ஆதார் கார்டு இருக்கா? இன்னும் 2 நாள்தான்.. இல்லைன்னா கொஞ்சம் சிக்கல்தான்.. இந்த வேலையை உடனே முடிங்க..
இந்தியாவில் வங்கி கணக்கு துவங்குவது முதல் செல்போன் சிம் வாங்குவது வரை அனைத்திற்கும் ஆதார் அட்டை பயன்படுகிறது. குறிப்பாக நாட்டில் அரசு அமல்படுத்தி இருக்கும் பல்வேறு திட்டங்களின் பலன்களைப் பெறவும் ஒருவருக்கு ஆதார் அட்டை அவசியமாக இருக்கிறது.
சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது அதார் விவரங்களைத் திருத்தக் கால அவகாசம் இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளது. அதாவது இணையதளம் மூலம் இலவசமாகத் திருத்திக் கொள்வதற்கான கால அவகாசம் இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

கடந்த பத்து ஆண்டுகளில் உங்களது ஆதார் அட்டை (aadhaar card) விவரங்களை நீங்கள் புதுப்பிக்கவில்லை என்றால் இந்த மாதம்தான் அதற்கான கடைசி வாய்ப்பு. முன்பு டிசம்பர் 14 வரை ஆதார் அட்டை விவரங்களை நீங்கள் புதுப்பிக்க இலவசம் என இந்தியத் தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டது.
அதன்பின்பு இந்த அவகாசம் வரும் மார்ச் 14-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. எதற்காக இப்போது ஆதார் அட்டை புதுப்பிக்க வேண்டும் என்று உங்களுக்குக் கேள்வி வரும். அதாவது ஆதார் தொடர்பான மோசடிகளைத் தடுக்க, 10 வருடங்களாக ஆதார் வைத்திருப்பவர்களை சமீபத்திய தகவலும் விவரங்களைப் புதுப்பிக்குமாறு UIDAI வலியுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் தெரியும் அரசு சேவைகளைப் பெற ஆதார் காட்டு தான் மிகவும் முக்கியம். இந்நிலையில் ஆதார் அட்டையில் மாற்றங்களைச் செய்ய மத்திய அரசு இலவச ஆன்லைன் வசதியை ஏற்படுத்திக் கொடுத்தது. அதுவும் கடந்த 10 ஆண்டுகளாக ஆதார் கார்டை அப்டேட் செய்யாதவர்கள் விலாசம் மாறியவர்கள், ஆதார் கார்டில் தவறான விவரங்கள் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் எளிமையாக அப்டேட் செய்ய முடியும்.
இன்னும் சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் ஆதாரில் உங்களது பெயர் தவறாக இருந்தால் அல்லது வேறு விவரங்கள் தவறாக இருந்தால் ஆன்லைன் மூலம் எளிமையாக மாற்ற முடியும். இதற்கான வசதியைத் தான் தற்போது ஆதார் அமைப்பு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது என்பத குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி போன்ற தகவல்களை மாற்ற இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளன. மார்ச் 14-ஆம் தேதி வரை இந்த அனைத்து விஷயங்களையும் இலவசமாக மாற்றிக்கொள்ளலாம். இந்த தேதிக்குப் பிறகு நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும்.

அதாவது மார்ச் 15-ம் தேதி முதல் ஆதார் கார்டில் உள்ள பிழைகளைச் சரி செய்ய கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். குறிப்பாக மொபைல் நம்பர், புகைப்பட மாற்றம், பெயர் போன்ற முக்கிய அப்டேட்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். தனியார் பொது சேவை மையங்கள் மட்டுமல்லாமல், வங்கிகள், தபால் நிலையங்கள் மூலமாக நீங்கள் அப்டேட் செய்தாலும் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்க.
எப்படி அப்டேட் செய்வது? தற்போது ஆதாரை இலவசமாகப் புதுப்பிக்க https://myaadhaar.uidai.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்ல வேண்டும். இங்கு இலவச ஆதார் புதுப்பிப்புக்கு, ஆன்லைன் செயல்முறையைப் பின்பற்ற வேண்டும். ஆனால் ஆஃப்லைன் முறையில் இந்த அம்சம் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அருகில் இருக்கும் சேவை மையத்திற்குச் சென்று ஆதார் அட்டையில் மாற்றம் செய்ய விரும்பினால் கூட அதற்குக் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.


Click it and Unblock the Notifications








