தோஷிபாவின் புதிய வீடியோ கேம் லேப்டாப்!

Posted By: Staff
தோஷிபாவின் புதிய வீடியோ கேம் லேப்டாப்!
தோஷிபாவின் கோஸ்மியோ எக்ஸ்770 என்ற புதிய லேப்டாப் வீடியோ கேமிற்காக தனிப்பட்ட விதத்தில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்த லேப்டாப் கண்களை கவரும் வகையில் சிவப்பு நிறத்தில் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கிறது.

மேலும் இது எச்டி வசதி கொண்ட 17.3 இன்ச் கொண்ட திரையைக் கொண்டுள்ளது. அதனால் இதில் 3டி படங்கள் மற்றும் வீடியோ கேம் அனுபவத்தை பெறலாம்.

இந்த கோஸ்மியோ எக்ஸ்770 இன்டலின் கோர் ஐ7 ப்ராசஸரையும், 8ஜிபி ரேமையும் மற்றும் என்விடியாவின் ஜிஇபோர்ஸ் ஜிடிஎஸ் 560எம் க்ராபிக்ஸ் கார்டையும் கொண்டுள்ளது. இதன் விலை ரூ.80,000 முதல் ரூ.10,0000 ஆகும்.

இந்த கோஸ்மியாவில் சில குறைபாடுகளும் உள்ளன. இதன் எடை 3.4 கிலோவாகும். அதிக எடையை கொண்டுள்ளதால் இதை எடுத்துச் செல்வது சற்று சிரமமாக இருக்கும்.

இந்த கோஸ்மியா சற்று தடிமனாக உள்ளது. அதாவது இதன் தடிமன் 28மிமீ ஆகும். இதன் அகலம் 274மிமீ மற்றும் இதன் நீளம் 413மிமீ ஆகும். ஆனால் இது ஒரு கேமிங் லேப்டாப்பாக இருப்பாதால் இதன் குறைபாடுகள் பெரிதாகத் தெரிவதில்லை.

கோஸ்மியாவின் பேட்டரியும் பரவாயில்லை. இதன் பேட்டரி பேக் அப் 2.5 மணி நேரம் மட்டுமே.

இந்த லேப்டாப்பின் முக்கிய சிறப்பு என்னவென்றால் இதன் வீடியோ கேம் ஆகும். இதில் படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் மிகத் தெளிவாக இருக்கும். அதுபோல் இவற்றை எடிட் செய்யவும் செய்ய முடியும்.

3டி அனுபத்தைப் பெறவேண்டும் என்றால் இதற்கு 3டி கண்ணாடிகள் தேவைப்படும். இதில் என்விடியா சாப்ட்வேர் உள்ளதால் 3டி படங்களை மிக அழகாக இதில் பார்க்க முடியும். மேலும் இதில் 3டி வீடியோ கேம்களையும் 3டி படங்களையும் மிக அழகாக அனுபவிக்க முடியும். இந்த லேப்டாப்புடன் கூடுதல் தொகை செலுத்தி 3டி கண்ணாடியையும் பெற்றுக்கொள்ளலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot