பந்துக்கு பந்து சிக்ஸ் தான்- பிஎஸ்என்எல் நான்கு புதிய ப்ரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம்: எல்லாமே ரூ.200-க்கு கீழ்

|

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) இந்தியாவில் நான்கு புதிய பட்ஜெட் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அரசு நடத்தும் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் ரூ.200-க்கு கீழ் மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களையும் ரூ.347 விலையில் ஒரு ப்ரீபெய்ட் திட்டங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.200 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்ட அனைத்து புதிய திட்டங்களும் 28 நாட்கள் வேலிடிட்டியோடு வருகின்றன. ரூ.347 திட்டமானது 56 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இந்த திட்டங்களின் பலன்களை முழுமையாக பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ.184, ரூ.185, ரூ.186 மற்றும் ரூ.347 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.184, ரூ.185, ரூ.186 மற்றும் ரூ.347 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.184, ரூ.185, ரூ.186 மற்றும் ரூ.347 என்ற விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. ஒவ்வொரு திட்டங்களின் விவரங்களையும் முழுமையாக பார்க்கலாம். ரூ.184 ப்ரீபெய்ட் திட்டமானது தினசரி 1 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகள் ஆகிய நன்மைகளை வழங்குகிறது. அதேபோல் ரூ.185 மற்றும் ரூ.186 திட்டங்களில் தினசரி 1 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளை வழங்குகிறது. இந்த மூன்று திட்டங்களும் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. வழங்கப்பட்ட வரம்புக் கொள்கை முடிந்த பின் இந்த திட்டத்தில் இணைய வேகம் 80 கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.

திட்டங்களில் இருக்கும் வித்தியாசம்

திட்டங்களில் இருக்கும் வித்தியாசம்

ஆனால் இந்த திட்டங்களில் என்ன வித்தியாசம் இருக்கிறது என்ற கேள்வி வரலாம். அதற்கான பதில் குறித்து பார்க்கையில், ரூ.184 ப்ரீபெய்ட் திட்டத்தில் பயனர்கள் Lystn போட்காஸ்டின் கூடுதல் பலனை பெறுவார்கள். ரூ.185 ப்ரீபெய்ட் திட்டத்தில் பயனர்கள் M/S ஆன்மொபைல் குளோபல் லிமிடெட் மற்றும் BSNL ட்யூன்ஸ் வழங்கும் ப்ரோக்ரஸிவ் வெப் APP (PWA)-ன் அரீனா மொபைல் கேமிங் சேவையை இணைந்து பெறுவார்கள். அதேபோல் ரூ.186 திட்டத்தில் மேலே வழங்கப்பட்ட தொகுப்புகளுடன் கூடுதலாக ஹார்டி கேம்ஸ் மற்றும் பிஎஸ்என்எல் டியூன்களின் கூடுதல் பலன்களை பெறுவார்கள்.

ரூ.347 ப்ரீபெய்ட் திட்டம்

ரூ.347 ப்ரீபெய்ட் திட்டம்

ரூ.347 ப்ரீபெய்ட் திட்டத்தில் பயனர்கள் தினசரி 2 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளை பெறுவார்கள். இந்த திட்டம் பயனர்களுக்கு 56 நாட்கள் செல்லுபடியாகும் காலத்தை வழங்குகிறது. இந்த திட்டத்தில் M/S ஆன்மொபைல் குளோபல் லிமிடெட் வழங்கும் ப்ரோக்ரஸிவ் வெப் APP (PWA)-ன் அரீனா மொபைல் கேமிங் சேவை அணுகல் வழங்கப்படுகிறது. இந்த அனைத்து திட்டங்களிலும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள் வழங்கப்படுகின்றன.

புதிய வாடிக்கையாளர்களுக்கான சலுகைகள்

புதிய வாடிக்கையாளர்களுக்கான சலுகைகள்

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) புதிய வாடிக்கையாளர்களுக்கும் பிற தொலைத்தொடர்பு நிறுவனங்களில் இருந்து போர்ட் செய்பவர்களுக்கும் இலவச 4ஜி சிம் கார்ட்களை வழங்குகிறது. இந்த சலுகையை நிறுவனம் முதலில் அக்டோபர் 1, 2021 அன்று அறிமுகப்படுத்தியது. இந்த சலுகையானது டிசம்பர் 31 2021 அன்று முடிவடைய இருந்தது. இருப்பினும் பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த சலுகையை வாடிக்கையாளர்களுக்கு நீடித்து அறிவித்துள்ளது. இந்த சலுகையானது இந்த நிதியாண்டு இறதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இந்த இலவச சிம் கார்டு சலுகை மார்ச் 31 வரை கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

