பதட்டத்தில் Windows பயனர்கள்.. அடிச்சி புடிச்சி Uninstall பண்றாங்க! ஏன்?

|

நீங்கள் ஒரு விண்டோஸ் பயனர் என்றால்.. உங்களுக்கு இன்னமும் "அந்த தகவல்" கிடைக்கவில்லை என்றால், உடனே தெரிந்து கொள்ளவும்; உஷார் ஆகி கொள்ளவும்!

ஏனெனில் பல Windows யூசர்கள் பதட்டத்தில் உள்ளனர் மற்றும் அடித்து பிடித்து "அன்இன்ஸ்டால்களை" நிகழ்த்துகிறார்கள்! ஏன்? எதனால்? என்ன ஆகிற்று? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

என்ன ஆகிற்று? என்ன பதட்டம்?

என்ன ஆகிற்று? என்ன பதட்டம்?

இந்திய அரசின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் CERT-In, அதாவது Indian Computer Emergency Response Team ஆனது ஒரு 'ஹை-லெவல்' எச்சரிக்கையை விடுத்துள்ளது!

அந்த எச்சரிக்கை முழுக்க முழுக்க விண்டோஸ் பயனர்களுக்கானது என்பதால் தான் Windows யூசர்கள் பதட்டத்தில் உள்ளன.

ஸ்டீவ் ஜாப்ஸ் மட்டும் உயிரோட இருந்து.. இதை பார்த்து இருந்தா? எப்படி இருக்கும்?ஸ்டீவ் ஜாப்ஸ் மட்டும் உயிரோட இருந்து.. இதை பார்த்து இருந்தா? எப்படி இருக்கும்?

அதென்ன எச்சரிக்கை?

அதென்ன எச்சரிக்கை?

மைக்ரோசாப்ட் விண்டோஸின் சில வெர்ஷன்களில், விண்டோஸைப் பாதுகாக்கும் புரோகிராம் ஆன Windows Defender-க்கு தீங்கு விளைவிக்கும் ஒரு "பாதுகாப்பு ஓட்டையை" CERT-in கண்டறிந்துள்ளது.

அதாவது மைக்ரோசாப்ட் விண்டோஸின் சில வெர்ஷன்களில் - வைரஸ்கள், மால்வேர்கள் போன்ற Vulnerability (பாதிப்புகள்) உள்ளதாக செர்ட்-இன் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதோடு இல்லாமல், குறிப்பிட்ட விண்டோஸ் வெர்ஷன்களின் முழு பட்டியலையும் CERT-In வெளியிட்டு உள்ளது.

ஹேக்கர்களால் செக்யூரிட்டி-ஐ பைபாஸ் செய்ய முடியும்! பின்னர்?

ஹேக்கர்களால் செக்யூரிட்டி-ஐ பைபாஸ் செய்ய முடியும்! பின்னர்?

"விண்டோஸ் டிஃபென்டர் க்ரெடென்ஷியல் கார்ட்டில் (Windows Defender Credential Guard), ப்ரிவிலேஜ் எஸ்கலேஷன் மற்றும் செக்யூரிட்டி பைபாஸ் பாதிப்புகள் (Privilege escalation and security bypass vulnerabilities) பதிவாகியுள்ளன.

இதன் விளைவாக ஹேக்கர்களால், செக்யூரிட்டி ரெஸ்ட்ரிக்ஷன்களை 'பைபாஸ்' செய்ய முடியும் மற்றும் டார்கெட்டெட் சிஸ்டமில் (அதாவது ஹேக் செய்யப்படும் சிஸ்டமில்) தேவையான 'உரிமைகளை' பெற முடியும்" என்று CERT-In தெரிவித்துள்ளது.

ஆமா.. Nothing Phone 1-க்கு இப்போ இது ஒன்னு தான் குறைச்சல்.. அட போங்கப்பா!ஆமா.. Nothing Phone 1-க்கு இப்போ இது ஒன்னு தான் குறைச்சல்.. அட போங்கப்பா!

இதுவொரு ஹை-லெவல் எச்சரிக்கை ஆகும்!

இதுவொரு ஹை-லெவல் எச்சரிக்கை ஆகும்!

ஆம்! CERT-In ஆனது இந்த பாதிப்பின் தீவிர நிலையை "High" என்று குறிப்பிட்டுள்ளது. ஏனெனில் இந்த பாதுகாப்பு குறைபாடானது, ஒரு கம்ப்யூட்டரை ஹேக் செய்வதற்கான வழிகளை உண்டாக்கி கொடுக்கிறது.

எனவே கீழ் வரும் பட்டியலில் உள்ள ஏதேனும் ஒரு விண்டோஸ் வெர்ஷனை நீங்கள் பயன்படுத்தும் பட்சத்தில், அதை உடனே அன்இன்ஸ்டால் செய்யமாறு பரிந்துரைக்கிறோம்.

CERT-In எச்சரித்துள்ள Windows Version-களின் முழு பட்டியல் இதோ:

CERT-In எச்சரித்துள்ள Windows Version-களின் முழு பட்டியல் இதோ:

- Windows 11 for ARM (64-based Systems)

- Windows 11 for x (64-based Systems)

"பாதிக்கப்பட்டுள்ள" விண்டோஸ் 10 வெர்ஷன்கள்!

- Windows 10 Version 1607 (x64-based Systems)

- Windows 10 Version 1607 (32-bit Systems)

- Windows 10 for x (64-based Systems)

- Windows 10 for (32-bit Systems)

- Windows 10 Version 21H2 (x64-based Systems)

- Windows 10 Version 21H2 (ARM64-based Systems)

- Windows 10 Version 21H2 (32-bit Systems)

- Windows 10 Version 20H2 (ARM64-based Systems)

- Windows 10 Version 20H2 (32-bit Systems)

- Windows 10 Version 20H2 (x64-based Systems)

- Windows 10 Version 21H1 (32-bit Systems)

- Windows 10 Version 21H1 (ARM64-based Systems)

- Windows 10 Version 21H1 (x64-based Systems)

- Windows 10 Version 1809 ARM (64-based Systems)

- Windows 10 Version 1809 (x64-based Systems)

- Windows 10 Version 1809 (32-bit Systems)

YouTube-ல நிறைய Shorts பார்ப்பீங்களா? அப்போ YouTube-ல நிறைய Shorts பார்ப்பீங்களா? அப்போ "இதுக்கும்" ரெடி ஆகிக்கோங்க!

"பாதிக்கப்பட்டுள்ள" விண்டோஸ் சர்வர் வெர்ஷன்கள்!

- Windows Server 2022 (Server Core installation)

- Windows Server 2022

- Windows Server 2019 (Server Core installation)

- Windows Server 2019

- Windows Server 2016 (Server Core installation)

- Windows Server 2016

- Windows Server, version 20H2 (Server Core installation)

Best Mobiles in India

English summary
High Level Alert Uninstall these Windows Versions Immediately CERT In Warning Here is Why

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X