புது ரூல்ஸ்.. மார்ச் 15 முதல் அமல்! ஆதார்ல உங்க பெயர், விலாசம் எல்லாம் சரியா இருக்கா? இல்லனா ரூ.50 செலவாகும்!
மார்ச் 14 ஆம் தேதிக்கு முன்பாகவே உங்களுடைய ஆதார் அட்டையில் உள்ள, உங்களுடைய பெயர், விலாசம் போன்ற விவரங்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா என்பதை சரிபார்க்கவும். ஒருவேளை ஏதேனும் தவறுகள் இருந்தால்.. சில மாற்றங்களை செய்யவேண்டி இருந்தால்.. அதை மார்ச் 14-க்குள்ளேயே செய்துவிடவும்!
ஏனென்றால் ஆதார் அட்டை விவரங்களை ஆன்லைனில் இலவசமாக புதுப்பிப்பதற்கான காலக்கெடு 2024 மார்ச் 14 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது மார்ச் 15 முதல் ஆதார் அட்டையில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டுமென்றால் அதற்காக நீங்கள் பணம் செலவு செய்ய வேண்டியிருக்கும் என்று அர்த்தம்!

முன்னதாக இதற்கான காலக்கெடு 2023 டிசம்பர் 15 ஆம் தேதியாக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. பின்னர் யுஐடிஏஐ என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தனித்துவ அடையாள ஆணையமானது இலவச வசதியை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்க முடிவு செய்து, காலக்கெடுவை 14.03.2024 ஆக மாற்றியது.
இந்த காலக்கெடுவிற்குள் மட்டுமே மை ஆதார் போர்ட்டல் (my Aadhaar Portal) மூலம் ஆதார் அப்டேட்டிற்கான வசதி இலவசமாக இருக்கும். ஆதாரில் உள்ள பெயர், முகவரி மற்றும் பிற விவரங்களை யுஐடிஏஐ-யின் இணையதளத்தில் இலவசமாக மாற்றலாம். பொது சேவை மையங்களிலும் கூட இதை செய்யலாம். ஆனால் அங்கே ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இந்த சேவை மைஆதார் போர்ட்டலில் மட்டுமே இலவசமாக கிடைக்கும்.

அதுவும் மார்ச் 14 ஆம் தேதி வரை மட்டும் தான்! அதற்கு பின்னர் ஆன்லைன் வழியிலான மாற்றங்களுக்கும் கூட ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். குறிப்பாக 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் வழங்கப்பட்டு, அதன்பின் அதை அப்டேட் செய்யமால் வைத்திருக்கும் ஆதார் அட்டைதாரரர்கள், அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று (PoI/PoA) ஆவணங்களை அப்லோட் செய்து தங்களுடைய மக்கள்தொகை விவரங்களை மறுமதிப்பீடு செய்யுமாறும் யுஐடிஏஐ கேட்டுக்கொண்டுள்ளது.
ஒருவேளை உங்கள் அட்டையில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றால், அதை இப்போதே இலவசமாக ஆன்லைன் வழியாக செய்துவிடவும். அதை செய்வது எப்படி என்று உங்களுக்கு தெரியாது என்றால்.. ஆன்லைன் வழியாக ஆதார் அட்டையை இலவசமாக அப்டேட் செய்வது எப்படி என்கிற எளிமையான மற்றும் படிப்படியான வழிமுறைகள் இதோ:

01. உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி https://myaadhaar.uidai.gov.in/ வலைத்தளத்தில் லாக்இன் செய்யவும்.
02. ப்ரோஸீட் டூ அப்டேட் அட்ரெஸ் (Proceed to update address) என்கிற விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்.
03. பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட ஒடிபி-ஐ (OTP) உள்ளிடவும்.
04. டாக்குமெண்ட் அப்டேட் (Document Update) என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும்; குடியிருப்பாளரின் தற்போதைய விவரங்கள் காட்டப்படும்.
05. அந்த விவரங்களை சரிபார்த்து, அடுத்த உள்ள ஹைப்பர்லிங்கை (Hyperlink) கிளிக் செய்யவும்.
06. இப்போது டிராப்டவுன் லிஸ்டில் இருந்து அடையாள சான்று (Proof of Identity) மற்றும் முகவரி ஆவணங்களை (Proof of Address) தேர்வு செய்யவும்.
07. உங்களுடைய முகவரி தொடர்பான ஆதாரத்தை பதிவேற்றவும்
08. இப்போது 'சப்மிட்' பட்டனை கிளிக் செய்து குறிப்பிட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்யவும்.
09. கடைசியாக உங்களுடைய 14 இலக்க அப்டேட் ரெட்வெஸ்ட் நம்பர் (Update Request Number - URN) உருவாக்கப்பட்ட பிறகு, உங்களுடைய ஆதார் அப்டேட் கோரிக்கை ஏற்கப்படும்.
ஆதார் அட்டைக்கான அட்ரெஸ் ப்ரூப்-ஐ அப்லோட் செய்வது எப்படி?
01. https://myaadhaar.uidai.gov.in/ வலைத்தளத்திற்குள் செல்லவும்
02. இப்போது நேம் / ஜென்டர் . டேட் ஆப் பெர்த் & அட்ரெஸ் அப்டேட் (Name/Gender/Date of Birth & Address Update) என்பதைத் தேர்ந்தெடுத்து "அப்டேட் ஆதார் அப்டேட்' என்பதை கிளிக் செய்யவும்.
03. இப்போது 'அட்ரெஸ்' என்பதைத் தேர்ந்தெடுத்து, 'ப்ரொஸீட் டூ ஆதார் அப்டேட்' என்பதைக் கிளிக் செய்யவும்.
04. ஸ்கேன் செய்யப்பட்ட நகலை பதிவேற்றி, தேவையான மக்கள்தொகை தகவலை உள்ளிடவும்.


Click it and Unblock the Notifications








