ஆதார் பான் இணைப்பு காலக்கெடு நீட்டிப்பு: நீங்கள் இணைத்துவிட்டீர்களா என்பதை எப்படி அறிவது?

|

வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள், ஆதார் எண்ணை, பான் எண்ணோடு இணைக்காவிட்டால், பான் கார்டு செயலற்றதாகி விடுவதோடு மட்டுமல்லாது, வருமானவரி கணக்கு தாக்கல் உள்ளிட்ட நிகழ்வுகளை செய்ய முடியாத நிலை ஏற்படும் என்று வரி ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

வருமான வரி சட்டப்பிரிவு

வருமான வரி சட்டப்பிரிவு

வருமான வரி சட்டப்பிரிவு 139 AA (2)-யின் அடிப்படையில் ஜூலை 1, 2017 அன்று முதல் 10 இலக்க எண் கொண்ட பான் எண் வைத்திருப்போர் நிச்சயமாக ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பது அவசியம் என வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

முன்னதாக டிசம்பர் 31 கால அவகாசம்

முன்னதாக டிசம்பர் 31 கால அவகாசம்

பணப்பரிவர்த்தனைகள் அனைத்தும் பான் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதால், ஆதார் எண்ணை, பான் எண்ணோடு இணைப்பதற்கு இதற்குமுன் இருமுறை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு விலக்கிக்கொள்ளப்பட்டது. இந்நிலையில், அடுத்தப்படியாக டிசம்பர் 31ம் தேதி, இறுதி காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது. இந்த அவகாசத்திற்குள் இணைக்காவிட்டால், பான் கார்டு செயலற்றதாகிவிடும் என்று வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மார்ச் 31 ஆம் தேதிவரை காலக்கெடு நீட்டிப்பு

மார்ச் 31 ஆம் தேதிவரை காலக்கெடு நீட்டிப்பு

இந்த நிலையில் ஆதாருடன், பான் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் வரும் மார்ச் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்கம்டேக்ஸ் இந்தியா பைலிங் என்ற இணையதளத்திற்கு சென்று அல்லது புதிவு செய்யப்பட்ட மொபைல் போனில் இருந்து 567678 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலமும் இணைக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைத்துவிட்டோமா என்பதை எப்படி அறிவது

இணைத்துவிட்டோமா என்பதை எப்படி அறிவது

ஆதார் எண்ணை, பான் எண்ணோடு இணைக்க இதற்குமுன் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், நாம் இணைத்திருப்போம் அல்லது இணைக்க மறந்திருப்போம். நாம் இணைத்துவிட்டோமா இல்லையா என்பதை பரிசோதிக்க, ஆதார் எண், பான் எண் போன்றவற்றை நினைவில் இருந்தால் உடனேயேயும், அல்லது அந்த எண்களை தெரிந்துகொண்டு www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று சரிபார்க்கலாம்.

வாட்ஸ் ஆப் 2020: ஸ்டேட்டஸ்-ல் விளம்பரம், வாட்ஸ் ஆப் ஆன்லைன் பேமெண்ட்- இன்னும் என்னென்ன தெரியுமா?வாட்ஸ் ஆப் 2020: ஸ்டேட்டஸ்-ல் விளம்பரம், வாட்ஸ் ஆப் ஆன்லைன் பேமெண்ட்- இன்னும் என்னென்ன தெரியுமா?

இணைப்பதற்கான வழி

இணைப்பதற்கான வழி

இதுவரை பான் எண்ணுடன் ஆதாரை இணைக்காதவர்கள் https://www1.incometaxindiaefiling.gov.in/e-FilingGS/Services/LinkAadhaarHome.html?lang=eng என்ற இணையதளத்தில் சென்று இணைக்கலாம். இதற்காக ஆவணங்கள் எதுவும் தனியாக தேவையில்லை. ஆதார் எண் மற்றும் பான் கார்டு எண் மட்டும் இருந்ததால் போதும். இந்த இரண்டு எண்களையும் கொடுத்த பிறகு ஆதாரில் உள்ளது போலவே உங்களின் பெயரை பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு கேப்சா எனப்படும் குறியீடு அல்லது ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் ரகசிய எண்ணை (OTP)கொடுத்து ஆதார் பான் கார்டை இணைக்கலாம்.

Best Mobiles in India

English summary
Aadhar and pan card link deadline extended

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X