பல்வேறு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

ரேன்சம்வேர் வைரஸ்:

ரேன்சம்வேர் வைரஸ்:

ஒரே நாளில் 150 நாடுகளில் உள்ள 2 லட்சம் கம்ப்யூட்டர்களை ரேன்சம்வேர் வைரஸ் முடக்கியுள்ளது.அதிலும் குறிப்பாக பள்ளிகள், கடைகள், மருத்துவமனைகள், இ-மெயில், நிறுவனங்கள் ஆகியவற்றில் உள்ள கம்ப்யூட்டர்களை குறி வைத்து இந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கல்வி நிறுவனங்கள்:

கல்வி நிறுவனங்கள்:

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இந்த சைபர் தாக்குதலால் அதிகம் பாதிக் கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதே போன்று,ரயில்வே நிலையங்கள், கேஸ் நிலையம், அலுவலகங்கள், ஷாப்பிங் மால்கள், அரசு சேவைகள் ஆகியவற்றிலும் சைபர் தாக்குதல் நடக்க வாய்ப்பு உள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Cyber attacks on Indian websites have increased nearly five times ; Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot