பலருக்கும் இந்த Gmail ட்ரிக்-ஐ தெரிஞ்சுக்க ஆசை.. ஆனா கேட்க கூச்சப் படுவாங்க!

|

இன்னமும் கூட ஒவ்வொரு இமெயிலின் கீழேயும் .. Regards என்று டைப் செய்து.. அதை தொடர்ந்து பெயர் மற்றும் உங்கள் பதவி போன்ற விவரங்களை "கைமுறையாக" டைப் செய்யும் வழக்கம் / பழக்கம் உங்களிடம் இருக்கிறது என்றால்..? அதை "கைவிட" வேண்டிய நேரம் வந்து விட்டது!

ஏனெனில் ஜிமெயிலில் அணுக கிடைக்கும்.. அதே சமயம் நம்மில் பலருக்கும் தெரியாத Gmail Signature என்கிற ஒரு அம்சத்தை பற்றி நாம் தெரிந்துகொள்ள போகிறோம்! அதை எப்படி பயன்படுத்துவது என்பது அறிந்துகொள்ள போகிறோம்!

Gmail Signature (ஜிமெயில் சிக்னேச்சர்) என்றால் என்ன?

Gmail Signature (ஜிமெயில் சிக்னேச்சர்) என்றால் என்ன?

அதாவது நீங்கள் அனுப்பும் அல்லது ரிப்ளை செய்யும் ஒவ்வொரு இமெயிலின் முடிவிலும் ஜிமெயில் உங்கள் "கையொப்பம்" (அதாவது உங்கள் பெயர் மற்றும் இதர விவரங்கள்) இடம்பெற வேண்டும் என்றால், நீங்கள் அணுக வேண்டியது Gmail Signature என்கிற அம்சத்தை தான்!

நீங்கள் இந்த ஜிமெயில் சிக்னேச்சரை ஒருமுறை 'ஆட்' செய்துவிட்டால் போதும், ஒவ்வொரு முறையும் நீங்கள் ஒரு இமெயிலை அனுப்பும் போதும் அது தானாக Footer ஆக (இமெயில் மெசேஜின் அடிப்பகுதியாக) சேர்க்கப்படும்.

IRCTC டிப்ஸ்: அடச்சே! இவ்ளோ நாள் இது தெரியாம.. ரயில்ல பயணிச்சி இருக்கோமே!IRCTC டிப்ஸ்: அடச்சே! இவ்ளோ நாள் இது தெரியாம.. ரயில்ல பயணிச்சி இருக்கோமே!

இதனால் என்ன பயன்?

இதனால் என்ன பயன்?

ஜிமெயிலில் Signature அம்சத்தை இயக்குவதன் மூலம், உங்கள் பெயர், காண்டாக்ட் விவரங்கள் மற்றும் உங்கள் நிறுவனத்தின் லோகோ போன்ற பிற முக்கிய விவரங்கள் இல்லாமல் ஒரு இமெயில் அனுப்பப்படவில்லை என்பதை உங்களால் உறுதி செய்ய முடியும்.

ஒருவேளை ஜிமெயிலில் ஒரு Signature-ஐ உருவாக்குவது எப்படி என்று உங்களுக்கு தெரியாதென்றால்.. கீழ்வரும் எளிய வழிமுறைகளை பின்பற்றவும்.

கம்ப்யூட்டர், லேப்டாப், பிசி வழியாக Gmail Signature-ஐ உருவாக்குவது எப்படி?

கம்ப்யூட்டர், லேப்டாப், பிசி வழியாக Gmail Signature-ஐ உருவாக்குவது எப்படி?

- உங்கள் இன்டர்நெட் பிரவுசரில் உள்ள ஜிமெயிலை திறக்கவும்.
- விண்டோவின் மேல் வலது மூலையில் உள்ள Settings விருப்பத்தை கிளிக் செய்து, பின்னர் All Settings என்பதை கிளிக் செய்யவும்.
- பின்னர் Signature பகுதிக்குச் சென்று அங்கே காணப்படும் பாக்ஸில் உங்களின் Signature text-ஐ சேர்க்கவும்.
- கடைசியாக, அந்த பக்கத்தின் கீழே சென்று Save Changes என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும், அவ்வளவு தான்!

பதட்டத்தில் Windows பயனர்கள்.. அடிச்சி புடிச்சி Uninstall பண்றாங்க! ஏன்?பதட்டத்தில் Windows பயனர்கள்.. அடிச்சி புடிச்சி Uninstall பண்றாங்க! ஏன்?

ஆண்ட்ராய்டு ஆப் வழியாக Gmail Signature-ஐ உருவாக்குவது எப்படி?

ஆண்ட்ராய்டு ஆப் வழியாக Gmail Signature-ஐ உருவாக்குவது எப்படி?

- உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் உள்ள Gmail App-ஐ திறக்கவும்.
- ஆப்பின் மேல் இடதுபுறத்தில் உள்ள Menu விருப்பத்தை கிளிக் செய்யவும்.
- இப்போது கிடைக்கப்பெறும் பக்கத்தில் கீழ் நோக்கி ஸ்க்ரோல் செய்து, Settings விருப்பத்தை கிளிக் செய்யவும்.
- பின்னர் நீங்கள் Signature-ஐ சேர்க்க விரும்பும் Google Account-ஐ தேர்ந்தெடுக்கவும்.
- இப்போது Mobile Signature என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும்
- உங்கள் "கையொப்பத்திற்கான" (Signature) டெக்ஸ்ட்-ஐ உள்ளிடவும்
- கடைசியாக OK என்று கிளிக் செய்யவும்; அவ்வளவு தான்!

ஐஓஎஸ் ஆப் வழியாக Gmail Signature-ஐ உருவாக்குவது எப்படி?

ஐஓஎஸ் ஆப் வழியாக Gmail Signature-ஐ உருவாக்குவது எப்படி?

- உங்கள் iPhone அல்லது iPad-இல் உள்ள Gmail App-ஐ திறக்கவும்
- பின்னர் ஆப்பின் Menu விருப்பத்தை கிளிக் செய்யவும்.
- இப்போது கிடைக்கப்பெறும் பக்கத்தில் கீழ் நோக்கி ஸ்க்ரோல் செய்து, Settings விருப்பத்தை கிளிக் செய்யவும்.
- பின்னர் நீங்கள் Signature-ஐ சேர்க்க விரும்பும் Google Account-ஐ தேர்ந்தெடுக்கவும்.
- பின்னர் Signature Settings-ஐ கிளிக் செய்து, Mobile Signature என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும்
- உங்கள் "கையொப்பத்திற்கான" (Signature) டெக்ஸ்ட்-ஐ ஆட் அல்லது எடிட் செய்யவும்.
- கடைசியாக, அது Save ஆக Back-ஐ அழுத்தவும்; அவ்வளவு தான்!

Best Mobiles in India

Read more about:
English summary
How To Add Your Name Contact Company Details as Footer in Every Email Using Gmail Signature Feature.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X