"கம்பி கட்டுற கதை" என்று நக்கல் அடித்த பலரும் கதறி உள்ளனர்! Gmail யூசர்களே உஷார்!

|

இன்றோ நேற்றோ அல்ல.. கடந்த பல ஆண்டுகளாகவே ஜிமெயில் (Gmail) தொடர்பாக வெளியிடப்படும் ஒரு முக்கியமான பாதுகாப்பு எச்சரிக்கையை (Security Warning) யாருமே பெரிது படுத்துவது இல்லை; கண்டுகொள்வது இல்லை!

சிலர் "எங்க ஏரியாவுல இதெல்லாம் நடக்காதுங்க.. வாய்ப்பே இல்ல" என்பார்கள். இன்னும் சிலர் "என்னென்ன சொல்றான் பாருங்க! கம்பி கட்டுற கதை எல்லாம் சொல்றான்" என்று நக்கலடிப்பார்கள்!

100-க்கு 99 பேர் கண்டுக்கவே மாட்டாங்க!

100-க்கு 99 பேர் கண்டுக்கவே மாட்டாங்க!

நாம் இங்கே பேசுவது - ஜிமெயில் அக்கவுண்ட் ஆனது ஹேக் (Hacking) செய்யப்படுவது தொடர்பான எச்சரிக்கையை பற்றித்தான்!

ஹேக்கிங் தொடர்பான எச்சரிக்கைகளை பற்றி பேசும் போதெல்லாம், அதை காது கொடுத்து கேட்பவர்களை விட, அதை புறக்கணிப்பவர்களும், நக்கல் செய்பவர்களுமே அதிகம்!

"இதை" உடனே டெலிட் செஞ்சிட்டா உங்க Phone-க்கு நல்லது.. இல்லனா? வார்னிங் கொடுக்கும் Google!

நக்கல் அடித்த பலரும் கதறி உள்ளனர்!

நக்கல் அடித்த பலரும் கதறி உள்ளனர்!

ஆனால் உண்மை என்னவென்றால், உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டோ அல்லது கூகுள் அக்கவுண்ட்டோ ஹேக் செய்யப்படும் வரை.. அதில் உள்ள முக்கியமான விவரங்களும், காண்டாக்ட்களும் "திருடப்படும்" வரை..

உங்கள் பெயரின் கீழ் "கண்ட கண்ட" இமெயில்கள் மற்றவர்களுக்கு அனுப்பப்படும் வரை.. ஹேக்கிங் என்பது ஒரு கட்டுக்கதையாகவே தெரியும். நடந்தால் தான் தெரியும், நீங்கள் எவ்வளவு பெரிய ஆபத்தில் சிக்கி கொண்டீர்கள் என்பது!

நீங்கள் சிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

நீங்கள் சிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

ஜிமெயில் ஹேக்கிங்-ல் இருந்து தப்பிக்க உதவும் சில எளிய வழிகள் உள்ளன. மீறி ஹேக் செய்யப்பட்டால், அதில் இருந்து உடனே "விடுபடுவதற்கான" சில எளிய தந்திரங்களும் உள்ளன.

அவைகளை தெரிந்து வைத்து கொண்டாலே போதும், ஹேக்கிங் தொடர்பான பிரச்சனைகளை பற்றி நீங்கள் பெரிதாக கவலைகொள்ள வேண்டிய அவசியமே இருக்காது!

அதென்ன வழிகள்? அதென்ன தந்திரங்கள்? வாருங்கள் சுருக்கமாக பார்ப்போம்!

உங்க போன் Settings-ல் இந்த உங்க போன் Settings-ல் இந்த "சீக்ரெட்" மோட் இருக்கானு செக் பண்ணுங்க.. இருந்தா அதிர்ஷ்டம்!

01. க்ராஸ் செக்!

01. க்ராஸ் செக்!

உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்-ஐ எந்தெந்த டிவைஸ்களில் லாக்-இன் செய்து வைத்து இருக்கிறீர்களோ.. அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் மற்றும் பிசி என எதில் எல்லாம் உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்-ஐ ஓப்பன் செய்து, பாஸ்வேர்ட்-ஐ 'சேவ்' செய்து வைத்து இருக்கிறீர்களோ.. அதை எல்லாவற்றையுமே அவ்வப்போது 'க்ராஸ் செக்' செய்து கொள்ளவும்!

