கை அளவில் இருக்கும் இந்த சாதனம் ஒரு PC கம்ப்யூட்டர்-ஆ! என்னங்க சொல்றீங்க? நம்பவே முடியலை!
பிசி (PC) என்று சொன்னாலே எல்லோருக்கும் ஒரு பெரிய சிஸ்டத்துடன் கூடிய மானிட்டர் தான் கண் முன் வந்து-செல்லும். பர்சனல் கம்ப்யூட்டர் என்றாலே பெரிய சைசில் இருக்குமென்று நம்முடைய மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. ஆனால், இதை படித்தால் உங்கள் யோசனை மாறிவிடும்.
ஏன்னென்றால், இப்போது உலகின் மிகவும் சிறிய வடிவ PC அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உண்மையை சொல்ல போனால், இது உங்கள் ஸ்மார்ட்போனை விட மிக சிறியது. உங்கள் போனின் சார்ஜ்ர் ஹெட் அடாப்டர் போன்ற அளவில் இருக்கிறது. Topton M6S என்ற சாதனம் தான் நாம் இங்கு பேசிக்கொண்டிருக்கும், சிறிய பரிமாணங்களை மீறும் ஒரு குறிப்பிடத்தக்க உள்ளங்கை அளவிலான கம்ப்யூட்டர்ராகும். கடுகு சிறுத்தாலும், காரம் குறையாது என்பது போன்று இது இருக்கிறது.

இது எவ்வளவு சிறியது என்றால், இது வெறும் 72 x 72 x 45 மிமீ (2.8″ x 2.8″ x 1.8″) அளவைக் கொண்டுள்ளது. இந்த அதிநவீன மினி-பிசி அதன் இன்டெல் ஆல்டர் லேக்-என் பிராசஸர் (Intel Alder Lake-N processor) உடன், அதன் முன்னோடிகளிலிருந்து தனித்துவமாக உருவாக்கப்பட்டுள்ளது. Topton M6S இன் தனித்துவமான அம்சங்களில் ஒன்று இது Windows 11, GNU/Linux போன்ற டெஸ்க்டாப் இயங்குதளங்களில் இயக்கும் திறன் கொண்டதாகும்.
இது சிறிய அளவில் இருந்த போதிலும், மிகவும் சக்தி வாய்ந்த ஆற்றலை வழங்குகிறது. பயனர்களுக்கு தடையற்ற மற்றும் மல்டிடாஸ்கிங் அனுபவத்தை வழங்குகிறது. இந்த டாப்டன் M6S பல்வேறு தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு கட்டமைப்புகளில் கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் 169 டாலர் விலை முதல் இந்த சாதனத்தை வாங்கலாம். அடிப்படை மாடல் Intel Processor N100 சிப் மற்றும் 12GB LPDDR5 RAM உடன் வருகிறது. ஆனால் ஸ்டோரேஜ் இதில் கிடையாது.
இதன் ஹை-வேரியண்ட் மாடலை வாங்க விரும்புவோருக்கு 128GB முதல் 2TB வரையிலான ஸ்டோரேஜ் கிடைக்கிறது. இதன் விலை தோராயமாக $175 முதல் $277 டாலர் வரை செல்கிறது. ஹூட்டின் கீழ், ஒவ்வொரு மினி பிசி மாடலும் 4-கோர், 4-த்ரெட் பிராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. இது 3.4 ஜிகாஹெர்ட்ஸ் வரை வேகத்தை ஆதரிக்கிறது. 24 எக்ஸிகியூஷன் யூனிட்களுடன் ஒருங்கிணைந்த Intel UHD GPU ஆனது மென்மையான கிராபிக்ஸ் செயல்திறனை உறுதி செய்கிறது.

இது பல்வேறு பயன்பாடுகளுக்கு ஏற்றதாக அமைகிறது. இன்டெல்லின் ஆல்டர் லேக்-என் மிகவும் சிறந்த வழங்குகிறது. இன்டெல் ஜாஸ்பர் லேக் சில்லுகளைக் கொண்ட முந்தைய மினி-பிசிகளின் திறன்களை இது மிஞ்சுகிறது. Topton M6S ஆனது LPDDR5-4800 ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது முந்தைய தலைமுறையின் LPDDR4-2666 RAM ஐ விட குறிப்பிடத்தக்க மேம்படுத்தல்களுடன் பயனர் அனுபவத்தை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
மற்ற அம்சங்களில் SATA அல்லது PCIe 3.0 x2 NVMe ஸ்டோரேஜ், M.2 2242 ஸ்லாட், பிரத்யேக பேன் உடன் வருகிறது. WiFi 5-க்கான Intel Wireless-AC 7265 வயர்லெஸ் கார்டு மற்றும் BT 4.2 இணைப்பு, டூயல் டிஸ்பிளே சப்போர்ட்க்கான HDMI 2.0 போர்ட், Gigabit Ethernet ஆகியவை இதில் உள்ளது. USB 3.2 Type-A போர்ட், ஒரு microSD கார்டு ரீடர், 3.5mm ஆடியோ ஜாக், இதில் உள்ளது.
USB Type-C போர்ட் உள்ளிட்ட 12V/3A சார்ஜருக்கான போர்ட்டும் இதில் உள்ளது. Intel Processor N100 சிப்பைக் கொண்ட 2.8 இன்ச் மினி பிசியின் முன்னோடியாக டாப்டன் முன்னிலை வகிக்கிறது. இந்த சாதனத்தை தொடர்ந்து மற்ற நிறுவனங்களும் இதே போக்கை பின்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








