Google-ல உங்க சேர்ச் ஹிஸ்டரி கொஞ்சம் கேவலமா இருக்குமா? இனி அதை மட்டும் டெலிட் பண்ணா போதாது! இதையும் செய்யணும்!

|

அறியாதோர்களுக்கு, கூகுள் சேர்ச் ஹிஸ்டரி (Google Search History) என்பது, கூகுள் வழியாக நீங்கள் என்னென்ன "மேட்டர்களை" எல்லாம் தேடி பார்த்து உள்ளீர்கள் என்கிற விவரங்களை சேகரித்து வைக்கும் ஒரு அம்சம் ஆகும்!

இதைப்பற்றி நன்கு அறிந்தவர்கள், அடிக்கடி அவர்களுடைய கூகுள் சேர்ச் ஹிஸ்டரியை டெலிட் (Delete) செய்யும் வழக்கத்தினை கொண்டிருப்பர். ஆனால் அப்படி செய்வது மட்டும் போதுமா என்று கேட்டால்? - போதாது!

சேர்ச் ஹிஸ்டரியை மட்டும் டெலிட் செய்தால் மட்டும் போதாது!

சேர்ச் ஹிஸ்டரியை மட்டும் டெலிட் செய்தால் மட்டும் போதாது!

ஒருவேளை உங்களுடைய கூகுள் சேர்ச் ஹிஸ்டரி ஆனது கொஞ்சம் முன்பின் இருக்கும் என்றால், அதாவது நீங்கள் கண்டதையும் சேர்ச் செய்து பார்ப்பீர்கள் என்றால்.. அது தொடர்பான தகவல்களை வேறு யாரும் பார்த்து விட கூடாது என்றால்.. உங்கள் ஸ்மார்ட்போனில் அல்லது உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள சேர்ச் ஹிஸ்டரியை மட்டும் டெலிட் செய்தால் போதாது!

இன்னொன்றையும் சேர்த்தே டெலிட் செய்ய வேண்டும்! எதை டெலிட் செய்ய வேண்டும்? ஏன் அதையும் சேர்த்து டெலிட் செய்ய வேண்டும்? அதை செய்வது எப்படி? இதோ விவரங்கள்:

சோமாலியாவில் விழுந்த விண்கல்.. இரண்டாக வெட்டி பார்த்த போது உள்ளே காத்திருந்த அதிர்ச்சி!சோமாலியாவில் விழுந்த விண்கல்.. இரண்டாக வெட்டி பார்த்த போது உள்ளே காத்திருந்த அதிர்ச்சி!

சேர்ச் ஹிஸ்டரியுடன் சேர்த்து இதையும் டெலிட் செய்யவும்!

சேர்ச் ஹிஸ்டரியுடன் சேர்த்து இதையும் டெலிட் செய்யவும்!

அடுத்தமுறை நீங்கள் உங்களுடைய கூகுள் சேர்ச் ஹிஸ்டரியை டெலிட் செய்யும் போது, அதனுடன் சேர்த்து கேச் (Cache) மற்றும் குக்கீஸையும் (Cookies) சேர்த்து கிளியர் (Clear) செய்யவும்.

உண்மையில் கேச் என்பது ஒரு துணை நினைவகம் (Auxiliary memory) ஆகும். அதே போல குக்கீஸ் என்பது உங்களுடைய விருப்பத்தேர்வுகள் (preferences) பற்றிய தகவல்களை சேமிக்கும் சிறிய கோப்புகள் (Small Files) ஆகும். எனவே அவ்வப்போது இவைகளை 'கிளியர்' செய்வதும் கூட அவசியமே!

ஒருவேளை உங்களுக்கு கேச் அண்ட் குக்கீஸை கிளியர் செய்வது எப்படி என்று தெரியாது என்றால், கீழ்வரும் எளிய மற்றும் படிப்படியான வழிமுறைகளை பின்பற்றவும்.

கேச் அண்ட் குக்கீஸை கிளியர் செய்வது எப்படி?

கேச் அண்ட் குக்கீஸை கிளியர் செய்வது எப்படி?

- உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள கூகுள் க்ரோமை திறந்து, ஸ்க்ரீனின் மேல் வலது மூலையில் இருக்கும் த்ரீ டாட் ஐகானை (மூன்று புள்ளிகளை) கிளிக் செய்யவும்.

- இப்போது ஹிஸ்டரி (History) என்பதை கிளிக் செய்யவும்.

- பிறகு, கிளியர் ப்ரவுஸிங் டேட்டா (Clear browsing data) என்பதை கிளிக் செய்யவும்

- இப்போது விண்டோவின் இடது புறத்தில் உள்ள ப்ரைவஸி அண்ட் செக்யூரிட்டி (Privacy and Security) என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும்

போனில் உள்ள ப்ளூடூத்தை அடிக்கடி ஆன் செய்வதற்கு பின்னால் இப்படி ஒரு பிரச்சனை இருக்கோ? அலெர்ட் ஆகிக்கோங்க!போனில் உள்ள ப்ளூடூத்தை அடிக்கடி ஆன் செய்வதற்கு பின்னால் இப்படி ஒரு பிரச்சனை இருக்கோ? அலெர்ட் ஆகிக்கோங்க!

பாதி வேலை முடிந்தது!

பாதி வேலை முடிந்தது!

- இப்போது கிளியர் ப்ரவுஸிங் டேட்டா (Clear browsing data) என்பதை கிளிக் செய்யவும்,

- குக்கீஸ் (Cookies) மற்றும் அதர் சைட் டேட்டா (other site data) மற்றும் கேச்டு இமேஜஸ் அன்ட் பைல்ஸ் (Cached images and files) போன்றவைகளை தேர்வு செய்யவும்.

- கடைசியாக கிளியர் டேட்டா (Clear data) என்பதை கிளிக் செய்யவும். அவ்வளவு தான்! உங்களின் ப்ரவுஸிங் டேட்டா முழுமையாக அழிக்கப்பட்டு விடும்!

ஒருவேளை உங்களுக்கு கூகுள் சேர்ச் ஹிஸ்டரியை டெலிட் செய்ய தெரியாது என்றால், கீழ்வரும் எளிய மற்றும் படிப்படியான வழிமுறைகளை பின்பற்றவும்.

கூகுள் சேர்ச் ஹிஸ்டரியை டெலிட் செய்வது எப்படி? (டெஸ்க்டாப், ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்)

கூகுள் சேர்ச் ஹிஸ்டரியை டெலிட் செய்வது எப்படி? (டெஸ்க்டாப், ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்)

- கூகுள் க்ரோமின் ஹோம் ஸ்க்ரீனுக்குள் நுழையவும். அங்கே ஸ்க்ரீனின் மேல் வலது மூலையில் உள்ள 'த்ரீ டாட்' ஐகானை கிளிக் செய்யவும்

- இப்போது கிடைக்கும் மெனுவில் இருந்து ஹிஸ்டரி (History) என்பதை தேர்ந்தெடுக்கவும்

- பின்னர் ட்ராப்-டவுன் மெனுவில் இருந்து மறுபடியும் ஹிஸ்டரி (History) என்பதை தேர்ந்தெடுக்கவும்.

- இப்போது கிளியர் ப்ரவுஸிங் டேட்டாவை (Clear Browsing Data) தொடர்ந்து பிரவுஸிங் ஹிஸ்டரி (Browsing history) என்பதை தேர்வு செய்யவும்.

இனிமேல் WhatsApp-ல ஒருத்தர பிளாக் பண்ணுறதுக்கு பதிலா.. இப்படி பண்ணுங்க.. வாழ்க்கையே வெறுத்துடுவாங்க!இனிமேல் WhatsApp-ல ஒருத்தர பிளாக் பண்ணுறதுக்கு பதிலா.. இப்படி பண்ணுங்க.. வாழ்க்கையே வெறுத்துடுவாங்க!

பாதி வேலை முடிந்தது!

பாதி வேலை முடிந்தது!

- பின்னர் கால வரம்பை (Time Range) தேர்ந்தெடுக்கவும். குறைந்தது 4 வார ஹிஸ்டரியை தேர்ந்தெடுக்கவும்.

- கடைசியாக கிளியர் டேட்டா (Clear Data) என்பதை கிளிக் செய்யவும்; அவ்வளவு தான் - வேலை முடிந்தது!

மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றுவதற்கு முன், நீங்கள் Ctrl + H என்கிற ஷார்ட் கட்டையும் பயன்படுத்தலாம். இப்படி செய்வதன் வழியாக நீங்க நேரடியாக ஹிஸ்டரி-க்குள் செல்ல முடியும்!

Best Mobiles in India

English summary
Deleting Your Google Search History Is Not Enough Clear Cache And Cookies Also Here Is Why And How

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X