Home
News

ப்ளூ ஆதார் அட்டை.. ஏன் முக்கியம்? இதை விண்ணப்பிப்பது எப்படி? இதோ எளிய வழிமுறைகள்..

இந்தியாவில் ஆதார் மிகவும் முக்கியமான ஆவணமாக உள்ளது. குறிப்பாக அரசு அமல்படுத்தி இருக்கும் பல்வேறு திட்டங்களின் பலன்களைப் பெறவும் ஒருவருக்கு ஆதார் அட்டை அவசியமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் சமீப கலமாக நீல ஆதார் அட்டை (Blue Aadhaar Card) என்ற வார்த்தை தான் திரும்பிய பக்கமெல்லாம் ஒலித்து வருகிறது. இது என்ன ப்ளூ அதார் கார்டு? இது எதற்குத் தேவைப்படும்? இது நம்மிடம் இல்லையே என்று பலருக்கும் தோன்றும். பதற்றப்பட வேண்டாம் இந்த நீல ஆதார் அட்டை ஆனது குழந்தைகளுக்கான ஆதார் அட்டை ஆகும்.

ப்ளூ ஆதார் அட்டை.. இதை விண்ணப்பிப்பது எப்படி? இதோ எளிய வழிமுறைகள்...

குறிப்பாக இந்த ப்ளூ அதார் அட்டை ஆனது பால் ஆதார் அட்டை என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆதார் அட்டை இந்தியாவில் 5 வயதுக்குக் கீழ் இருக்கும் குழந்தைகளுக்காக அறிமுகம் செய்யப்பட்டது என்பத குறிப்பிடத்தக்கது. பெயரில் குறிப்பிடப்பட்டது போல இந்த ஆதார் அட்டை வெள்ளை நிறத்தில் அல்லாமல் நீல நிறத்தில் இருக்கும்.

இப்போது ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கும்போது ஒருவரின் கைவிரல் ரேகைகள், கருவிழி, ஆகியவை பதியப்படும். ஆனால் குழந்தைகளுக்கான நீல ஆதார் அட்டையில் இது எதுவும் தேவை இருக்காது. அதாவது குழந்தைகளுக்கான நீல ஆதார் அட்டையில் குழந்தையின் விலாசம் மற்றும் குழந்தையின் பெற்றோர் (அம்மா/அப்பா) ஆதார் எண்ணுடன் இணைந்த குழந்தையின் புகைப்படம் வைத்து UID எண்(Unique Identification Number) வழங்கப்படும்.

குழந்தைகளுக்கு வழங்கப்படும் இந்த நீல ஆதார் அட்டை எதற்கெல்லாம் பயன்படும் தெரியுமா? அதாவது பள்ளி சேர்க்கை, தடுப்பூசி, பயணங்கள் போன்றவற்றிற்கு பயன்படும். இதுதவிர குழந்தைகளுக்கான அரசு நலத் திட்டங்களுக்கு இந்த ஆதார் அட்டை பயன்படலாம்.

நீல ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க வழிமுறைகள்:

வழிமுறை-1 முதலில் உங்கள் ஊரில் இருக்கும் ஆதார் மையத்தில் குழந்தையின் பிறப்பு தேதி இருக்கும் சான்றிதழ், பெற்றோர் அல்லது பராமரிப்பாளரின் ஆதார் அட்டை அல்லது ரேஷன் அட்டை, குழந்தையின் புகைப்படம் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

வழிமுறை-2 அடுத்த அந்த ஆதார் மையத்தில் தரப்படும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். அங்கே மையத்தில் குழந்தையின் புகைப்படம் எடுப்பார்கள். அதன்பின்னர் பின்னர் சான்றிதழ்களுடன் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.

ப்ளூ ஆதார் அட்டை.. இதை விண்ணப்பிப்பது எப்படி? இதோ எளிய வழிமுறைகள்...

வழிமுறை-3: இப்போது நீங்கள் விண்ணப்பிப்பதற்கான acknowledgement ஸ்லிப்பை பெற்றுக்கொள்ளுங்கள். குறிப்பாக இந்த ஆதார் அட்டை விண்ணப்பித்த 60 நாட்களில் கையில் இருக்கும். அதேபோல் இந்த ஆதார் அட்டை குழந்தையின் 5 வயது வரை மட்டுமே செல்லுபடியாகும். மேலும் ப்ளூ ஆதார் அட்டை முழுக்க முழுக்க இலவசம் ஆகும்.

குறிப்பாக குழந்தைக்கு 5 வயது ஆனதும் ஆதார் அட்டையில் கைவிரல் ரேகைகள், கருவிழி, அப்போதைய புகைப்படத்தை அப்டேட் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
How to Apply for Blue Aadhaar Card Online? Here are the simple steps
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X