Home
News

இதுக்கு மேல என்ன வேணும்? கம்மி விலையில் தினமும் 3ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்.. அசத்தும் BSNL..

ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்குப் போட்டியாக பிஎஸ்என்எல் நிறுவனம் பல்வேறு புதிய முயற்சிகளைச் செயல்படுத்தி வருகிறது. அதாவது இந்நிறுவனம் கூடிய விரைவில் 4ஜி சேவை அறிமுகம் செய்ய உள்ளது. மேலும் அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் அணுக பிஎஸ்என்எல் செல்ப்கேர் ஆப் எனப் பல மாற்றங்களைச் செய்து வருகிறது.

குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு புதிய முயற்சிகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அதேபோல் இந்நிறுவனத்தின் 4ஜி சேவை நாடு முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது கம்மி பட்ஜெட்டில் அதிக நாள் வேலிடிட்டி மற்றும் அதிக டேட்டா தரும் 4 ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது பிஎஸ்என்எல். இப்போது அந்த ப்ரீபெய்ட் திட்டங்களை இங்கே பார்க்கலாம்.

இதுக்கு மேல என்ன வேணும்?  தினமும் 3ஜிபி டேட்டா.. அசத்தும் BSNL..

பிஎஸ்என்எல் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டத்தில் (bsnl rs 485 plan) தினமும் 1.5ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 82 நாட்கள் ஆகும். நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 123ஜிபி டேட்டா கிடைக்கும். இதுதவிர பல்வேறு சலுகைகள் வழங்குகிறது இந்த திட்டம்.

அதாவது வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கின்றன. அதேபோல் இந்த பிஎஸ்என்எல் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40kbps ஆக குறையும்.

பிஎஸ்என்எல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம் (bsnl rs 499 plan) ஆனது தினசரி 2ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 75 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த பிஎஸ்என்எல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 150ஜிபி டேட்டாவை பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ், பிஎஸ்என்எல் ட்யூன்ஸ், கேமிங் சேவைகள் போன்ற பல சிறப்பான நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளன. குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டத்தில் திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40kbps ஆக குறையும்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் (bsnl rs 599 plan) ஆனது தினமும் 3ஜிபி டேட்டா வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். நீங்கள் இந்த ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 252ஜிபி டேட்டா கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பல்வேறு நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

அதாவது பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது ஜி ஜிங்க் (Zing) பிஆர்பிடி (PRBT) மற்றும் ஆஸ்ட்ரோடெல் (Astrotell) ஆகியவற்றின் சப்ஸ்கிரிப்ஷன் வழங்குகிறது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுக்கு மேல என்ன வேணும்?  தினமும் 3ஜிபி டேட்டா.. அசத்தும் BSNL..

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.799 ப்ரீபெய்ட் திட்டம் (bsnl rs 799 plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். நீங்கள் இந்த ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 168ஜிபி டேட்டா கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பல்வேறு நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

அதாவது பிஎஸ்என்எல் ரூ.799 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது ஜி ஜிங்க் (Zing) பிஆர்பிடி (PRBT) மற்றும் ஆஸ்ட்ரோடெல் (Astrotell) ஆகியவற்றின் சப்ஸ்கிரிப்ஷன் வழங்குகிறது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL offers four prepaid plans with longer validity and more data: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X