6.5-இன்ச் 4கே ஒஎல்இடி டிஸ்பிளேவுடன் அசத்தலான எக்ஸ்பீரியா 1 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
இந்த சாதனத்தின் பின்புறம் 12எம்பி பிரைமரி கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு- ஆங்கிள் லென்ஸ் + 12எம்பி டெலிபோட்டோ லென்ஸ் பொறுத்தப்பட்டுள்ளது.
சோனி நிறுவனம் நீண்ட நாட்களுக்கு பிறகு புதிய எக்ஸ்பீரியா 1 ஸ்மார்ட்போனினை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் மூன்று கேமரா இடம்பெற்றுள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.

மேலும் எக்ஸ்பீரியா 1 சாதனம் சினிமா ப்ரோ சினி ஆல்டா 21:9 தரத்தில் 4கே ஹெச்.டி.ஆர் வீடியோக்களை படமாக்கும் திறன் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சாதனத்தின் விலை மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:
இந்த ஸ்மார்ட்போன் 6.5-இன்ச் 4கே ஒஎல்இடி ஹெச்.டி.ஆர் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1644x3840 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

சிப்செட்:
சோனி எக்ஸ்பீரியா 1 ஸ்மார்ட்போன் பொதுவாக குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 7.என்.எம் சிப்செட் உடன் அட்ரினோ 640 ஜிபியு வசதியைக் கொண்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கேமரா:
இந்த சாதனத்தின் பின்புறம் 12எம்பி பிரைமரி கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு- ஆங்கிள் லென்ஸ் + 12எம்பி டெலிபோட்டோ லென்ஸ் பொறுத்தப்பட்டுள்ளது. பின்பு 8எம்பி செல்பீ கேமரா இவற்றுள் அடக்கம். மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

சேமிப்பு:
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது சோனி எக்ஸ்பீரியா 1 ஸ்மார்ட்போன், மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் அடக்கம். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார்
இடம்பெற்றுள்ளது.

பேட்டரி-விலை
3300எம்ஏஎச் பேட்டரி ஆதரவு கொண்டுள்ளது எக்ஸ்பீரியா 1 ஸ்மார்ட்போன், பின்பு 4ஜி வோல்ட்இ, வைபை,ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் எக்ஸ்பீரியா 1
ஸ்மார்ட்போனின் இந்திய விலை மதிப்பு ரூ.74,270-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications








