ஆதார் அப்டேட் செய்ய போறீங்களா? தெரியாம கூட இந்த தவறை செய்யாதீர்கள்.. கணக்கு வைக்கும் UIDAI ஆணையம்..
இந்தியாவில் ஆதார் அட்டை என்பது மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். இதில் உள்ள தகவல்கள் மிகவும் சரியாக இருப்பது அவசியம். ஆதார் ஆணையம் இப்போது இலவசமாக ஆதார் தகவல்களை அப்டேட் செய்ய அனுமதிக்கிறது. ஆனாலும் மக்கள் சில சிக்கலில் சிக்கிவிடுகிறார்கள்.
ஆதார் அட்டை: காரணம், ஆதார் அட்டையில் உள்ள குறிப்பிட்ட சில தகவல்களை மக்கள் ஒரு முறையோ அல்லது 2 முறையோ மட்டும் தான் மாற்ற அனுமதிக்கப்படுகிறார்கள். இதனை மீறும் பட்சத்தில் சிறப்பு முறைப்படி கூடுதல் செலவுடன் அந்த தகவலை மாற்ற ஆதார் ஆணையம் அனுமதிக்கிறது. ஆதார் விபரங்களை அப்டேட் செய்ய இதற்கு முன்பு மார்ச் 14ம் தேதி இறுதி காலக்கெடுவாக அறிவிக்கப்பட்டிருந்தது.

UIDAI: தற்போது யுஐடிஏஐ (UIDAI) என்று அழைக்கப்படும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India), ஆதார் அட்டைக்கான இலவச ஆன்லைன் அப்டேட் செய்யும் காலக்கெடுவை மீண்டும் ஒரு முறை அதிகரித்துள்ளது. இதன் படி, வரும் ஜூன் 14 ஆம் தேதி வரை இறுதி காலக்கெடு நீட்டி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உஷார் மக்களே: ஆதார் அட்டையில் உள்ள பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் பிற அத்தியாவசிய விவரங்கள் உட்பட அணைத்து விபரங்களும் எப்போதும் சரியாக இருக்க வேண்டும். இந்த தகவலைகளை மாற்றி அமைக்க சில குறிப்பிட்ட எண்ணிக்கையையும் ஆதார் ஆணையம் வழங்கியுள்ளது. அதிக எண்ணிக்கையிலான மாற்றங்கள் கட்டாயம் உங்களுக்கு கூடுதல் செலவை வழிவகுக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்: சரி, ஆதார் அட்டையில் உள்ள எந்தெந்த தகவலை நாம் எத்தனை முறை மாற்றலாம் என்பதை இப்போது பார்க்கலாம். ஆதார் அட்டை வைத்துள்ள ஒவ்வொருவருக்கும் இந்த தகவல் கட்டாயம் தெரிந்திருப்பது அவசியம் என்பதை மறக்காதீர்கள்.
1. பெயர்
ஆதார் அட்டையில் உள்ள பெயர் விபரங்களை UIDAI இன் தகவல் படி, நீங்கள் அதிகபட்சமாக 2 முறை மட்டுமே மாற்றிக்கொள்ள அனுமதிக்கப்படுவீர்கள். அதாவது இரண்டு முறை மட்டுமே உங்கள் பெயர் விபரங்களை உங்களால் அப்டேட் செய்ய முடியும்.

2. பிறந்த தேதி
ஆதார் கார்டில் உள்ள பிறந்த தேதி விபரங்களை நீங்கள் ஒரே ஒரு முறை மட்டுமே மாற்றி அமைக்க அனுமதிக்கப்படுவீர்கள். அதிலும் குறிப்பாக, உங்கள் ஆதார் அட்டை வழங்கிய பொழுது குறிப்பிடப்பட்ட பிறந்த தேதி மாதத்தில் இருந்து +3 மாதங்கள் அல்லது -3 மாதங்களுக்குள் மட்டுமே மாற்ற அனுமதிக்கப்படுவீர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
3. பாலினம்
ஆதார் அட்டையில் உள்ள பாலின விபரங்களை UIDAI ஒரு முறை மட்டுமே மாற்றி அமைக்க அனுமதிக்கிறது.
4. முகவரி
உங்கள் ஆதார் அட்டையில் உள்ள முகவரியை மாற்றம் செய்ய எந்தவித குறிப்பிடத்தக்க எண்ணிக்கையும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால், எத்தனை முறை வேண்டுமானாலும் உங்கள் ஆதார் அட்டை முகவியை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.
5. புகைப்படம்
ஆதார் அட்டையில் உள்ள புகைப்படத்தை மாற்றம் செய்யவும் எந்தவித கட்டுப்படும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வேறு என்ன வழி: சரி, ஒருவேளை இதில் உள்ள வரையறுக்கப்பட்ட தகவல்களை நீங்கள் அதிக முறை மாற்றியிருந்தால் என்ன செய்வது என்று இப்போது பார்க்கலாம். உங்கள் பெயர், பாலினம் அல்லது பிறந்த தேதியை ஆதார் அட்டையில் அனுமதிக்கப்பட்டதை விட அதிக முறை புதுப்பிக்க விரும்பினால், விதிவிலக்கு கையாளுதல் செயல்முறை எனப்படும் சிறப்பு செயல்முறையை நீங்கள் பின்பற்ற வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