'#SwitchtoBSNL' என்ற பிரச்சாரம்

'#SwitchtoBSNL' என்ற பிரச்சாரம்

புதிய பிஎஸ்என்எல் சிம் கார்டை இலவசமாக பெற விரும்பினால், முதலில் சிம் கார்டு வாங்கும் போது ரூ.100-க்கு மேல் ரீசார்ஜ் திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும். பிஎஸ்என்எல் 4ஜி சிம் கார்டு இயக்க ரீசார்ஜ் கட்டணத்தை செலுத்தினால் போதும். பிஎஸ்என்எல் 5ஜிபி டேட்டா மட்டுமின்றி இலவச சிம்கார்டையும வழங்குகிறது. பிஎஸ்என்எல் தனது நெட்வொர்க்கிற்கு போர்ட் செய்யும் வாடிக்கையாளர்களுக்காக '#SwitchtoBSNL' என்ற பிரச்சாரத்தை நடத்தி வருகிறது.

போட்டிப்போட்டுக் கொண்டு சலுகைகள்

போட்டிப்போட்டுக் கொண்டு சலுகைகள்

தொலைத் தொடர்பு நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு அறிவித்து வருகிறது. இதில் பிஎஸ்என்எல் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களை அதிகரிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. அதன்படி தற்போது பிஎஸ்என்எல் இலவச சிம்கார்ட்களை வழங்கி வருகிறது. பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) பயனர்களுக்கு புதிய சந்தா திட்டங்கள், அற்புதமான புதிய ஒப்பந்தங்கள் மற்றும் சலுகைகளை அறிமுகம் செய்த வண்ணமாக இருக்கிறது. மக்களின் கவனத்தை ஈர்க்கும் முயற்சியாக, நிறுவனம் இலவச சிம் கார்டு வழங்கி வருகிறது. இந்த இலவச சலுகை நிச்சயமாக, விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

புதிய விளம்பர சலுகை

புதிய விளம்பர சலுகை

அரசாங்கத்திற்குச் சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனம் ஒவ்வொரு புதிய சிம் கார்டுக்கு ரூ.20 வசூலிக்கிறது. தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களைப் போலவே, பிஎஸ்என்எல் நிறுவனமும் சிம் கார்டிற்கு கட்டணம் வசூலிக்கிறது. ஆனால், புதிய விளம்பர சலுகையாக, பயனர் குறைந்தபட்சம் ரூ.100 முதல் ரீசார்ஜ் (எஃப்.ஆர்.சி) செய்யும்போது சிம் கார்டை இலவசமாக வாங்கிக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. பிஎஸ்என்எல் இலவச சிம் கார்டு சலுகையைப் பெற, வாடிக்கையாளர்கள் அருகிலுள்ள பிஎஸ்என்எல் சில்லறை கடைக்கும் செல்லலாம். அங்கு, வாடிக்கையாளர்கள் சிம் கார்டுடன் இணைப்பைப் பெறலாம், மேலும் சலுகையின் ஒரு பகுதியாக கட்டாயமாக இருக்கும் ரூ.100-க்கு எஃப்.ஆர்.சி. செய்ய வேண்டும். பிஎஸ்என்எல் பல்வேறு வகையான எஃப்ஆர்சி திட்டங்களைக் கொண்டுள்ளது, அவற்றை நீங்கள் இணைப்பைத் தேர்ந்தெடுக்கும் நேரத்தில் பெறலாம்.

4ஜி சேவையில் இருந்து 5ஜி சேவை

4ஜி சேவையில் இருந்து 5ஜி சேவை

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு சலுகைகளை அறிவித்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 4ஜி சேவையில் இருந்து 5ஜி சேவையை வழங்க ஆயத்தமாகி வரும் நேரத்தில், அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் 4ஜி சேவையை முற்றிலும் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது. பிஎஸ்என்எல் நிறுவனம் எப்போது 4ஜி சேவையை தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வருகிறது.

Best Mobiles in India

English summary
BSNL Launched Four New Prepaid plan at Budget Price: Maximum Recharge Plans at under Rs.200

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X