அமேசான் வேலை வாய்ப்பு: 1 லட்சம் பருவகால ஊழியர்கள் பணியமர்த்த திட்டம்!

|

அமேசான் விடுமுறை கால ஷாப்பிங் நெரிசலை தவிர்க்க 1 லட்சம் பருவகால ஊழியர்களை பணி அமர்த்த முடிவு செய்துள்ளது. அமேசான் தங்களது வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அம்சம்

வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அம்சம்

அமேசான் வலைதளத்தை உலகம் முழுவதும் அதிகளவு மக்கள் பயன்படுத்துகின்றனர், குறிப்பாக அனைத்துப் பொருட்களும் இந்த தளங்களில் எளிமையாக கிடைப்பதால் பொதுமக்கள் இதை அதிகளவு பயன்படுத்துகின்றனர். மேலும் அமேசான் நிறுவனம் வாடிக்கையாளர்களின் சௌகரியத்திற்கு அதிக அம்சங்களை அறிமுகம் செய்து வருகின்றன.

வேகமாக வளரும் ஆன்லைன் வணிகம்

வேகமாக வளரும் ஆன்லைன் வணிகம்

குறிப்பாக தற்போதைய காலக்கட்டத்தில் ஆன்லைன் நிறுவன வணிகம் சற்று வேகமாக வளர்ந்து வருகிறது. ஆன்லைன் வர்த்தக நிறுவனம் கடந்த ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் சாதனை அளவிலான வருவாய் ஈட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது மக்கள் அனைத்து விதமான பொருட்களையும் ஆன்லைனில் வாங்கவே விரும்புகின்றனர்.

ஆன்லைன் விற்பனை அதிகரிப்பு

ஆன்லைன் விற்பனை அதிகரிப்பு

கொரோனா பரவல் தொடங்கிய காலம்முதல் பொதுமக்கள் வெளியே சென்று ஷாப்பிங் செய்வதை குறைத்து வருகின்றனர். இதன் காரணமாக ஆன்லைன் விற்பனை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ள நிலையில், இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் 1 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை அறிவித்துள்ளது.

முன்னணி ஆன்லைன் டெலிவரி நிறுவனம்

முன்னணி ஆன்லைன் டெலிவரி நிறுவனம்

உலகளவில் இரண்டாவது மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் முன்னணி ஆன்லைன் டெலிவரி நிறுவனமாக இருப்பது அமேசான், பிளிப்கார்ட் ஆகும். சமீபத்திய அறிமுகமாக ரிலையன்ஸ் நிறுவனம் ஆன்லைன் ஷாப்பிங் தளமான ரிலையன்ஸ் டிஜிட்டலை அறிமுகம் செய்து நேரடி போட்டியில் இறங்கியுள்ளது.

வெறும் ரூ.3,597-க்கு மூன்று கேமரா,18W சார்ஜிங் கொண்ட ஒப்போ ஏ33: பிளிப்கார்ட் தீபாவளி விற்பனை!வெறும் ரூ.3,597-க்கு மூன்று கேமரா,18W சார்ஜிங் கொண்ட ஒப்போ ஏ33: பிளிப்கார்ட் தீபாவளி விற்பனை!

விடுமுறை கால ஷாப்பிங் நெரிசலை தவிர்க்க நடவடிக்கை

விடுமுறை கால ஷாப்பிங் நெரிசலை தவிர்க்க நடவடிக்கை

பண்டிகை தின விற்பனையை ஆன்லைன் நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு அறிவித்து வருகின்றன. இந்த நிலையில் விடுமுறை கால ஷாப்பிங் நெரிசலை தவிர்க்க அமேசான் நிறுவனம் 1 லட்சம் பேரை பருவகால ஊழியர்களாக வேலைக்கு அமர்த்த முடிவு செய்துள்ளது.

கடந்தாண்டு 2 லட்சம் பருவகால ஊழியர்கள்

கடந்தாண்டு 2 லட்சம் பருவகால ஊழியர்கள்

கடந்தாண்டு அமேசான் நான்காவது காலாண்டில் ஆர்டர் நெரிசலை கையாள 2 லட்சம் பருவகால ஊழியர்களை பணியில் அமர்த்தியது. இருப்பினும் தொற்று நோய் காரணமாக கடந்த ஆண்டைவிட குறைந்த அளவிலான ஊழியர்களை பணியமர்த்த முடிவு செய்துள்ளது.

1 லட்சம் பருவ கால ஊழியர்கள்

1 லட்சம் பருவ கால ஊழியர்கள்

கொரோனா காரணாக ஏராளமானோர் வீட்டிலேயே இருப்பதால் விடுமுறை காலம் போன்ற தற்போது அதிக விற்பனையை அமேசான் செய்து வருகிறது. இதன்காரணாக கடந்த மார்ச் மாதத்தில் ஒரு லட்சத்து 75000 தொழிலாளர்களை பணியில் அமர்த்தியது. தற்போது 1 லட்சம் பேரை பருவ கால ஊழியர்களாக பணியமர்த்த முடிவு செய்துள்ளது.

35,000 ஊழியர்களுக்கு பணியுயர்வு

35,000 ஊழியர்களுக்கு பணியுயர்வு

பருவகால பணியமர்த்தல் குறித்து அமேசான் ஒரு வலைப்பதிவு இடுகையில் தெரிவித்தது. அதோடு இந்தாண்டு செயல்பாட்டுக் குழுவில் உள்ள சுமார் 35,000 ஊழியர்களுக்கு பணியுயர்வு வழங்குவதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தது.

source: cnbc.com

Best Mobiles in India

English summary
Amazon is Looking to Hire 1 Lakh Seasonal Staff For Holiday Season

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X