Home
Gadgets

தூள் பறக்குது ஆர்டர்.. ரூ.15,999 விலைக்கு வந்த ரூ.31,000 விலை Tablet.. 11" இன்ச் FHD டிஸ்பிளேவுடன் எந்த மாடல்?

பட்ஜெட் ஸ்மார்ட்போனை விட குறைந்த விலையில் யாராவது ஒரு சக்தி வாய்ந்த டேப்லெட் (Tablet) சாதனத்தை வழங்க முடியுமா? என்ற கேள்விக்கு முடியும் என்று பதிலளித்துள்ளது லெனோவா (Lenovo). லெனோவா டேப் எம்11 (Lenovo Tab M11) இப்போது சலுகையை பெற்றுள்ளது.

லெனோவா நிறுவனம் சமீபத்தில் அதன் லெனோவா டேப் எம்11 (Lenovo Tab M11) டேப்லெட் சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இப்போது, இந்த டேப்லெட் சாதனத்தை நிறுவனம் மிகவும் குறைந்த விலையில் 42% சதவீத தள்ளுபடியுடன் பாதிக்கு பாதி நிகரான விலையில் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. உண்மையை சொல்ல போனால், பட்ஜெட் விலையில் வாங்க கிடைக்கும் ஸ்மார்ட்போனை விட இதன் விலை மிகவும் குறைந்துள்ளது.

தூள் பறக்குது ஆர்டர்.. ரூ.15,999 விலைக்கு வந்த ரூ.31,000 விலை Tablet..

லெனோவா டேப் எம்11 டேப்லெட் (Lenovo Tab M11 Tablet):

இந்த லெனோவா டேப் எம்11 (Lenovo Tab M11) டேப்லெட் சாதனத்தின் அசல் விலை ரூ. 31,000 என்று அமேசான் இந்தியா (Amazon India) பக்கம் குறிப்பிட்டுள்ளது. ஆனால், இப்போது அறிவிக்கப்பட்ட 42% சலுகைக்கு பிறகு, இந்த டேப்லெட் சாதனத்தை மக்கள் வெறும் ரூ. 17,999 என்ற மிகவும் குறைந்த விலையில் வாங்கிட முடியும். இதற்கும் மேல் கூடுதலாக ரூ.2000 வரையிலான எக்ஸ்ட்ரா தள்ளுபடியை பெறவும் சிலருக்கு வாய்ப்பிருக்கிறது.

இதன் மூலம் இந்த டேப்லெட்டை ரூ. 15,999 விலையில் வாங்கலாம். சில குறிப்பிட்ட வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயனர்களுக்கு இந்த கூடுதல் தள்ளுபடி கிடைக்கிறது. 19 விதமான வங்கி தள்ளுபடியும் இந்த சாதனத்துடன் வாடிக்கையாளர்கள் பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த லெனோவா டேப் எம்11 சாதனத்தின் சிறப்பம்சங்களை பற்றி இப்போது பார்க்கலாம். இது 11" இன்ச் கொண்ட WUXGA IPS டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

இந்த டிஸ்பிளே 1920x1200 பிக்சல், 400 நீட்ஸ் பிரைட்னஸ் மற்றும் 90Hz ரெஃப்ரஷ் ரேட் (Refresh Rate) உடன் 72% NTSC போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. இது ஒரு தரமான மற்றும் நம்பகமான FHD டிஸ்பிளேவாகும். இது மீடியாடெக் ஹீலியோ ஜி88 ஆக்டா கோர் சிப்செட் (Mediatek Helio G88 Octa-Core Processor) உடன் வருகிறது. இந்த டேப்லெட் சாதனம் 8GB ரேம் (RAM) அம்சத்தை கொண்டுள்ளது.

தூள் பறக்குது ஆர்டர்.. ரூ.15,999 விலைக்கு வந்த ரூ.31,000 விலை Tablet..

1TB வரை மெமரி.. 13MP கேமரா.. டால்பி அட்மாஸ் ஸ்பீக்கர்.. நம்பிக்கையான Lenovo Tab M11 Tablet..

இது 128GB ஸ்டோரேஜ் (Storage) உடன் 1TB வரையிலான மைக்ரோ எஸ்டி (microSD) மெமரியை வழங்குகிறது. இது ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதளத்துடன் இயங்குகிறது. இந்த லெனோவா டேப்லெட் (Lenovo Tablet) 7040mAh கொண்ட பேட்டரியை பேக் செய்கிறது. இது 10 மணி நேரத்திற்கு மேம்பட்ட பயன்பாட்டு நேரத்தை வழங்குகிறது. இது குவாட் ஸ்பீக்கர் (Quad Speakers) உடன் டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவை கொண்டுள்ளது.

இந்த டேப்லெட் 13MP சிங்கிள் ரியர் கேமரா உடன் வருகிறது. இந்த ரியர் கேமரா ஆட்டோபோகஸ், 1080 பிக்சல்ஸ் வீடியோ பதிவு போன்றவற்றை ஆதரிக்கிறது. அதேபோல், இதன் செல்பி கேமராவும் 1080 பிக்சல்ஸ் வீடியோ பதிவு செய்ய அனுமதிக்கிறது. ஆனாள், முன்பக்கத்தில் இந்த சாதனம் 8MP செல்பி கேமராவை கொண்டுள்ளது. இறுதியாக இது 465 கிராம் எடையுடன், 7.1mm ஸ்லிம் சைஸில் வெளிவந்துள்ளது.

இன்னும் சிறிய ஸ்மார்ட்போன் டிஸ்பிளேவை பயன்படுத்தாமல், ஸ்மார்ட்போன் விலைக்கு 11" இன்ச் டிஸ்பிளேவுடன் ஒரு பெரிய மற்றும் புதிய டேப்லெட் சாதனத்தை வாங்கி பயன்பெறுங்கள். பட்ஜெட் விலையில் மிகவும் நம்பகமான டேப்லெட் பிராண்ட் என்ற பெயரை லெனோவா நிறுவனம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Lenovo Tab M11 Tablet With 11 Inch Display Gets Rs 15999 Price After 42 Percentage Discount In Amazon India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X