வீட்டுக்கே ATM சேவை.. இனி வாசலுக்கு பணம் வரும்.. ஆதார் கார்டுல "இதை" செய்யுங்க.. வங்கி வழங்கும் புது சேவை!
ஏடிஎம் தேடி அலைந்து திரிந்து, அப்படி அதை கண்டுபிடித்தும் மெஷினில் பணம் இல்லையென்றால் கடுப்பாகி வங்கிகளை திட்டும் சூழலில், இனி வீட்டுக்கே வந்து ஏடிஎம் பணம் கொடுக்கப்படும் என்று சொன்னால், நம்ப முடிகிறதா? அப்படியான சேவை ஆதார் கார்டு உதவியுடன் வழங்கப்படுகிறது.
என்னதான், கூகுள் பே, போன்பே, பேடிஎம் என்று மக்கள் மாறினாலும், கையில் காசு இருந்தால்தான், அவசரத்துக்கு பயன்படுகிறது. இதனாலேயே, ஏடிஎம் (ATM) சேவைகள் இன்றளவும் அப்படியே இருக்கின்றன. ஆனால், அதிலும் கூட பல்வேறு நடைமுறை சிக்கல்களை பார்க்க முடிகிறது. இதில் பலருக்கும் அனுபவம் இருக்கும்.

நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் உடைய ஏடிஎம் உங்களது வீட்டுக்கு அருகில் இருக்காது, சரி மற்ற ஏடிஎம்களில் பணம் எடுக்க செல்லலாம் என்றால் பல நாட்களில் அதில் பணம் இருக்காது, அப்படியே பணம் இருந்தாலும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பணத்தை எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுவிடும்.
இப்படி ஏதாவதொரு சூழலை பலரும் கட்டாயம் எதிர்கொண்டிருப்பார்கள். இவர்களிடம், ஏடிஎம் பணம் வீட்டுக்கே வரும் என்று சொன்னால், நம்புவதா வேண்டாமா என்றே தோன்றும். ஆனால், அந்த சேவையை இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி (India Post Payments Bank) வழங்குகிறது.
அவசரமாக பணம் தேவைப்படும் நேரத்தில், வங்கிக்கு செல்ல முடியாத சூழல் ஏற்படும்போது, ஆதார் எனாபில்ட் பேமெண்ட் சிஸ்டம் (Aadhaar Enabled Payment System) மூலம் வழங்கப்படும் இந்த ஆதார் ஏடிஎம் (AePS) சேவையை பயன்படுத்தலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே பணத்தை பெற்று கொள்ளலாம்.
இந்த பணத்தை தபால்காரர் அல்லது கிராமின் டக் சேவக் (Gramin Dak Sevak) பணியாளர் உங்களது வீட்டின் வாசலுக்கே வந்து கொடுப்பார்கள். இதற்கு ஆதார் கார்டு உங்களுக்கு வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டிருக்க (Aadhaar Linked Bank Account) வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே ஆதார் ஏடிஎம் சேவையை பெற முடியும்.
ஆதார் ஏடிஎம் சேவை என்றால் என்ன? வங்கி வாடிக்கையாளர்கள், தங்களது ஆதார் கார்டை அடையாளமாக பயன்படுத்தி ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கை பயன்படுத்துதல், இருப்பு தொகையை அறிதல், பணம் எடுத்தல், பணத்தை போடுதல் போன்றவற்றுக்கு இந்த ஆதார் ஏடிஎம் சேவை வழங்கப்படுகிறது.
இந்த சேவையை எப்படி பெறுவது? ஆதார் ஏடிஎம் சேவை பெற வேண்டுமானால், உங்களது வங்கி கணக்கு இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இதை ஐபிபிபி (IPPB) இணைய தளத்தை அணுகி செய்து கொள்ளலாம். அதேபோல ஆதார் கார்டு, வங்கி கணக்கு மற்றும் மொபைல் நம்பர் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
பயோமெட்ரிக் அங்கீகாரம் மூலம் பணம் வழங்கப்படுகிறது. ஆகவே, வீட்டில் இருந்து பணத்தை பெறும் போது பயோமெட்ரிக் சரிபார்ப்பு (Biometric Verification) இருக்கும். ஆகவே, நீங்கள் இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் ஆதார் சேவைக்கு விண்ணப்பித்து இணைய தளம் மூலமே ஆதார் ஏடிஎம் சேவையை பெற்று கொள்ளலாம்.
இந்த சேவை மூலமாக அதிகபட்சமாக ரூ.10000 எடுத்து கொள்ள என்பிசிஐ (NPCI) அனுமதி வழங்கி இருக்கிறது. இப்படி வீட்டுக்கே கொண்டு வந்து கொடுக்கப்படும் பணத்துக்கு கட்டணம் எப்படி இருக்கும்? வங்கி கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும் இது பொருந்துமா? உள்ளிட்ட விவரங்களுக்கு இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க் தளத்தை அனுகவும்.


Click it and Unblock the Notifications








