Subscribe to Gizbot

18.4-இன்ச் க்யூஎச்டி டிஸ்பிளே கொண்ட நோக்கியா டேப்ளெட் - லீக்ஸ் தகவல்.!

Written By:

ஆடம்பரம் மற்றும் ஆர்ப்பாட்டம் ஏதுமில்லாமல் மெல்ல மெல்ல சந்தைக்குள் நுழைந்துக் கொண்டிருக்கும் நோக்கியா நிறுவனத்தின் செயல்பாடுகளானது அதனை நிச்சயம் வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லும் நோக்கத்தோடு ஒவ்வொரு அடியாக நகர்வதை காட்டுகிறது. அதற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டு தான் சமீபத்தில் வெளியாகி ஸ்மார்ட்போன் சந்தையின் அனைத்து சாதனைகளையும் நொறுக்கி தள்ளிக் கொண்டிருக்கும் நோக்கியா 6 ஆண்ட்ராய்டு கருவியே சாட்சியாகும்.

நோக்கியா 6 கருவியை தொடர்ந்து அடுத்த என்ன நோக்கியா ஆண்ட்ராய்டு கருவி வெளியாகும் என்று அனைவரும் யூகித்துக்கொண்டிருக்கும் வேளையில் நோக்கியா நிறுவனம் எச்எம்டி நிறுவனத்துடன் இணைந்து ஆண்ட்ராய்டு கருவிகளை மட்டுமின்றி டேப்ளெட்களையும் உருவாக்குகிறது என்ற இன்ப அதிர்ச்சி ஒன்றை லீக்ஸ் தகவல் ஒன்று அளித்துள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
புதிய பிளாக்ஷிப் டேப்ளெட்

புதிய பிளாக்ஷிப் டேப்ளெட்

இந்த ஆண்டின் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் (MWC 2017) நோக்கியா ரசிகர்கள் சுவாரஸ்யமான ஒன்றாக இருக்கும் என்று தெரிகிறது. நிறுவனம் ஏற்கனவே சீனாவில் அதாஹ்ன் நோக்கியா 6 ஸ்மார்ட்போனை முன்னெடுத்துள்ளது மற்றும் எம்டபுள்யூசி 2017 தொழில்நுட்ப நிகழ்ச்சியின் போது நோக்கியா பி1 என்ற அதன் தலைமை சாதனம் உட்பட மேலும் பல சாதனங்களை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் ஒரு புதிய பிளாக்ஷிப் டேப்ளெட் ஒன்றையும் அறிமுகம் செய்யும் என்பது போல் தெரிகிறது.

ஜிஎப்எக்ஸ்பென்ஞ்

ஜிஎப்எக்ஸ்பென்ஞ்

லீக்ஸ் தகவலின்படி, நோக்கியாவின் ஒரு புதிய பெயரிடப்படாத டேப்ளெட் ஒன்று ஜிஎப்எக்ஸ்பெஞ்சில் (வெளிவரப்போகும் மொபைல் மற்றும் டெஸ்க்டாப்களின் செயல்திறன், மற்றும் அதன் முக்கியமான அம்சங்கள் ஆகியவைகளை வெளிப்படுத்தும் ஒரு தளம்) கண்டுள்ளதாக தெரிவிக்கிறது.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

லீக்ஸ் தகவலின் படி இந்த நோக்கியா டேப்ளெட் சாதனத்தின் சில மேலோட்டமான அம்சங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அதாவது இந்த் டேப்ளெட் 2560x1440 பிக்சல்கள் திரை தீர்மானம் கொண்ட ஒரு அபாரமான 18.4 அங்குல குவாட்எச்டி டிஸ்ப்ளே கொண்டு வெளிவரும் என்று கூறப்படுகிறது.

சேமிப்பு

சேமிப்பு

உடன் இந்த சாதனம் அட்ரெனோ 540 ஜிபியூ இணைந்த சமீபத்திய க்வால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் மூலம் இயக்கப்படும், மேலும் 4ஜிபி ரேம் 64ஜிபி உள்ளடக்க சேமிப்பு கொண்டிருக்கும் என்று விவரிக்கப்பட்டுள்ளது ஆனால் விரிவாக்கத்தக்க சேமிப்பு ஆதரவு பற்றிய எந்த குறிப்பும் இல்லை.

கேமரா

கேமரா

கேமரா துறையை பொருத்தமட்டில் 4கே பதிவு ஆதரவு கொண்ட ஒரு 12 மெகாபிக்சல் பின்புற கேமிரா மற்றும் முன்பக்க கேமரா கொண்டிருக்கும் உடன் இது சமீபத்திய ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் ,மூலம் இயங்கும். இக்கருவியின் பேட்டரி திறன் பற்றிய எந்த குறிப்பும் இல்லை.

இணைப்பு வசதி

இணைப்பு வசதி

இணைப்பு வசதிகளை பொருத்தமட்டில் ப்ளூடூத், திசைகாட்டி, காற்றழுத்த மானி, சுழல் காட்டி ஒளி உணரி, என்எப்சி (அருகாமை தகவல்தொடர்பு), பிடோமீட்டர் மற்றும் வைஃபை போன்றவைகளை ஆதரிக்கிறது.

எச்எம்டி க்ளோபல் நிறுவனம்

எச்எம்டி க்ளோபல் நிறுவனம்

இதன் மூலம் எச்எம்டி க்ளோபல் நிறுவனம் எதிர்காலத்தில் நோக்கியா முத்திரை சார்ந்த டேப்ளெட்களையும் கையாளும் என்பது அறியப்படுகிறது. ஒருபக்கம் இது பற்றிய எந்த உத்தியோகபூர்வ வார்த்தையம் இல்லை என்றாலும் கூட மறுபக்கம் 2017 வர்த்தக நிகழ்ச்சியின் போது, நோக்கியா ஒரு புதிய டேப்ளெட்டை அறிவிக்கும் என்ற ஆர்வம் காட்டுத்தீயாய் கிளம்பியுள்ளது.

சரியான போட்டி

சரியான போட்டி

இந்த அம்சங்களை எல்லாம் பார்க்கும் போது இந்த நோக்கிய டேப்ளெட் ஆனது ஆப்பிள் ஐபாட் புரோ மற்றும் மைக்ரோசாப்ட் சர்பேஸ் ப்ரோ 4 ஆகிய கருவிகளுக்கு சரியான போட்டியாக களம் காணும் என்று எதிர்பார்க்கப்படும் அதேவேளையில் இது லீக்ஸ் தகவல்கள் தன ஆக ஒரு தெளிவான, அதிகாரப்பூர்வமான அறிவிப்பை பெற நம் சற்று காத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

ஸ்னாப்டிராகன் 835, 6ஜிபி ரேம் உடன், அடுத்தது நோக்கியா பி1 தான்.?

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
A new Nokia tablet with 18.4-inch QHD display, Snapdragon 835 SoC spotted. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot