ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் கேம்பிளேவை ரெக்கார்ட் செய்வது எப்படி?

விருப்பமான கேம்ஸ்களை விளையாடும்போது அதனை ரிக்கார்டு செய்து அந்த வீடியோவை யூடியூப் இணையதளத்தில் பதிவு செய்தால் வருமானம் பெருகும்.

|

யூடியூப் இணையதளத்தில் வீடியோவை பதிவு செய்து அதன் மூலம் வருமானம் பெறலாம் என்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக விருப்பமான கேம்ஸ்களை விளையாடும்போது அதனை ரிக்கார்டு செய்து அந்த வீடியோவை யூடியூப் இணையதளத்தில் பதிவு செய்தால் அந்த விளையாட்டை விளையாடும் கோடிக்கணக்கானோர் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை போக்க இதுமாதிரியான வீடியோக்களை பார்க்க வருவதுண்டு.

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் கேம்பிளேவை ரெக்கார்ட் செய்வது எப்படி?

ஆனால் இந்த முறையில் வெற்றி பெற நாம் விளையாடும் கேம்ஸ்களை உயர்ந்த தரத்தில் துல்லியமாக ரிக்கார்டிங் செய்யும் முறையை பின்பற்ற வேண்டும். ஆனால் பெரும்பாலானோர்களுக்கு இதனை செய்ய தெரிவதில்லை என்பதில்தான் சோகம் உள்ளது ஆனால் கவலை வேண்டாம். தற்போது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் கேம்ஸ்களை எவ்வாறு உயர் தரத்தில் ரிக்கார்டு செய்வது என்பது குறித்து பார்ப்போம். இதை மட்டும் நீங்கள் சரியாக செய்துவீட்டீர்கள் என்றால் உங்கள் காட்டில் பணமழைதான்.

 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் கேம்ஸ்களை ரிக்கார்டு செய்வது எப்படி?

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் கேம்ஸ்களை ரிக்கார்டு செய்வது எப்படி?

ஸ்டெப் 1. முதலில் லேட்டஸ் வெர்ஷனான கூகுள் பிளே கேம்ஸ் செயலியை பெற்று கொள்ள வேண்டும். ஒருவேளை உங்களால் லேட்டஸ்ட் வெர்ஷனை பெற்று கொள்ள முடியவில்லை என்றால் கூகுள் பிளே ஸ்டோர் சென்று அப்டேட் செய்து கொள்ளவும்


ஸ்டெப் 2. அதன் பின்னர் நீங்கள் செய்ய வேண்டியது 'சேவ் ஃபீட்ஸ்' என்ற ஆப்சனுக்கு செல்ல வேண்டும். அங்கு நீங்கள் ஒரு புதிய ஆப்சனான 'கேம்பிளே ரிக்கார்டு' என்ற ஆப்சனை பார்ப்பீர்கள்

ஸ்டெப் 3: அதில் நீங்கள் எந்த கேமை ரிக்கார்ட் செய்ய வேண்டுமோ அந்த கேமை ரிகார்டு என்பதை டேப் செய்ய வேண்டும்

ஸ்டெப் 4: தற்போது நீங்கள் ரிக்கார்ட் செய்யப்படும் வீடியோவின் தரத்தை முடிவு செய்ய வேண்டும். உங்களது ஸ்மார்ட்போனில் அதிக இடம் இருந்தால் நீங்கள் தாராளமாக உயர்தரத்தை தேர்வு செய்யலாம். இல்லையென்றால் குறைந்த தரத்தை தேர்வு செய்ய வேண்டும்

 வீடியோ

வீடியோ

நீங்கள் உங்கள் வீடியோவை 720P அல்லது 480P ஆகிய இரண்டில் ஒன்றை தேர்வு செய்யலாம். அதன் பின்னர் இந்த ரிக்கார்டு செய்யப்பட்ட வீடியோக்களை யூடியூபில் அப்லோட் செய்யலாம். இந்த வீடியோ முதலில் டீஃபால்ட்டாக ஸ்க்ரீன்காஸ்ட்ஸ் என்ற போட்டோ கேலரியில் சேவ் செய்யப்பட்டிருக்கும். பின்னர் இதனை நீங்கள் ரிக்கார்டிங்காக மாற்றி கொள்ளலாம்.

கேமிங்

கேமிங்

மேற்கண்ட முறையின் முலம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் கேம்பிளேவை எப்படி ரிகார்ட் செய்வது என்பது குறித்து பார்த்தோம். இந்த முறைகளை பின்பற்றி ரிகார்ட் செய்வதன் மூலம் உங்களுக்கு மிக அருமையான கேமிங் அனுபவங்கள் கிடைக்கும். மேலும் நீங்கள் ரிகார்ட் செய்த கேம்ஸ்களை மூன்றாவது நபர்களின் செயலிகள் எடுத்து கொள்வதை தவிர்க்கலாம்.

ப்ளே ஸ்டோரில்

ப்ளே ஸ்டோரில்

ஒருவேளை ப்ளே ஸ்டோரில் உங்களது வீடியோவை அப்லோட் செய்ய முடியவில்லை என்றால் அதற்கு நீங்கள் AZ ஸ்க்ரீன் ரிகார்டர். ரெக், மொபிஜென், வைசர், டியூ ரிகார்டர், ஏடிவி ஸ்க்ரீன் ரிக்கார்டர், டுவிட்ச், கோ ரிகார்டர், ஐலோஸ் ஸ்க்ரீன் ரிக்கார்டர் மற்றும் டெக்லைன் ஆகிய ரிகார்டர்களை பயன்படுத்தலாம்.

ஆண்ட்ராய்டு

ஆண்ட்ராய்டு

தற்போது உங்களுகு எப்படி ஒரு கேம்பிளேவை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் மூன்றாவது பார்ட்டியின் செயலி இல்லாமலும், இருந்தாலும் ரிகார்ட் செய்யலாம் என்பதை தெரிந்து கொண்டீர்கள். நீங்கள் இந்த கேமை அருமையாக விளையாடும் தன்மை உடையவராக இருந்தால் இந்த ரிகார்டர் மூலம் உங்கள் விளையாட்டை ரிகார்டு செய்து அந்த வீடியோவை யுடியூபில் அப்லோஒடு செய்து மிகப்பெரிய அளவில் சம்பாதிக்கலாம். மேலும் ஒன்றை ஞாபகம் வைத்து கொள்ளுங்கள், நீங்கள் ரிகார்ட் செய்து யூடியூபில் அப்லோட் செய்யும் வீடியோ பெரும்பாலானோர் அறிந்த பாப்புலர் கேமாக இருப்பது முக்கியம். இதில்தான் ஏகப்பட்ட பார்வையாளர்கள் வந்து உங்களுக்கு வருமானத்தை அள்ளி கொடுப்பார்கள்.

Best Mobiles in India

English summary
How to record your GamePlay on Android : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X