ஆர்டர் போட்ருங்க.. 7700mAh பேட்டரி.. டால்பி அட்மாஸ்.. ஆஃபரில் Lenovo டேப்லெட்.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் லெனோவா டேப் எம்10 மாடலுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த டேப்டெல் குவாட்ஸ் ஸ்பீக்கர்கள், ஸ்னாப்டிராகன் பிராசஸர், 7700எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது லெனோவா டேப் எம்10 மாடலுக்கு அமேசான் தளத்தில் 54 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த டேப்லெட் தற்போது ரூ.12,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டேப்லெட் மாடலை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் உள்ளது.

எனவே இப்போது லெனோவா டேப் எம்10 மாடலை ரூ.10,999 விலையில் வாங்கிவிட முடியும். மேலும் லெனோவா டேப் எம்1 மாடலின் சிறப்பு அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.
லெனோவா டேப் எம்10 அம்சங்கள் (Lenovo Tab M10 Specifications): 10.61-இன்ச் 2கே ஐபிஎஸ் டிஸ்பிளே வசதியுடன் இந்த லெனோவா டேப் எம்10 மாடல் வெளிவந்துள்ளது. மேலும் 2000x1200 பிக்சல்ஸ், 400 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த டேப்லெட் மாடலின் டிஸ்பிளே. பெரிய டிஸ்பிளே உடன் இந்த டேப்லெட் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
டால்பி அட்மாஸ் ஆதரவு கொண்ட குவாட் ஸ்பீக்கர்கள் உடன் இந்த லெனோவா டேப் எம்10 மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. எனவே இந்த டேப்லெட் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். குறிப்பாக இந்த டேப்லெட் மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது லெனோவா நிறுவனம்.அதேபோல் தரமான மென்பொருள் வசதியுடன் இந்த டேப்லெட் வெளிவந்துள்ளது
அதாவது லெனோவா டேப் எம்10 மாடல் சக்திவாய்ந்த சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் எஸ்டிஎம் 680 பிராசஸர் உடன் வெளிவந்துள்ளது. இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த சாதனம் வெளிவந்தது. ஆனால் இந்த சாதனத்திற்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
லெனோவா டேப் எம்10 மாடல் ஆனது 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது. மேலும் கூடுதலா மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ள இந்த அசத்தலான டேப்லெட். அதாவது நீங்கள் 1டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான டேப்லெட்.

லெனோவா டேப் எம்10 மாடலில் எல்இடி பிளாஷ் ஆதரவு கொண்ட 8எம்பி ரியர் கேமரா வசதி உள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கு என்றே 8எம்பி கேமராவுடன் இதில் உள்ளது. இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம். ஆனால் 8எம்பி ரியர் கேமராவுக்கு பதிலாக 13எம்பி கேமரா கொடுக்கப்பட்டிருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும்.
7700எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த லெனோவா டேப் எம்10 மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக 12 மணி நேரம் வீடியோ பிளேபேக் வழங்கும் இந்த டேப்லெட். குறிப்பாக இந்த டேப்லெட் மாடலை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் வைஃபை, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன.


Click it and Unblock the Notifications








