யார் கண்ணுக்கும் தெரியாத ஒரு Secret Folder-ஐ உருவாக்கி அதனுள் Private File-களை மறைத்து வைப்பது எப்படி?

|

உங்கள் லேப்டாப்பில், யார் கண்களுக்கும் தெரியாதபடி ஒரு சீக்ரெட் ஃபோல்டரை (Secret Folder) உருவாக்குவது எப்படி என்பதை பற்றிய கட்டுரையே இது.

ஒரு சீக்ரெட் ஃபோல்டரை உருவாக்க முதலில், பெயர் இல்லாத ஒரு ஃபோல்டரை உருவாக்க வேண்டும், பின்னர் அதை யார் கண்களுக்கும் தெரியாதபடி மறைக்க வேண்டும்.

அதெப்படி என்கிற படிப்படியான மற்றும் எளிமையான வழிமுறைகள் இதோ:

பெயரே இல்லாத ஒரு ஃபோல்டரை உருவாக்குவது எப்படி?

பெயரே இல்லாத ஒரு ஃபோல்டரை உருவாக்குவது எப்படி?

- உங்களுடைய விண்டோஸ் பிசி ஸ்க்ரீனில் ரைட் கிளிக் (Right Click) செய்து நியூ (New) என்பதை கிளிக் செய்யவும்,

- பின்னர் ஸ்க்ரீனில் தோன்றும் டிராப்-டவுன் மெனுவிலிருந்து (Drop Down Menu) ஃபோல்டர் (Folder) என்பதை கிளிக் செய்யவும்.

- ஒரு புதிய ஃபோல்டரை உருவாக்கியதும், நியூ ஃபோல்டர் (New Folder) என்கிற அதன் பெயரை மாற்ற, அந்த ஃபோல்டரின் மீது ரைட் கிளிக் செய்து, ரீநேம் (Rename) என்கிற விருப்பத்தை தேர்வு செய்யவும்.

2023 மார்ச் 31-க்குள் இதை பண்ணிடுங்க.. ஆதார் அட்டை வைத்து இருப்போருக்கு அரசாங்கம் விதித்துள்ள புதிய கெடு!2023 மார்ச் 31-க்குள் இதை பண்ணிடுங்க.. ஆதார் அட்டை வைத்து இருப்போருக்கு அரசாங்கம் விதித்துள்ள புதிய கெடு!

பாதி வேலை முடிந்தது!

பாதி வேலை முடிந்தது!

பின்வருவதை செய்ய உங்களுக்கு ஒரு ஃபுல் சைஸ் கீபோர்ட் தேவைப்படும். அதாவது வலதுபுறத்தில் நம்பர் பேட் உடனான கீபோர்ட் தேவை.

- இப்போது நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் அந்த ஃபோல்டரின் தற்காலிக பெயராக உள்ள New Folder என்பதை டெலிட் செய்து விட்டு, அதற்கு பதிலாக, உங்கள் கீபோர்ட்டில் Alt+255 அல்லது Alt+0160 என்பதை அழுத்தவும்.

அதாவது ஒரு விரலில் Alt கீயை அழுத்திக்கொண்டே, இன்னொரு கையை பயன்படுத்தி, நம்பர் பேடில் 255 அல்லது 0160 என்கிற எண்களை ஒவ்வொன்றாக அழுத்தவும். பின்னர் என்டர் கீயை அழுத்தவும்.

- அங்கே எதுவுமே டைப் ஆகாதது போல ஒரு ஃபோல்டர் உருவாகும். அதாவது பெயரே இல்லாத ஒரு ஃபோல்டர் உருவாகி இருக்கும்!

அந்த ஃபோல்டரின் பெயரை மறைத்தது போலவே, அந்த ஃபோல்டரையும் கூட யார் கண்ணுக்கும் தெரியாமல் மறைக்கலாம். அதை செய்ய கீழ்வரும் வழிமுறைகளை பின்பற்றவும்!

பெயர் இல்லாத ஒரு ஃபோல்டரை கண்ணுக்கு தெரியாமல் மறைப்பது எப்படி?

பெயர் இல்லாத ஒரு ஃபோல்டரை கண்ணுக்கு தெரியாமல் மறைப்பது எப்படி?

- பெயர் இல்லாமல் புதிதாக உருவாக்கப்பட்ட ஃபோல்டரை ரைட் கிளிக் செய்யவும்.

- இப்போது தோன்றும் டிராப்-டவுன் மெனுவிலிருந்து ப்ராப்பெர்டீஸ் (Properties) என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும்

- பின்னர் கஸ்டமைஸ் (Customise) என்கிற ஆப்ஷனை கிளிக் செய்யுவும்

-அதனை தொடர்ந்து சேன்ஜ் ஐகான் (Change Icon) என்கிற விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்.

வச்சிட்டாங்க ஆப்பு! இனி இஷ்டத்துக்கு Google Pay, Paytm-ஐ யூஸ் பண்ண முடியாது! 2 புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!வச்சிட்டாங்க ஆப்பு! இனி இஷ்டத்துக்கு Google Pay, Paytm-ஐ யூஸ் பண்ண முடியாது! 2 புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

கண்ணுக்கு தெரியாத ஐகானை கண்டுபிடிக்கவும்!

கண்ணுக்கு தெரியாத ஐகானை கண்டுபிடிக்கவும்!


- வலதுபுறமாக ஸ்க்ரோலிங் செய்வதன் மூலம் அங்கே உங்களுக்கு பல வகையான விருப்பங்கள் கிடைக்கும்.

- அதில் ஓன்றுமே தெரியாத எம்ப்டி ஐகானும் (Invisible Empty Icon) இருக்கும். அதை கண்டுபிடிக்கவும்

- பின்னர் அதை கிளிக் செய்து,அதன் கீழ் இருக்கும் ஓகே (Ok) என்கிற ஆப்ஷனை கிளிக் செய்யவும். பிறகு கடைசியாக அதை அப்ளை (Apply) செய்யவும்.

சப்-ஃபோல்டர்களையும் கூட உருவாக்கலாம்!

சப்-ஃபோல்டர்களையும் கூட உருவாக்கலாம்!

அவ்வளவு தான், குறிப்பிட்ட ஃபோல்டர் ஆனது யார் கண்களுக்கும் தெரியாமல் மறைந்து விடும். ஆனாலும் அது அங்கேயே தான் இருக்கும்; எனவே, அந்த ஃபோல்டர் சரியாக எங்கே உள்ளது என்பதை நினைவில் வைத்து கொள்ளவும்; அதனுள் உங்களுடைய ரகசிய ஃபைல்களை சேமித்து வைத்துக்கொள்ளவும்.

இன்னொரு சுவாரசியமா விஷயம் என்னவென்றால், இந்த சீக்ரெட் ஃபோல்டருக்குள் சப்-ஃபோல்டர்களையும் கூட உருவாக்கி கொள்ள முடியும்!

Best Mobiles in India

English summary
How to create an invisible secret folder in windows laptop and hide personal private files videos

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X