ஆதார் அலெர்ட்.. மீண்டும் வந்த உத்தரவு.. எதையெல்லாம் இலவசமாக மாற்றலாம்.. இறுதி அறிவிப்பு.. உடனே கவனியுங்க..
ஆதார் அட்டை பயனர்களுக்கு மீண்டும் ஒரு முக்கிய அறிவிப்பு வெளிவந்துள்ளது. ஆதார் தகவல்களை இலவசமாக அப்டேட் செய்ய அனுமதிக்கும் இறுதி காலவரை மீண்டும் ஒரு முறை நீடிக்கப்பட்டுள்ளது. அதேபோல், எந்த தகவல்களை எல்லாம் இலவசமாக மாற்றிக்கொள்ளலாம் என்ற விபரமும் மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆதார் அட்டை பயனர்களின் தகவல்களை புதுப்பிக்கும் படி வலியுறுத்தியுள்ளது. குறிப்பாக, 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் அட்டையைப் (Aadhaar card) பெற்ற தனிநபர்கள் தங்கள் அடையாளச் சான்று (POI) மற்றும் முகவரிச் சான்று (POA) ஆவணங்களைப் புதுப்பிக்குமாறு UIDAI அறிவுறுத்துகிறது. அதேபோல், 5 மற்றும் 15 வயதிற்குள் குழந்தையின் பயோமெட்ரிக் விவரங்களை அவர்களின் ஆதார் அட்டையில் புதுப்பிப்பதும் மிக முக்கியமானது என்று கூறியுள்ளது.

15 வயதிற்கு மேல் உள்ள குழந்தைகளின் பால் ஆதார் அட்டை (Baal Aadhaar card), சாதாரண ஆதார் அட்டைக்கு மாற்றப்பட வேண்டும் என்று அறிவுரைக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் 14ம் தேதி வரை ஆதார் அட்டையில் உள்ள மாற்றங்களை புதுப்பிக்க கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல், இப்போது பொதுமக்கள் எந்தெந்த ஆதார் தகவல்களை இலவசமாக மாற்றிக்கொள்ளலாம் என்ற பட்டியலையும் UIDAI மீண்டும் வெளியிட்டுள்ளது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வெளியிட்டுள்ள தகவல் படி, எந்தெந்த தகவல்களை நாம் இப்போது இலவசமாக மாற்றி புதுப்பிக்கலாம் என்பது பார்க்கலாம்.
இலவசமாக எதையெல்லாம் மாற்றாலம்?
1. புகைப்படம்
2. பெயர்
3. முகவரி
4. பிறந்த தேதி / வயது
5. பாலினம்
6. மொபைல் எண்
7. மின்னஞ்சல் முகவரி
8. உறவு நிலை மாற்றம்
9. தகவல் பகிர்வு ஒப்புதல்
10. பயோமெட்ரிக்

போன்ற தகவலைகளை இப்போது மக்கள் இலவசமாக மாற்றிக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதில் புகைப்படம் மற்றும் பயோமெட்ரிக் தகவல்களை மாற்றம் செய்ய மக்கள் அருகில் உள்ள ஆதார் மையத்திற்கு நேரில் செல்ல வேண்டும் என்பது கட்டாயம். மற்ற ஆதார் கார்டு தகவல்களை மக்கள் ஆன்லைன் மூலமாகவும், அருகில் உள்ள ஆதார் மையம் வழியாகவும் மாற்றிக்கொள்ளலாம் என்று UIDAI கூறியுள்ளது.
ஜூன் 14, 2024 வரை ஆதார் விவரங்களை ஆன்லைனில் இலவசமாகப் புதுப்பிப்பது எப்படி?
1. myAadhaar போர்ட்டலைப் பார்வையிடவும் தெரியாதவர்கள் இந்த இணைய முகவரியை அணுகவும் uidai.gov.in/en/
2. உங்கள் ஆதார் எண் மற்றும் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட OTP ஐப் பயன்படுத்தி உள்நுழையவும்.
3. உங்கள் சுயவிவரத்தில் காட்டப்படும் உங்கள் தற்போதைய அடையாளம் மற்றும் முகவரி விவரங்களை சரிபார்க்கவும்.
4. ஏதேனும் தகவலுக்கு திருத்தம் தேவைப்பட்டால், குறிப்பிட்ட ஆவணத்தைத் (POI/POA) தேர்ந்தெடுத்து, ஸ்கேன் செய்யப்பட்ட நகலை (JPEG, PNG அல்லது PDF வடிவம், 2 MB அளவுக்கும் குறைவான சைசில் சமர்ப்பிக்கவும்.) பதிவேற்றவும்.
5. இரண்டு ஆவணங்களும் பதிவேற்றப்பட்டதும், புதுப்பித்தலுக்கான உங்கள் ஒப்புதலைச் சமர்ப்பிக்கவும்.
நீங்கள் திருத்த செய்ய விரும்பும் ஆதார் விபரங்களை இந்த செயல்முறையை பின்பற்றி ஆன்லைன் மூலம் எளிமையாக மாற்றிக்கொள்ளலாம். ஜூன் 14ம் தேதி இந்த சேவைக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு பின், UIDAI விதிக்கும் புதிய கட்டணங்களை வழங்கிய பிறகு தான் மாற்றங்களை மேற்கொள்ள முடியும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