எல்லாம் சரியாக இருக்கிறதா? சந்தேகப்படும் படி எதுவும் நடக்கவில்லை என்பதை அடிக்கடி சோதித்து கொள்ளவும்!

02. பாஸ்வேர்ட்!

02. பாஸ்வேர்ட்!

எப்போதுமே உங்கள் ஜிமெயில் பாஸ்வேர்ட் ஆனது மிகவும் வலுவாகவும், யூகிக்க கடினமாக இருப்பதையும் உறுதி செய்யவும்.

ஒன்றுக்கும் மேற்பட்ட அக்கவுண்ட்களில் ஒரே பாஸ்வேர்ட்-ஐ செட் செய்ய வேண்டாம். மாறாக தனித்தனியான பாஸ்வேர்ட்களை பயன்படுத்தவும். அதே சமயம் அவ்வப்போது பாஸ்வேர்ட்களை மாற்றி அமைக்கவும் மறக்க வேண்டாம்!

வயிறு எரியுதுனு புலம்பும் OnePlus போன் பயனர்கள்.. சொந்த கம்பெனியே வச்ச புது ஆப்பு!வயிறு எரியுதுனு புலம்பும் OnePlus போன் பயனர்கள்.. சொந்த கம்பெனியே வச்ச புது ஆப்பு!

03. டூ-ஸ்டெப்-வெரிஃபிகேஷன்!

03. டூ-ஸ்டெப்-வெரிஃபிகேஷன்!

ஹேக்கிங் போன்ற அங்கீகரிக்கப்படாத அணுகலில் இருந்து உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்-ஐ பாதுகாக்க 2-ஸ்டெப் வெரிஃபிகேஷனை எனேபிள் செய்யவும்.

மிகவும் எளிமையாக கூற வேண்டும் என்றால், இந்த 2-ஸ்டெப்-வெரிஃபிகேஷன் ஆனது ஹேக்கர்களை திறமையற்றவர்களாக மாற்றும். உங்கள் பாஸ்வேர்ட் திருடப்பட்டாலும் கூட, உங்கள் அக்கவுண்ட் பாதுகாப்பாக இருக்கும்!

04. ஸ்கேனிங்!

04. ஸ்கேனிங்!

அவ்வப்போது உங்கள் கம்ப்யூட்டரையும், ஸ்மார்ட்போனையும் ஸ்கேன் செய்து, ஏதாவது ஹேக்கிங் நடந்து உள்ளதா என்பதையும் சரி பார்க்கவும்.

இல்லையேல், ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்கு ஒருமுறை தானாகவே ஸ்கேனிங் ஆகும்படி செட் செய்யவும்!

Truecaller-ல் இதை மட்டும் செஞ்சிட்டா போதும்! உங்களுக்கு ஒரே Truecaller-ல் இதை மட்டும் செஞ்சிட்டா போதும்! உங்களுக்கு ஒரே "VIP அந்தஸ்து" தான்!

05. மீறி ஹேக் செய்யப்பட்டால்..?

05. மீறி ஹேக் செய்யப்பட்டால்..?

- உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டதை உங்கள் காண்டாக்ட் லிஸ்ட்டில் உள்ள அனைவருக்கும் தெரிவிக்கவும்

- ரிஜிஸ்டர் செய்யும் போது உங்களிடம் கேட்கப்பட்ட செக்யூரிட்டி கேள்விகளுக்கு, நீங்கள் என்ன பதில் அளித்தீர்கள் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். அது உங்கள் அக்கவுண்ட்டை மீட்டெடுக்க உதவும்.

- குறிப்பிட்ட இமெயில் ஐடி-ஐ இழப்பதில் உங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை என்றால், அந்த அக்கவுண்ட்டை க்ளோஸ் செய்து விட்டு புதிய அக்கவுண்ட்-ஐ உருவாக்கி கொள்ளவும்!

Best Mobiles in India

English summary
Every Gmail user must know these 5 security tips to stay away from hackers

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X