நீண்ட நாட்களுக்கு பிறகு லெனோவோ சூப்பர் லேப்டாப் மாடல்கள் குறைந்த விலையில் அறிமுகம்.!

|

லெனோவோ நிறுவனம் ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப் மாடல்களை அதிகளவு விற்பனை செய்து வந்தது, சியோமி நிறுவனம் இந்தியாவில் பல சாதனங்களை விற்பனைக்கு கொண்டு வந்த பின்பு லெனோவோ நிறுவனத்தின் சாதனங்களுக்கு

மவுஸ் குறைந்து விட்டது. இந்நிலையில் லெனோவோ நிறுவனம் மறுபடியும் முதல் இடத்தை பிடிக்கும் முயற்சியில் புதிய லேப்டாப் மாடல்களை குறைந்த விலையில் அறிமுகம் செய்துள்ளது.

நீண்ட நாட்களுக்கு பிறகு லெனோவோ சூப்பர் லேப்டாப் மாடல்கள் அறிமுகம்.!

லெனோவோ நிறுவனம் தற்சமயம் தின்க்பேட், ஐடியாபேட், திங்க்விஷன் எம்14 மானிட்டர், 14w Enterprise, போன்ற சாதனங்களை உலக மொபைல் காங்கிரஸ் நிகழ்ச்சியில் அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்த சாதனங்கள் அனைத்தும் விரைவில் இந்திய சந்தைக்கு விற்பனைக்கு கொண்டுவரப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லெனோவோ ஐடியாபேட்:

லெனோவோ ஐடியாபேட்:

ஐடியாபேட் எஸ்340 லேப்டாப் சாதனம் 8-வது ஜென் இன்டெல் கோர் ஐ செயலி மற்றும் AMD Ryzen 7 3700U செயலி ஆதரவுடன் விற்பனைக்கு வரும். பின்பு மெல்லிய உடல் மற்றும் பேக்லைட் கீபோர்டு வசதியைக் கொண்டுள்ளது இந்த சானதனம். ஐடியாபேட் எஸ்340 லேப்டாப் சாதனத்தின் இந்திய விலை மதிப்பு ரூ.26,300-ஆக உள்ளது.

ஐடியாபேட் சி340 லேப்டாப் 14-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும், மேலும் லேப்டாப் அல்லது டேப்லெட் போன்று இந்த சாதனத்தை பயன்படுத்தி கொள்ளமுடியும். பின்பு ஏஎம்டி சிப்செட், கைரேகை ஸ்கேனர், வெப்கேமரா, ஆக்டிவ் பென் உட்பட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த சாதனம். இந்த சாதன்தின் ஆரம்ப விலை ரூ.32,000-ஆக உள்ளது.

ஐடியாபேட் எஸ்540 ரேபிட்சார்ஜ் தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது, பின்பு ஏஎம்டி சிப்செட் வசதி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளைக் கொண்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் ஆரம்ப விலை ரூ.51,800-ஆக உள்ளது.

லெனோவோ தின்க்பேட்:

லெனோவோ தின்க்பேட்:

லெனோவோ தின்க்பேட் டி490எஸ், தின்க்பேட் டி490, தின்க்பேட் டி590, தின்க்பேட் எக்ஸ்390 சாதனங்கள் தற்சமயம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி தின்க்பேட் டி490எஸ், தின்க்பேட் டி490 சாதனங்கள் 14-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது, மேலும் இந்த சாதனங்களின் ரேம் மற்றும் மெமரி, சிப்செட் போன்றவற்றில் மாறுபாடுகள் இருக்கும். குறிப்பாக இந்த சாதனங்களின் ஆரம்ப விலை ரூ.70,900-ஆக இருக்கிறது.

தின்க்பேட் டி590 சாதனம் 15.6-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும், பின்பு 4கே டால்பி விஷன் எச்டிஆர் மற்றும் 500nit brightness ஆதரவு கொண்டுள்ளது இந்த சாதனம். மேலும் 8-வது ஜென் இன்டெல் கோர் ஐ7 செயலியைக் கொண்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் ஆரம்ப விலை ரூ.73,000- உள்ளது

தின்க்பேட் எக்ஸ்390 சாதனம் 13-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பினபு பெசல்ஸ் வடிவமைப்பு மற்றும் இன்டெல் கோர் ப்ரோ ஐ7 செயலி இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் கிராபிக்ஸ் 620 சிப்செட், 32ஜிபி ரேம் போன்ற பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான லேப்டாப். பின்பு இந்த சாதனத்தின் ஆரம்ப விலை ரூ.78,000-ஆக உள்ளது.

திங்க் விஷன் எம்14 மானிட்டர்:

திங்க் விஷன் எம்14 மானிட்டர்:

திங்க் விஷன் எம்14 மானிட்டர் 14-இன்ச் எப்எச்டி டிஸ்பிளே வடிவமைப்புடன் வளிவந்துள்ளது. மேலும் 4.6எம்எம் தடிமன், யுஎஸ்பி-போர்ட், எச்டிஎம்ஐ போர்ட்,போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். பின்பு இந்த சாதனத்தின் எடை 590 கிராம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ரூ.17,700-விலையில் இந்த சாதனம் விற்பனைக்கு வரும்.

லெனோவோ க்ரோம்புக்:

லெனோவோ க்ரோம்புக்:

அதேபோன்று லெனோவோ 14w Enterprise மற்றும் 14இ க்ரோம்புக் Enterprise சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது, இந்த சாதனங்கள் 14-இன்ச் டிஸ்பிளே மற்றும் ஏஎம்டி 3ஜிகாஹெர்ட் சிப்செட் வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் லெனோவோ 14w Enterprise சாதனத்தை ரூ.19,800-விலையில் விற்பனைக்கு வரும். அதேபோன்று 14இ க்ரோம்புக் Enterprise சாதனம் ரூ.21,200-விலையில் விற்பனைக்கு வரும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
MWC 2019: Lenovo unveils new IdeaPad and ThinkPad laptops, Chromebook and monitors : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X