சூப்பாரான தொழில் நுட்பங்களுடன் ஆசஸின் புதிய 3டி ஐபிஎஸ் எல்இடி மானிட்டர்

Posted By: Karthikeyan
சூப்பாரான தொழில் நுட்பங்களுடன் ஆசஸின் புதிய 3டி ஐபிஎஸ் எல்இடி மானிட்டர்

ஆசஸ் நிறுவனம் சமீபத்தில் புதிய 3டி ஐபிஎஸ் எல்இடி மானிட்டரை அறிமுகம் செய்து வைத்திருக்கிறது. விஜிஎ23எஎச் என்று அழைக்கப்படும் இந்த மானிட்டரின் விலை ரூ.18,500லிருந்து ஆரம்பிக்கிறது.

இந்த எல்இடி மானிட்டரில் ஏராளமான வசதிகள் உள்ளன. இந்த மானிட்டர் 178 வரை எந்த கோணத்திலும் தெளிவாகத் தெரியும். இந்த மானிட்டரில் ஆசஸ் ஸ்மார்ட் கான்ட்ராஸ்ட் ரேசியோ மற்றும் வீடியோ இன்டலிஜென்ஸ் தொழில் நுட்பம் உள்ளதால் இதில் முழு எச்டி விசுவல்ஸ் மிக அருமையாக இருக்கும்.

இந்த விஜி23எஎச் மானிட்டர் ஆசஸ் ஆல் இன் 3டி தொழில் நுட்பத்தைக் கொண்டிருப்பதால் இந்த மானிட்டரில் 2டியிலிருந்து 3டிக்கு வீடியோக்களை மாற்ற முடியும். மேலும் இந்த மானிட்டரில் சீனரி, தியேட்டர், கேம், நைட் வியூவ், எஸ்ஆர்ஜிபி மற்றும் ஸ்டேன்டர்டு போன்ற ஆறு வீடியோ மோடுகள் உள்ளன.

இந்த மானிட்டரில் உள்ள பிலிம் டைப் பேட்டர்ன்ட் ரிடார்டர் 3டி தொழில் நுட்பம் 3டி படங்களை தனியாகப் பிரித்துக் காட்டும். மேலும் இந்த மானிட்டர் எச்டிஎம்ஐ உள்பட ஒருசில இணைப்பு வசதிகளையும் கொண்டு வருகிறது.

இந்த புதிய மானிட்டர் பார்வையாளர்களுக்கு 2டி மற்றும் 3டி ஹோம் தியேட்டர் அனுபவத்தை வழங்கும் என்று ஆசஸின் இந்திய தலைவர் வினய் செட்டி தெரிவித்திருக்கிறார்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot