Subscribe to Gizbot

நோக்கியா 3310: நான் வந்துட்டென்னு சொல்லு.. திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.

Written By:

இம்மாத இறுதியில் பார்சிலோனாவில் நடைபெறவுள்ள MWC டெக்னாலஜி கண்காட்சியில் நோக்கியா நிறுவனம் மீண்டும் புத்துணர்ச்சியுடன் தனது புதிய தயாரிப்பை அரிமுகம் செய்யவுள்ளது.

நோக்கியா 3310: நான் வந்துட்டென்னு சொல்லு.. திரும்ப வந்துட்டேன்னு சொல்ல

தற்போதைய ஸ்மார்ட்போன் போட்டி மார்க்கெட்டில் நோக்கியாவின் அறிமுக போன்களுக்கும் கண்டிப்பாக ஒரு இடம் கிடைக்கும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது. இந்நிலையில் ஸ்மார்ட்போன் மட்டுமின்றி தனது பழைய மாடலான நோக்கியா 3310 மாடல் போனையும் மீண்டும் சந்தைக்கு கொண்டு வர நோக்கியா முடிவு செய்துள்ளதாம்

இப்போது நாம் வாழ்வது ஸ்மார்ட்போன் உலகில். மிக அதிக வசதிகளான டூயல் கேமிரா, அதிக நாட்கள் பயன் தரும் பேட்டரி, பெஸல் லெஸ் டிசைன், உள்பட அடுத்த தலைமுறை வசதியுள்ள போன்களுடன் வாழ்ந்து வருகிறோம்.

அசுஸ் அதிரடி : இனி இன்டெக்ஸ், லாவா & மைக்ரோமேக்ஸ் காலி.!

ஆனால் நோக்கியா தனது ஆரம்பகால மாடலான நோக்கியா 3310 மாடலை மீண்டும் கொண்டு வருவது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஆனால் கண்டிப்பாக ஏதாவது ஒரு காரணம் இல்லாமல் தற்போது இந்த மாடல் வெளிவராது.

இந்நிலையில் நோக்கியா 3310 மாடல் குறித்த மலரும் நினைவுகளை கொஞ்சம் அசை போடுவோமா

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஒவ்வொருவரும் பயன்படுத்திய போன் நோக்கியா 3310

ஒவ்வொருவரும் பயன்படுத்திய போன் நோக்கியா 3310

கடந்த 2000ஆம் ஆண்டுகளில் மொபைல் போன் நமக்கு புதியதாக அறிமுகமானபோது, நோக்கியா 3310 மாடலை பயன்படுத்தாதவர்கள் இருக்கவே முடியாது.

இந்த போனின் மிகச்சிறந்த சிறப்பு என்னவெனில் தவறி கீழே விழுந்தாலும் எதுவும் ஆகாது, ஏன் இன்னும் சொல்ல போனால் தண்ணீருக்குள் விழுந்தால் கூட எடுத்து துடைத்துவிட்டு மீண்டும் இயக்கினால் இயங்கும். அந்த அளவுக்கு சிறப்பு உடையது இந்த நோக்கியா 3310 போன்

நோக்கியா 3310 போனின் இந்த சிறப்பு எந்த போனுக்கு இல்லை:

நோக்கியா 3310 போனின் இந்த சிறப்பு எந்த போனுக்கு இல்லை:

மக்களின் மனதை கவர்ந்த நோக்கியா 3310 போன், முதன்முதலில் சிலவற்றை அறிமுகம் செய்தது என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், இன்று சேட்டிங் என்றால் சிறு குழந்தையும் தெரியும் அளவுக்கு இருந்தாலும், முதன்முதலில் எஸ்.எம்.எஸ் சேட்டிங் என்பது இதில்தான் அறிமுகம் ஆனது.

அதுமட்டுமின்றி இந்த போனின் பேட்டரியில் தொடர்ந்து 4.5 மணி நேரம் பேசலாம். அந்த அளவுக்கு பேட்டரி இருக்கும். பேசாமல் வைத்திருந்தால் சுமார் 260 மணி நேரம் வரை பேட்டரி தாங்கும்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கும்?

எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கும்?

மீண்டும் நமது பழைய நினைவுகளை கொண்டு வர வெளிவர இருக்கும் இந்த போன் நிச்சயம் வாடிக்கையாளர்களை கவரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மிக அதிக சக்தி வாய்ந்த நிக்கல் மெடல் ஹைட்ரேட் பேட்டரியுடன் இந்த போன் வெளிவரும் என்றும் இந்த போனின் விலை சுமார் ரூ.4000 என்று இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

என்னென்ன வசதிகள் நோக்கியா 3310-ல் இணைக்கவுள்ளது என்பது தெரியுமா?

என்னென்ன வசதிகள் நோக்கியா 3310-ல் இணைக்கவுள்ளது என்பது தெரியுமா?

ஸ்மார்ட்போன்களின் விலையே தற்போது குறைந்துவரும் நிலையில் பேசிக் போனை யாராவது அதிக விலை கொடுத்து வாங்குவார்களா? என்று கேட்பவர்களுக்காக ஒரு செய்தி. இந்த நோக்கியா 3310, முன்பு வந்த மாதிரியே வரப்போவதில்லை. இப்போதைய டெக்னாலஜியுடன் இணைந்துதான் வரவுள்ளது. குறிப்பாக இந்த போனில் 4G, LET மற்றும் VoLTe ஆகியவை உள்பட தற்கால பல டெக்னாலஜி அம்சங்கள் இதில் உள்ளது

கண்டிப்பாக பேசிக் போன் கிடையாது

கண்டிப்பாக பேசிக் போன் கிடையாது

முன்பே வந்த அதே மாடல் திரும்பவும் வரவுள்ளதாக யாரும் நினைக்க வேண்டாம். அதே பெயரில் வந்தாலும் கண்டிப்பாக ஸ்மார்ட்போனில் உள்ள பல வசதிகள் இதில் இருக்கும். அதே நேரத்தில் அதிகளவு பேட்டரி திறன் மற்றும் கீழே விழுந்தால் உடையாத தன்மை ஆகியவை நிச்சயம் இருக்கும்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Nokia 3310 is expected to be launched at the MWC 2017 when the smartphone s are ruling the market. Read more...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot