Home
News

பான்-ஆதார் இணைக்கவில்லை.. சம்பளம் ரூ.1 மட்டுமே வரவு.. சிரமத்தில் சிக்கிய ஊழியர்கள்.. நடந்தது இதுதான்..

பான் மற்றும் ஆதார் இணைப்பிற்கான கடைசி தேதியாக 2024 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி நிர்ணயம் செய்யப்பட்டது. குறிப்பாக இந்த காலக்கெடுவிற்குள் பான்-ஆதாரை இணைக்கவிட்டால் கார்டுகள் ரத்து செய்யப்படும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் மும்பையில்,BMC (Brihanmumbai Municipal Corporation) ஊழியர்களாக இருக்கும் சுமார் 9000 நபர்களில் பலர் கன்சர்வேன்சி மற்றும் திடக்கழிவு மேலாண்மைத் துறையில் பணிபுரிகிறார்கள். இவர்களுக்குக் கடந்த மாதம் வழங்கப்பட்ட சம்பளத் தொகையாக வெறும் ரூ.1 மட்டுமே வரவு வைக்கப்பட்டுள்ளது.

பான்-ஆதார் இணைக்கவில்லை.. சம்பளம் ரூ.1 மட்டுமே வரவு.. நடந்தது இதுதான்!

இதற்குக் காரணம் என்னவென்றால், வருமானவரித் துறை மார்ச் 31ஆம் தேதிக்கு முன்னர் ஊழியர்கள் தங்கள் பான் மற்றும் ஆதார் அட்டைகளை இணைக்க வேண்டு என்று கூறி இருந்தது. ஆனால் இந்த ஊழியர்கள் தங்கள் பான் (PAN) மற்றும் ஆதார் (Aadhaar) அட்டைகளை இணைக்கத் தவறியதே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

ஆனால் இதுகுறித்து முன்பே எச்சரிக்கை கொடுக்கவில்லை என்று புலம்பும் அந்த ஊழியர்கள், தற்போது தான் அந்த இரண்டு அட்டைகளையும் இணைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் என்று கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து நாகேஷ் காட்ஜ் என்பர் கூறியது என்னவென்றால், தான் கடந்த 2007-ம் ஆண்டு முதல் கன்சர்வேன்சி தொழிலாளியாப் பணிபுரிந்து வருகிறேன். எனது ஏழு மணி நேர ஷிப்டுக்கு மாதந்தோறும் ஊதியமாக ரூ.49,000 பெறுகிறேன்.

பான்-ஆதார் இணைக்கவில்லை.. சம்பளம் ரூ.1 மட்டுமே வரவு.. நடந்தது இதுதான்!

ஆனால் இப்போது ரூ.1 மட்டுமே வரவு வைக்கப்பட்டுள்ளது என்று கூறினார். குறிப்பாக அவர், பான் மற்றும் ஆதார் அட்டைகளை இணைப்பது பற்றி எங்களிடம் கூறப்படவில்லை என்று கூறினார். ஆனாலும் சம்பள பிடித்தத்திற்குப் பிறகு, அவர்கள் அட்டைகளை இணைக்கச் சொல்லி வலியுறுத்தி உள்ளனர். மேலும் அந்த சம்பளத்தைக் கொடுக்கச் சொல்லிக் கேட்டுள்ளோம். அது கிடைக்காவிட்டால் எங்களுக்குச் சிரமம் தான் என்று நாகேஷ் காட்ஜ் கூறினார்.

மேலும் சிலர் இதன் அடிப்படை புரிதலை எங்களுக்குத் தெரியப்படுத்தவில்லை என்றும், இனி சாப்பாட்டுக்கு என்றசெய்வதென்று தெரியவில்லை என்று கூறியுள்ளனர். இதுகுறித்து கருவூலத்தின் தலைமைக் கணக்காளரிடம் பேசியிருப்பதாகக் கூறும் துணை நகராட்சி ஆணையர் சன்ஜோக் கபரே, ஆதார் மற்றும் பான் அட்டைகளை இணைக்க மார்ச் 31-ம் தேதி கடைசி நாள் என்பது விளம்பரங்கள் மூலம் அனைவரும் தெரிந்த விஷயம்.

இந்த கார்டுகள் இணைக்கப்படவில்லை என்றால், பான் கார்டு பலன்கள் நிறுத்தப்பட்டு, சம்பளத்தில் இருந்து 20 சதவீதம் வருமான வரி பிடித்தம் செய்யப்படும். மேலும் சம்பளத்தில் ஆண்டுக்கு 20 சதவீதம் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படுவதால், இந்த மாதம் தொழிலாளர்களுக்குப் பணம் கிடைக்கவில்லை.

பான்-ஆதார் இணைக்கவில்லை.. சம்பளம் ரூ.1 மட்டுமே வரவு.. நடந்தது இதுதான்!

மேலும் தொழிலாளர்கள் தங்களது பான் மற்றும் ஆதார் கார்டுகளை உடனே இணைக்க வேண்டும். கார்டுகளை இணைப்பதற்காக ஜூன் 2023 காலக்கெடுவை கிட்டத்தட்ட ஒரு வருடம் நீட்டித்திருந்து. கார்டுகளை இணைப்பது அனைவரின் கடமையாகும். அதேசமயம் இரண்டு கார்டுகளையும் இணைத்த பின்பு தொழிலாளர்களுக்குச் சம்பளம் திருப்பிச் செலுத்தப்படுமா என்பது வருமானவரி விதிகளைப் பொறுத்தது என்று சன்ஜோக் கபரே கூறினார்.

வருமான வரி இ-ஃபைலிங் போர்ட்டலுக்கு (Income Tax e-filing portal) சென்று தேவையான விவரங்களைக் கொடுத்து ஆதார் மற்றும் பான் கார்டுகளை இணைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
BMC employees received a salary of Rs 1 because they did not link their PAN-Aadhaar
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X