Home
News

உங்கள் லேப்டாப்/கம்ப்யூட்டர் மந்தமாக வேலை செய்கிறதா? இதை செய்தால் உடனே ஸ்பீட் ஆகிவிடும்.!

சோர்வு என்பது மனிதனுக்கு மட்டுமல்ல நாம் பயன்படுத்தும் சாதனங்களுக்கும் ஏற்படும். எந்த ஒரு மின்னனு சாதனமும் தொடர்ச்சியாகப் பயன்பாட்டில் இருக்கும்போது அதன் செயல்பாடு குறைய ஆரம்பிப்பதைத் தவிர்க்க முடியாது. ஸ்மார்ட்போனில் (Smartphone) ஆரம்பித்து அனைத்து மின்னணு சாதனங்களுக்கும் இது பொருந்தும்.

மற்ற வீட்டு உபயோக பொருட்களின் பயன்பாட்டை அவ்வப்போது நிறுத்தி அதற்கு ஓய்வு கொடுக்கலாம். ஆனால், அலுவலக வேலைக்குப் பயன்படுத்தும் லேப்டாப் (Laptop) மற்றும் கம்ப்யூட்டர்களை (Computer) நாள் முழுக்க பயன்படுத்த வேண்டும் என்பது கட்டாயம். அதனைத் தவிர்க்க முடியாது.

உங்கள் லேப்டாப்/கம்ப்யூட்டர் மந்தமாக வேலை செய்கிறதா? டிப்ஸ் இதோ.!

அப்படி தொடர்ச்சியாகப் பயன்பாட்டில் இருக்கும்போது லேப்டாப், கணினி சோர்வடைந்தால் அதன் செயல்பாடு குறைந்து மிகவும் மெதுவாகச் செயல்படும் (Slow running laptops). அடிக்கடி ஹேங் (Hang) ஆகி நின்றுவிடும். என்னென்ன காரணங்களுக்காக லேப்டாப் / கம்ப்யூட்டர் சோர்வடைகிறது? அதனைத் தவிர்க்க என்ன வழி (How to solve slow running issue on laptop)? என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. உங்கள் லேப்டாப் / கம்ப்யூட்டர் மந்தமாக வேலை செய்கிறதா?

லேப்டாப் மற்றும் ஸ்மார்ட்போன் போன்ற கருவிகளுக்கு முக்கியமான ஒரு அம்சம் அதன் RAM. இது தற்காலிகமாக பைல்களை (File) சேகரித்து வைத்துக் கொள்ளும் ஒரு அம்சமாகும். லேப்டாப்பை ஆன் (On) செய்யும்போது அதன் OS மற்றும் செயலிகள் செயல்பட RAM மிகவும் அவசியம்.

பெரும்பாலான மக்கள் ஒரு சாதாரண லேப்டாப்பிற்கு 4ஜிபி RAM போதுமானது என்று நினைக்கலாம். ஆனால், அதன் பெரும்பாலான பகுதி ஒஎஸ் (OS) செயல்படுவதற்கே சென்றுவிடும். அதுபோக பேக்ரவுண்டில் சில செயலிகள் (Background apps) எப்போதுமே செயல்பாட்டில் இருக்கும். இவை அனைத்திற்கும் போதுமான ரேம் வசதி இல்லாத பொழுது லேப்டாப் சோர்வடையும்.

இதனைத் தவிர்க்க, தேவையில்லாத செயலிகள் செயல்பாட்டில் இருப்பதைக் குறைக்க வேண்டும். அதற்கு, எந்தெந்த செயல்கள் தற்சமயம் செயல்பாட்டில் உள்ளது என்பதனை தெரிந்து கொண்டு, அவற்றில் தேவையில்லாதவற்றின் செயல்பாட்டை முடிக்க வேண்டும். மேலும், 8GB RAM-ற்கு மேல் இருக்கும் லேப்டாப்புகளை வாங்குவது நல்லது. 16GBக்கு மேல் இருந்தால் கூடுதல் சிறப்பு.

விண்டோஸ் (Windows) பயனாளர்கள் Ctrl+Alt+Del பயன்படுத்தி டாஸ்க் மேனேஜரை (Task Manager) ஓபன் செய்து, அதில் அதிக RAM பயன்படுத்தும் தேவையில்லாத செயலிகள் எவை என்பதனை கண்டறிந்து அதன் செயல்பாட்டை முடிக்கலாம். இதன் மூலம் லேப்டாப் ஹேங் (Laptop hanging issue) ஆவது தவிர்க்கப்படும்.

மேக் (Mac) பயனாளர்கள் Application Folder > Utility Folder > Activity Monitor சென்று தேவையற்ற செயலிகளை கண்டறியலாம்.

உங்கள் லேப்டாப்/கம்ப்யூட்டர் மந்தமாக வேலை செய்கிறதா? டிப்ஸ் இதோ.!

2. உங்கள் லேப்டாப் / கம்ப்யூட்டரின் ஆமை போல மெதுவாக இயங்குகிறதா?

RAM-ஐப் போலவே தகவல்களை சேகரித்து வைக்கும் மற்றொரு அம்சம் ஹார்ட் டிரைவ் (Hard Drive). லேப்டாப்பில் இருக்கும் ஹார்ட் டிரைவானது நிறைந்து விட்டாலும் உங்களது சிஸ்டம் (System) சோர்வடையலாம். இன்றைய காலகட்டத்தில் தகவல்களை சேகரித்து வைக்க அனைத்து நிறுவனங்களும் க்ளவுட் (Cloud) வசதியை வழங்கியுள்ளது.

போட்டோ (Photo), வீடியோக்கள் (Videos) என்று அதிக கொள்ளளவு இருக்கும் பைல்களை க்ளவுடுகளில் (Cloud storage) சேகரித்து வைப்பதன் மூலம் ஹார்ட் ட்ரைவில் கூடுதல் இடம் கிடைக்கும். இதனால் லேப்டாப் சோர்வடைவது குறையும்.

மேக்கின் ஐக்ளவுட் (iCloud) இலவசமாக 5GB ஸ்டோரேஜ், கூகுள் நிறுவனம் தனது டிரைவில் (Google Drive) இலவசமாக 15GB ஸ்டோரேஜ், விண்டோஸ் OneDrive என்ற அம்சத்தையும் பைல்களை க்ளவுடில் சேர்த்து வைக்க அளித்து வருகிறது.

3. உங்கள் சாதனம் சரியான OS அப்டேட்டை பெற்றுள்ளதா?

இந்த இரண்டு காரணங்களை தவிர்த்து, நீங்கள் பயன்படுத்தும் ஓஎஸ் அப்டேட்டட் வெர்ஷன் (Updated Version) ஆக இல்லாத பொழுது, உங்கள் லேப்டாப்பை சோர்வடையலாம். உங்க லேப்டாப்பின் OS அப்டேட்டாக உள்ளதா என்பதனை தெரிந்து கொள்ள,

விண்டோஸ் பயனாளர்கள் Start பட்டனில் இருக்கும் Settings-க்கு சென்று, Update and Security என்பதில் இருக்கும் Windows Update என்பதைப் பயன்படுத்தலாம். அதேபோல மேக் பயனாளர்கள் System Preference-ல் இருக்கும் அப்டேட் என்ற தேர்வினை கிளிக் செய்து தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

உங்கள் லேப்டாப்/கம்ப்யூட்டர் மந்தமாக வேலை செய்கிறதா? டிப்ஸ் இதோ.!

4. உங்கள் லேப்டாப் / கம்ப்யூட்டர் அடிக்கடி ஓவர் ஹீட் ஆகிறதா?

அதேபோல சிஸ்டம் ஹீட்டானாலும் (Over Heat Issue On Laptops) சோர்வடைய வாய்ப்புகள் அதிகம். லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரிலிருக்கும் கூலிங் ஃபேன் (Cooling Fan) சரியாகச் செயல்படாவிட்டால் விரைவாக சிஸ்டம் ஹீட் ஆகிவிடும். இந்த அதிக வெப்பநிலை சர்க்யூட்டை (Circuit) சேதப்படுத்துவது மட்டுமின்றி, உங்கள் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பின் செயல்பாட்டையும் குறைக்கும்.

எனவே எப்போதும் லேப்டாப்பின் அடிப்பகுதி காற்றோட்டமாக இருப்பதை உறுதி செய்து பயன்படுத்த வேண்டும். வெப்பத்தைக் கடத்தும் தன்மை இல்லாத தளங்களில் லேப்டாப்புகளை வைத்து பயன்படுத்துவது இந்த பிரச்சனைகளை அதிகரிக்கும். லேப்டாப்பில் அதிகம் தூசி படிந்து இருந்தாலும் இத்தகைய நிலைமை ஏற்படலாம். அவ்வப்போது லேப்டாப்பை சுத்தம் செய்வது, தூசிகளை நீக்கி கூலிங் ஃபேன் சரியாகச் செயல்படுகிறதா என்பதைக் கவனிப்பது மிகவும் அவசியம்.

உங்கள் லேப்டாப்/கம்ப்யூட்டர் மந்தமாக வேலை செய்கிறதா? டிப்ஸ் இதோ.!

5. உங்கள் லேப்டாப் / கம்ப்யூட்டரை கடைசியாக எப்போது ஸ்கேன் செய்திஈர்கள்?

இது மட்டுமின்றி உங்கள் சிஸ்டத்தில் வைரஸ் தாக்குதல் (Virus attack on systems) இருந்தாலும் அதன் செயல்பாடு சோர்வடையலாம். எப்போதுமே உங்கள் லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில் ஏதேனும் ஒரு ஆன்ட்டிவைரஸ் (Anti Virus) செயல்பாட்டில் இருக்கிறதா என்பதைக் கண்காணித்துக் கொண்டிருப்பது நல்லது.

இந்த விஷயங்களைக் கூர்ந்து கவனித்தால், உங்கள் லேப்டாப் / கம்ப்யூட்டர் எப்போதும் சோர்வடையாமல் இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
How to fix your slow running laptop and computer
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X