Home
Tablets

எக்கச்சக்கமா குவியுது ஆர்டர்.. 7500mAh பேட்டரி.. 11 இன்ச் டிஸ்பிளே.. ஆஃபரில் Lenovo டேப்லெட்.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் MediaTek Days Sale எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல்வேறு ஸ்மார்ட்போன்கள், டேப்லெட், ஸ்மார்ட் டிவி உள்ளிட்ட பல சாதனங்களுக்குத் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் இந்த அமேசான் சிறப்பு விற்பனையில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த லெனோவா டேப் பி11 மாடலுக்கு 54 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த டேப்லெட் ரூ.17,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டேப்லெட் மாடலை வாங்கினால் ரூ.1,799 தள்ளுபடியும் உள்ளது. எனவே ரூ.16200 இருந்தால் போதும் இந்த டேப்லெட் மாடலை வாங்கிவிட முடியும்.

எக்கச்சக்கமா குவியுது ஆர்டர்.. ஆஃபரில் Lenovo டேப்லெட்.. எந்த மாடல்?

லெனோவா டேப் பி11 அம்சங்கள் (Lenovo Tab P11 Specifications): 11.5-இன்ச் 2கே ஃபுல் எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளே ( IPS Display) வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது லெனோவா டேப் பி11. மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 400 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு கொண்டுள்ளது இந்த டேப்லெட் மாடலின் டிஸ்பிளே. குறிப்பாக இந்த டிஸ்பிளே சிறந்த திரை அனுபவம் வழங்கும்.

தரமான மீடியாடெக் ஜி99 ஆக்டோ-கோர் பிராசஸர் (MediaTek Helio G99 Octa-core Processor) வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த லெனோவா டேப் பி11 மாடல். எனவே இந்த டேப்லெட் மாடலில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும். சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் மீடியாடெக் ஜி99 ஆக்டோ-கோர் பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

தனித்துவமான டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட ஸ்மார்ட் குவாட் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது லெனோவா டேப் பி11 மாடல். எனவே இந்த டேப்லெட் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். குறிப்பாக இந்த லெனோவா டேப் பி11 மாடலின் மென்பொருள் மற்றும் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது லெனோவா நிறுவனம்.

ஆண்ட்ராய்டு 12எல் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த லெனோவா டேப் பி11 மாடல் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த டேப்லெட் மாடலுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த டேப்லெட் மாடலை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த லெனோவா டேப்லெட் மாடல்.

மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த டேப்லெட். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த டேப்லெட் மாடலில் உள்ளது. குறிப்பாக லெனோவா டேப் பி11 ஆனது 7500 எம்ஏஎச் பேட்டரியுடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த டேப்லெட் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இதன் பேட்டரியை சார்ஜ் செய்ய 20 வாட்ஸ் குவிக் சார்ஜ் வசதியும் உள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடலை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். மேலும் இந்த டேப்லெட் மாடல் ஆனது கைரேகை ஸகேனர் ஆதரவுடன் வெளிவந்துள்ளது.

எக்கச்சக்கமா குவியுது ஆர்டர்.. ஆஃபரில் Lenovo டேப்லெட்.. எந்த மாடல்?

எல்இடி பிளாஸ் ஆதரவு கொண்ட 13எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த லெனோவா டேப் பி11 மாடல். எனவே இந்த டேப்லெட் உதவியுடன் அட்டகாசமான படங்களை எடுக்க முடியும். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா வசதி இந்த டேப்லெட் மாடலில் உள்ளது. இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் கொண்டு வெளிவந்துள்ளது இந்த லெனோவா டேப் பி11 மாடல்.

வைஃபை 6(Wi-Fi 6), புளூடூத் 5.2 (Bluetooth 5.2), ஜபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த டேப்லெட் மாடல். அனைத்து அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் இந்த டேப்லெட் மாடலை கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
54 Percent Discount on Lenovo Tab P11 With IPS Display in Amazon Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X