டேட்டாவின்ட் வழங்கும் டேப்லெட் அக்சஸரிகள்!

Posted By: Karthikeyan
டேட்டாவின்ட் வழங்கும் டேப்லெட் அக்சஸரிகள்!

டேட்டாவிண்ட் நிறுவனம் தனது உபிஸ்லேட் ஆன்ட்ராய்டு டேப்லெட்டுகளுக்கு பல புதிய அக்சஸரிகளை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த அக்சஸரிகளின் விலையும் சாதாரண மக்களும் வாங்கும் அளவிற்கு குறைவாக இருக்கிறது. இந்த அக்சஸரிகள் உபிஸ்லேட் டேப்லெட்டை வைத்திருப்போருக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

இந்த அக்சஸரிகளில் முதலாவதாக பயோமெட்ரிக் ஸ்கேனர் என்ற ஒன்ற டேட்டாவிண்ட் களமிறக்குகிறது. இந்த ஸ்கேனரின் விலை ரூ.4000 ஆகும். இந்த ஸ்கேனர் கைரேகைப் பதிவு மற்றும் யுஎஸ்பி இணைப்புடன் வருகிறது.

அடுத்ததாக ரூ.9900க்கு ஒரு சேட்டிலைட் ஹார்ட் ட்ரைவை களமிறக்குகிறது டேட்டாவிண்ட். இந்த ஹார்ட் ட்ரைவின் பேட்டிரி திறன் 7 மணி நேரம் ஆகும். இந்த ஹார்ட் ட்ரைவ் யுஎஸ்பி மற்றும் வைபை ஆகிய வசதிகளுடன் வருகிறது. அதோடு ஒரு புதிய 3ஜி டோங்குளையும் இந்த டேட்டாவிண்ட் களமிறக்குகிறது.

மேலும் திரை சீலைகள், டஸ்ட் கவர்கள், நியோப்ரேன் பவுச்சுகள், ஸ்லீவ்கள் மற்றும் சிலிகான் கவர்கள் என்று ரூ.45 முதல் ரூ.150 வரையில் பல சாதனங்களை களமிறக்குகிறது டேட்டாவிண்ட். அதுபோல் டேப்லெட்டிற்கான ஒரு பெட்டி மற்றும் ஒரு கீபோர்ட் ஆகியவற்றை ரூ.550க்கு வழங்குகிறது.

இவற்றைத் தவிர்த்து ஒரு கார் சார்ஜரை ரூ.300க்கும், ஒரு எக்ஸ்டர்னல் ஆன்டனாவை ரூ.350க்கும் வழங்குகிறது.

மேலும் பேட்டரியின் நீடித்த பேக்கப்பிற்காக சூரிய சக்தி கொண்ட ஒரு பேட்டரி எக்ஸ்டன்டரை ரூ.550க்கு வழங்குகிறது. அதுபோல் பேட்டரி திறனை இரட்டிப்பாக்கும் ஒரு புதிய பேட்டரி எக்ஸ்டன்டரை ரூ.800க்கு வழங்குகிறது.

அதுபோல் 4ஜிபி யுஎஸ்பி மெமரி ட்ரைவை ரூ.450க்கும் 8ஜிபி மெமரி ட்ரைவை ரூ.800க்கும் டேட்டா விண்ட் வழங்குகிறது. அதுபோல் ஒரு மைக்ரோபோனை ரூ.300க்கு வழங்குகிறது.

மேலும் யுஎஸ்பி வசதி கொண்ட ஒரு பார்கோட் ஸ்கேனரை ரூ.1600க்கு வழங்குகிறது. மேலும் பல அக்சஸரிகளையும் டேட்டாவிண்ட் வழங்குகிறது. இந்த அக்சஸரிகளை டேட்டாவிண்டின் ஆன்லைன் ஸ்டோரில் வாங்கிக் கொள்ளலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot