இது மேஜிக் போன்லாம் இல்லை! ஆனா உலகத்திலேயே இது தான் ரொம்ப வித்தியாசமான போன்!
சாத்தியம் இல்லாத விஷயங்களைச் சாத்தியமாக்கி சாதனை புருவத்தில் இருக்கும் பெருமிதம் வேறு எந்தவொரு விஷயத்திலும் கிடைக்காது. அப்படியான ஒரு புதிய சாதனையைத் தான் மோட்டோரோலா (Motorola) நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
இந்த செய்தியை நம்புவதற்கு உங்களில் சிலருக்கு கடினமாக இருக்கலாம். ஆனால், உலகம் முழுவதும் உள்ள மக்கள் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை வாங்க துவங்கிவிட்டனர். அதாவது, போல்டப்பில் மொபைல் சாதனங்களை அதிகமாக வாங்க துவங்கிவிட்டனர். போல்டப்பில் சாதனம் என்று பார்க்கையில், சாம்சங் நிறுவனம் தான் முன்னணியில் இருந்து வருகிறது. மற்ற OEMகள் இந்தப் பிரிவில் புதுமைகளைப் புகுத்த முயற்சி செய்து வருகின்றனர்.

உலகத்திலேயே இது தான் ரொம்ப வித்தியாசமான போன்!
அந்த வகையில், மிகவும் தனித்துவமான உருட்டக்கூடிய (Rollable) மற்றும் மடிக்கக்கூடிய (Foldable) டிஸ்பிளே கொண்ட ஒரு புது ஸ்மார்ட்போன் சாதனத்திற்கான காப்புரிமைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் சில CES மற்றும் MWC உட்பட பல்வேறு தொழில்நுட்ப காட்சிகளில் கான்செப்ட் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இப்போது நிகழும் MWC 2023 நிகழ்வில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஒரு ஆதாரமான சாதனமான Motorola Rizr சாதனம்.
இது ஒரு 'ப்ரூப் ஆப் கான்செப்ட்' சாதனம் ஆகும். ப்ரூப் ஆப் கான்செப்ட் சாதனம் என்றால், அசாதாரணமான ஒரு யோசனை இப்போது சாத்தியம் ஆனது என்று பொருள். ஆனால், இது இன்னும் சந்தை படுத்த தயாராகவில்லை என்று அர்த்தம். மோட்டோரோலாவில் இருந்து உருட்டக்கூடிய போன் ஒரு முன்மாதிரி நிலையில் உள்ளது. இது உற்பத்திக்கு வருமா? விற்பனைக்குக் கொண்டுவரப்படுமா? என்று பிராண்டிற்குத் தெரியவில்லை.
MWC இல் இந்த புதிய ரோலிங் டிஸ்பிளே போனை மோட்டோரோலா நிறுவனம் காண்பிப்பதன் பின்னணியில் உள்ள யோசனை என்னவென்றால், ரோலப்பில் டிஸ்பிளே சாதனத்தை உருவாக்க பிராண்ட் முயன்றுள்ளது என்பதை உலகுக்குக் காண்பித்துள்ளது. இந்த மாடல் சாதனத்தின் பயன்பாடுகள், மற்றும் கோளாறுகளைச் சோதித்த பின்னர் இதை வியாபார நோக்கத்திற்காக நிறுவனம் உருவாக்குமா என்பதை நாம் பார்க்க வேண்டும்.

சின்ன சைஸ்-டு-பெரிய சைஸிற்கு நொடியில் மாறும் Motorola Rizr ரோலப்பில் போன்!
இயல்பு நிலையில், மோட்டோரோலா ரிஸ்ர் சாதனம், ஒரு சிறிய 5 இன்ச் அளவு கொண்ட டிஸ்பிளேவை வழங்குகிறது. இது சிறியதாக இருந்தாலும், இந்த டிவைஸின் வடிவம் தேவைப்படும் நேரத்தில் பெரிதாகும் படி உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனம் பாக்கெட் பிரெண்ட்லி சைசில் வருகிறது. இந்த சாதனத்தின் பக்கவாட்டில் உள்ள ஒரு பட்டனை இருமுறை அழுத்தினால், டிஸ்பிளே செங்குத்தாக உருளும்.
மோட்டோரோலா செங்குத்தாக உருளும் டிஸ்பிளேவை பல நோக்கத்திற்காக வழங்குகிறது. உதாரணமாக, யூடியூப் வீடியோவை நீங்கள் இயக்கும் நேரத்தில், இந்த சாதனத்தைக் கிடைமட்டமாக வைத்திருந்தால், டிஸ்பிளே தானாக பெரிய பார்வை அனுபவத்தை வழங்க, விரிந்து கொடுக்கும் தன்மை கொண்டதாக உள்ளது. அதேபோல், ஜிமெயில் பயன்பாட்டைத் திறந்து, ஒரு ஈமெயிலை எழுத முயன்றால், போன் செங்குத்தாக விரியும்படி உருவாக்கப்பட்டுள்ளது.
மோட்டோரோலா ரிஸ்ர் ஃபோனின் டிஸ்பிளே கீழே வளைந்து, பின்புறத்தில் இரண்டாம் நிலை டிஸ்பிளேவாக செயல்படுகிறது. இரண்டாம் நிலைத் டிஸ்பிளேவானது Samsung Galaxy Z Flip4 அல்லது OPPO Find N2 Flip ஐப் போலவே, கிளாக், நோட்டிபிகேஷன் மற்றும் அழைப்பு விபரங்களை காண்பிக்கிறது. இந்த சாதனம் இப்போது MWC 2023 நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மாடலை மோட்டோரோலா நிறுவனம் சந்தைப்படுத்துமா என்பது தெரியவில்லை.


Click it and Unblock the Notifications