UPI கெடு முடிந்தது.. Paytm யூசர்கள் உடனே இதை பண்ணுங்க.. NPCI கொடுத்த அப்ரூவல்.. இனி எஸ்பிஐ, எச்டிஎப்சிதான்!
பேடிஎம் (Paytm) யூசர்களின் பழைய யுபிஐ ஐடிகளை (UPI ID) ஒட்டுமொத்தமாக மாற்றுவதற்கான அப்ரூவலை நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவானது (National Payments Corporation of India - NPCI) கொடுத்துள்ளது. இந்த அப்ரூவல் காரணமாக யூசர்களுக்கு என்னென்ன வரப்போகிறது?
ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா (Reserve Bank of India - RBI) விதித்த கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக பேடிஎம் பேமெண்ட் பேங்க் (Paytm Payments Bank) சேவைகள் நிறுத்தப்பட்டன. இந்த கட்டுப்பாடுகளை தொடர்ந்து, மூன்றாம் தரப்பு ஆப்ளிகேஷன் வழங்குநர் (Third-party Application Provider) உரிமம் பேடிஎம் நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டது.

எஸ்பிஐ (SBI), ஆக்சிஸ் வங்கி (Axis Bank), யெஸ் வங்கி (Yes Bank) மற்றும் எச்டிஎஃப்சி வங்கி (HDFC Bank) போன்றவற்றுடன் கைகோர்த்து யுபிஐ சேவைகளை வழங்க அனுமதிக்கப்பட்டது. ஆகவே, பேடிஎம் பேமண்ட்ஸ் பேங்க் (Paytm Payments Bank) மூலம் வழங்கப்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகள் அனைத்தும் மேற்கூறிய 4 வங்கிகளுக்கு மாற்றப்பட்டன.
இதனால், பேடிஎம் யூசர்கள் "அப்பாடா" என்ற மனநிலைக்கு வந்தனர். ஆனால், அவர்களை இப்போது மீண்டும் அறக்க பறக்க செய்துள்ளது, நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் புதிய அப்ரூவல். பேடிஎம் ஆப் ஓப்பன் செய்யும்போது, அனைத்து கஸ்டமர்களும் அந்த ஆப்புக்கான யுபிஐ ஐடியை (UPI) உருவாக்கி இருப்பார்கள்.
இந்த ஐடி மூலமே பணப்பரிவர்த்தனைகளை செய்து வந்திருப்பார்கள். இப்போது, அவர்களை ஒட்டு மொத்தமாக ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ஆக்சிஸ் வங்கி, எச்டிஎஃப்சி வங்கி மற்றும் யெஸ் வங்கி ஆகியவற்றின் யுபிஐ ஐடிகளுக்கு மாற்ற பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன்ஸ்-க்கு (One97 Communications) அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனால், பழைய யுபிஐ ஐடிக்களை உடனடியாக மாற்றப்படும் பேடிஎம் நிறுவனம் அறிக்கை மூலம் யூசர்களுக்கு தெரிவித்துள்ளது. ஆகவே, பேடிஎம் யூசர்கள் வரும் நாட்களில் யுபிஐ பரிவர்த்தனைகளை செய்யும்போது, மேற்கூறிய 4 வங்கிகள் வழங்கும் யுபிஐ ஐடிகளில் ஏதேனும் ஒன்றை கட்டாயம் தேர்ந்தெடுக்க வேண்டும்.
அதாவது, பேடிஎம் ஆப் மூலம் உங்களுக்கு வழங்கப்பட்ட யுபிஐ ஐடியானது, உங்களது மொபைல் நம்பருடன் @paytm என்று குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த ஐடியானது, அதே மொபைல் நம்பருடன் @ptsbi, @pthdfc, @ptaxis மற்றும் @ptyes என்று நான்கு வங்கிகளின் யுஐபி ஐடியாக மாறப்போகின்றன.
இந்த நான்கு வங்கிகளின் யுபிஐ ஐடியில் ஏதாவது, ஒன்றை பேடிஎம் கஸ்டமர்களே தேர்ந்தெடுத்து கொள்ளலாம். இதை அப்டேட் செய்து கொண்டால் மட்டுமே பேடிஎம் மூலம் இனி வரும் காலங்களில் சேவைகளை தொடர்ந்து பெற முடியும். அதேபோல பழைய யுபிஐ ஐடிக்களை வைத்து பணப்பரிவர்த்தனைகளை செய்ய முடியாது.
ஆகவே, அதை யாருக்கும் பகிராமல், புதிய யுபிஐ ஐடிக்களை வைத்து பணப்பரிவர்த்தனைகள் செய்து கொள்ள வேண்டும். இந்த மூன்றாம் தரப்பு ஆப்ளிகேஷன் வழங்குநர்கள் மூலம் பேடிஎம் நிறுவனத்துக்கு மட்டும் யுபிஐ ஐடிக்கள் வழங்கப்படவில்லை. அமேசான் பே (Amazon Pay), கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe) போன்ற பல்வேறு ஆப்களுக்கு வழங்கப்படுகிறது.
ஆகவே, பேடிஎம் யூசர்களுக்கு இந்த புதிய யுபிஐ ஐடி மாற்றத்தால், எந்தவொரு சிக்கல்களும் கிடையாது. அதே நேரத்தில் பழைய யுபிஐ ஐடிகளை யாருக்கும் பகிர்ந்து, அதன் மூலம் பணப்பரிவர்த்தனைகளை செய்து வந்தால், அவர்களிடம் புதிய யுபிஐ ஐடியை கொடுத்துவிடுவது நல்லது. இதுபோன்ற செய்திகளுக்கு எங்களை பின் தொடருங்கள்.


Click it and Unblock the Notifications








