Voter ID உடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி? அலைச்சல் வேணாம் மொபைலே போதும்..

|

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு எளிய வழிமுறைகள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. வாக்காளர் பட்டியலில் உள்ள குறைபாடுகளை சரி செய்யவும் அதில் உள்ள குழப்பங்களை நிவர்த்தி செய்யவும் இந்திய தேர்தல் ஆணையும் இந்த பணியை தொடங்கி இருக்கிறது.

வாக்காளர் அடையாள அட்டை ஆதார் இணைப்பு

வாக்காளர் அடையாள அட்டை ஆதார் இணைப்பு

வாக்காளர் அடையாள அட்டை உடன் ஆதார் அட்டையை இணைப்பதன் மற்றொரு நோக்கம் ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் அல்லது ஒரே தொகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை பதிவு செய்திருந்தால் அடையாளம் காண்பதே ஆகும்.

நீதிமன்ற உத்தரவு இருப்பதால் ஆதார் இணைப்பு கட்டாயம் என குறிப்பிடவில்லை. இருப்பினும் இதில் என்ன பிரச்சனை இருக்கு அதையும் செய்துவிடுவோம் என பலரும் ஆர்வமாக இருக்கின்றனர்.

மொபைல் மூலமாகவே எளிதாக செய்யலாம்

மொபைல் மூலமாகவே எளிதாக செய்யலாம்

ஆதார் அட்டையுடன் வாக்காளர் அடையாளர் அட்டையை இணைப்பதற்கான பணி ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் தொடங்கியது. வீட்டில் இருந்தபடியே வோட்டர் ஐடி உடன் ஆதார் அட்டையை இணைக்கும் பணியை மேற்கொள்ளலாம். இதற்கு தேர்தல் ஆணையம் 6பி என்ற படிவத்தை அறிமுகம் செய்திருக்கிறது.

இந்த இணைப்பை மேற்கொள்வதற்கு இ-சேவா மையம் தேடி அலைய தேவையில்லை. உங்கள் மொபைல் மூலமாகவே எளிதாக இந்த பணியை மேற்கொள்ளலாம்.

ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்

ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்

உங்கள் மொபைலில் ஒரே ஒரு ஆப் டவுன்லோட் செய்து எளிதாக வோட்டர் ஐடியை ஆதார் கார்ட் உடன் இணைக்கலாம். இதில் கவனிக்கத்தக்க ஒரு விஷயம் இருக்கிறது.

ஆதார் அட்டையில் எந்த ஒரு பணியை மேற்கொண்டாலும் அதற்கு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் என்பது மிக கட்டாயம்.

வாக்காளர் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பதற்கான வழிமுறைகளை பார்க்கலாம்.

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் கார்ட்டை இணைப்பது எப்படி?

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் கார்ட்டை இணைப்பது எப்படி?

கூகுள் ப்ளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் Voter Helpline என்ற செயலியை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்யவும்.

பின் Voter Helpline செயலியை ஓபன் செய்து I Agree என்ற ஆப்ஷனை கிளிக் செய்து Next என்ற விருப்பத்தை தேர்வு செய்து கொள்ளவும்.

ஆதார் உடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்

அதில் Voter Registration என்ற தேர்வை கிளிக் செய்து கொண்டு பின் Electoral Authentication Form என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.

Let's Start என்ற விருப்பத்தை தேர்வு செய்து கொள்ளவும். பின் உங்கள் மொபைல் எண்ணை பதிவிடவும். குறிப்பு: ஆதார் உடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை பதிவிடவும்.

சரியாக பதிவிட்டு வெரிஃபை என்ற விருப்பம்

நீங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP எண் அனுப்பப்படும். அதை சரியாக பதிவிட்டு வெரிஃபை என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்.

பின், வாக்காளர் அடையாள அட்டை இருக்கிறது என்ற விருப்பத்தை தேர்ந்தெடுத்து கொள்ளவும். தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டை எண்ணை உள்ளிட வேண்டும்.

உங்கள் மாநிலத்தின் பெயர்

பின் உங்கள் மாநிலத்தை தேர்வு செய்து கொண்டு Fetch details என்பதை கிளிக் செய்து கொள்ளவும். தொடர்ந்து Proceed என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.

திரையில் காட்டப்படும் உங்கள் விவரங்களை சரிபார்த்துக் கொண்டு Next என்பதை கிளிக் செய்து கொள்ளவும்.

6B என்ற படிவும்

இப்போது உங்கள் ஆதார் எண், மொபைல் எண், விண்ணப்பிக்கும் இடம் ஆகியவற்றை உள்ளிட்டு பின் Done என்பதை கிளிக் செய்து கொள்ளவும்.

Done என்ற விருப்பத்தை தேர்ந்தெடுத்த உடன் உங்கள் திரையில் 6B படிவம் ஓபன் ஆகும். அதில் காட்டப்படும் அனைத்து விவரங்களையும் மீண்டும் ஒருமுறை சரிபார்த்து Confirm என்ற விருப்பத்தை தேர்வு செய்து கொள்ளவும்.

Best Mobiles in India

English summary
How to Link Voter ID Card and Aadhaar Card through Mobile? You can do it easily

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X