புது ரூல்ஸ்.. அமலுக்கு வந்தது.. உடனே ஆதார்ல இதை பண்ணுங்க.. சேமிப்பு கணக்குல வெச்சாச்சு.. என்னென்ன மாறுது?
சேமிப்பு கணக்குகள் (Saving Accounts) வைத்திருக்கும் மூத்த குடிமக்கள் முதல் பிபிஎப் (PPF) கணக்கு வைத்திருக்கும் தொழிலாளர்கள் வரையில் குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த ஆவணங்களை சமர்ப்பிக்காவிட்டால், உங்களது கணக்குகள் செயலற்ற நிலைக்கு சென்றுவிடும். புதிதாக அமலுக்கு வந்த இந்த விதிகளை மறந்துடாதீங்க.
ஒட்டுமொத்த சிறு சேமிப்பு திட்டங்களுக்கும் (Small Savings Schemes) புதிய விதிகளை மத்திய நிதியமைச்சகம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இந்த விதிகள் ஏப்ரல் 3ஆம் தேதியே அமலுக்கு வந்துவிட்டன. இந்த விதிகளை பின்பற்றாத பலரது கணக்குகள் செயலற்ற நிலையில் இப்போது இருக்க வாய்ப்புள்ளது.

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (Senior Citizen Savings Scheme - SCSS), சுகன்யா சம்ரித்தி யோஜனா (Sukanya Samriddhi Yojana - SSM) மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund - PPF) ஆகியவற்றில் கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும், இந்த புதிய விதி பொருந்தும். இவர்களுக்கு ஆதார் கார்டு (Aadhaar Card) கட்டாய அடையாள சான்றாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த 2024-25 நிதியாண்டு தொடங்கியதில் இருந்து பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு புதிய விதிகளை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. வங்கி கணக்கில் தொடங்கி வருமான வரி வரையில் புதிய விதிகள் வந்துவிட்டன. இது வரி கட்டும் மக்கள் மட்டுமல்லாமல், சாமானிய மக்களின் வாழ்க்கையிலும் நேரடி மாற்றத்தை கொண்டு வந்திருக்கின்றன.
ஆனால், இப்போது வந்துள்ள சிறு சேமிப்பு திட்டங்களுக்கான புதிய விதிகள் (New Rules For Small Savings Schemes) நேரடியாக மூத்த குடிமக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்த இருக்கிறது. ஏனென்றால், இந்த விதியின்படி ஆதார் மற்றும் பான் கார்டு கட்டாய அடையாள சான்றாக எடுத்து கொள்ளப்படுகிறது. இதை கொடுக்காத கணக்குகள் செயலற்ற நிலைக்கு மாற்றப்படுகிறது.

ஆதார் கார்டை மேற்கூறிய கணக்குகளில் அப்டேட் செய்ய தவறினால், செயலில் இருக்கும் கணக்குகளும் வரும் நாட்களில் செயலற்ற நிலைக்கு செல்ல வாய்ப்புள்ளது. ஆகவே, சிறு சேமிப்பு திட்டங்களில் வைத்திருக்கும் கணக்குகளில் ஆதார் கார்டை உடனே அப்டேட் செய்து விடுங்கள். இந்த புதிய விதி என்ன சொல்கிறது
இப்போது, அமலுக்கு வந்துள்ள அரசாங்க சேமிப்பு ஊக்குவிப்பு பொது (திருத்தம்) விதிகள் 2023-இன் படி, சிறு சேமிப்பு திட்டங்களில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தங்களது ஆதார் எண்ணை கணக்கு தொடங்கிய நாளிலிருந்து ஆறு மாதங்களுக்குள் அந்த அலுவலகத்தில் கட்டாயம் வழங்கி இருக்க வேண்டும்.
இந்த காலக்கெடுவுக்குள் வழங்க தவறினால், ஆதார் எண் சமர்ப்பிக்கப்படும் வரை அவர்களது கணக்குகள் தற்காலிகமாக நிறுத்தப்படும். இதே போல புதிய கணக்கை திறக்கும் போது, பான் கார்டு (PAN Card) எண்ணை வழங்காமல் விட்டிருந்தாலும், இரண்டு மாதங்களுக்குள் வாடிக்கையாளர்கள் அலுவலகத்தில் அதை சமர்ப்பிக்க வேண்டும்.
இதை செய்ய தவறினாலும் பான் கார்டு சமர்ப்பிக்கப்படும் வரையில் அவர்களது கணக்குகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு விடும். இந்த புதிய விதிகள் கடுமையாக பின்பற்றப்படுவதால், சிக்கல்களை தவிர்க்க மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம், சுகன்யா சம்ரித்தி யோஜனா, பொது வருங்கால வைப்பு நிதி போன்ற திட்டங்களின் வாடிக்கையாளர்கள் கட்டாயம் ஆதார் மற்றும் பேன் கார்டுகளை அப்டேட் செய்துவிடுங்கள்.
ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு ஆகியவை எந்தவொரு முதலீட்டு திட்டங்களுக்கும், அனைத்து கணக்குகளுக்கும் கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால், அந்த கார்டுகளை வைத்து கொண்டுவரப்படும் புதிய விதிகளுக்கு கட்டாயம் மக்கள் மாற வேண்டி இருக்கிறது. ஆகவே, சிரமங்களை தவிர்க்க சேமிப்பு கணக்குகள் தொடங்கும்போதே இந்த ஆவணங்களை சமர்பித்துவிடுவது நல்லது.


Click it and Unblock the Notifications