Home
News

ஆஹா ஒளி வந்துவிட்டது.. Asus ROG Phone 8 Pro விற்பனை துவங்கியது.. என்ன விலை? எங்கே வாங்கலாம்?

ஆசஸ் ராக் போன் 8 ப்ரோ (Asus ROG Phone 8 Pro) என்ற ஸ்மார்ட்போன்களின் விற்பனை இப்போது இந்தியாவில் துவங்கியுள்ளது. இதன் விலை மற்றும் முழு விபரத்தை இப்போது பார்க்கலாம்.

ஆசஸ் (Asus) நிறுவனம் கடந்த வாரம் அதன் புதிய ஆசஸ் ராக் போன் 8 (Asus ROG Phone 8) மற்றும் ஆசஸ் ராக் போன் 8 ப்ரோ (Asus ROG Phone 8 Pro) என்ற இரண்டு சாதனங்களை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்தது. இதன் ஆசஸ் ராக் போன் 8 ப்ரோ இந்திய விற்பனை இப்போது ஆசஸ் இன் அதிகாரப்பூர்வ வலைத்தள பக்கம் மற்றும் விஜய் சேல்ஸ் வழியாக வாங்க கிடைக்கிறது.

ஆஹா ஒளி வந்துவிட்டது.. Asus ROG Phone 8 Pro விற்பனை துவங்கியது..

ஆசஸ் ராக் போன் 8 சீரிஸ் (Asus ROG Phone 8 Series) முன்பக்கத்தில் பிளாட் பன்ச் ஹோல் கட்டவுட் உடன் ஸ்லிம் பேசல் டிஸ்பிளேவுடன் (Flat Display) வருகிறது. இந்த போனின் பின்பக்கத்தில் ஆசஸ் ராக் போன் 8 இல் கஸ்டமைஸ் செய்ய கூடிய ஆரா RGB லைட்டிங் லோகோ (Aura RGB Lighting Logo) வழங்கப்பட்டுள்ளது.

ஆசஸ் ராக் போன் 8 ப்ரோ (Asus ROG Phone 8 Pro):

ஆசஸ் ராக் போன் 8 ப்ரோ வேரியண்ட் மாடலில் அனிமே மினி LED லைட்டிங் (AniMe Vision mini-LED Lighting) அம்சத்துடன் வருகிறது. இதில் 341 LED விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது IP68 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் பாதுகாப்புடன் வருகிறது. ஆசஸ் ராக் போன் 8 மற்றும் 8 ப்ரோ சாதனம் 6.78" இன்ச் சாம்சங் AMOLED LTPO டிஸ்பிளேவுடன் வருகின்றன.

இந்த டிஸ்பிளே Full HD+ (1080 x 2400 பிக்சல்) உடன், 165Hz ரெஃப்ரஷ் ரேட் (Refresh rate), 2500 நீட்ஸ் பீக் பிரைட்னஸ் (2500 nits of peak brightness), க்ளோவ் டச் சப்போர்ட் (glove touch support), இன்-ஸ்க்ரீன் பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (n-screen fingerprint scanner) உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் இதன் முந்தைய மாடலான ஆசஸ் ராக் 7 சீரிஸ் போன்களைவிட மெலிதாக வந்துள்ளது.

ஆஹா ஒளி வந்துவிட்டது.. Asus ROG Phone 8 Pro விற்பனை துவங்கியது..

ஆசஸ் ராக் போன் 8 (Asus ROG Phone 8) ரெபெல் க்ரெய் (Rebel Grey) மற்றும் ஃபாண்டம் பிளாக் (Phantom Black) நிறங்களில் வருகிறது. ஆசஸ் ராக் போன் 8 ப்ரோ ஆனது ஃபாண்டம் பிளாக் நிறத்தில் மட்டும் வருகிறது. ஆசஸ் ராக் போன் 8 மற்றும் 8 ப்ரோ சாதனம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (Snapdragon 8 Gen 3 SoC) உடன் வருகிறது.

இதன் ஸ்டாண்டர்ட் வேரியண்ட் மாடல் 12ஜிபி / 16ஜிபி LPDDR5x RAM உடன் 256ஜிபி UFS 4.0 ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இதன் ப்ரோ வேரியண்ட் மாடல் 16ஜிபி / 24ஜிபி LPDDR5x RAM உடன் 512ஜிபி / 1TB ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இரண்டு சாதனங்களும் 5500mAh பேட்டரி உடன் 65W பாஸ்ட் சார்ஜிங்கை (Fast charging) ஆதரிக்கிறது.

ஆஹா ஒளி வந்துவிட்டது.. Asus ROG Phone 8 Pro விற்பனை துவங்கியது..

இதில் குவிக் சார்ஜ் 5.0 (Quick Charge 5.0), PD சார்ஜிங் (PD charging) அம்சங்களும் உள்ளது. இரண்டு ஸ்மார்ட்போன்களும் 15W Qi வயர்லெஸ் சார்ஜிங் (15W Qi Wireless Charging) உடன் வருகிறது. இந்த இரண்டு சாதனங்களும் கூலிங் சிஸ்டம் மற்றும் AeroActive Cooler X அக்சஸரீ உடன் வருகிறது.

ஆசஸ் ராக் போன் 8 சீரிஸ் (Asus ROG Phone 8 Series) 50MP சோனி OIS பிரைமரி கேமரா + 13MP அல்ட்ரா வைடு லென்ஸ் + 32MP டெலிபோட்டோ கேமரா கொண்ட ட்ரிபிள் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. இது வைஃபை 7 (Wi-Fi 7), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), டூயல் பிரிக்வேன்சி ஜிபிஎஸ் (dual-frequency GPS), NFC மற்றும் USB போர்ட் உடன் வருகிறது.

ஆசஸ் ராக் போன் 8 ப்ரோ விலை (Asus ROG Phone 8 Pro Price):

ஆசஸ் ராக் போன் 8 ப்ரோ விலை பற்றி பேசுகையில், இதன் 16GB RAM + 512GB மாடல் ரூ.94,999 விலையிலும், இதன் ப்ரோ எடிஷன் 24GB RAM + 1TB ப்ரோ மாடல் ரூ.1,19,999 விலையிலும் விற்பனைக்கு வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Asus ROG Phone 8 Pro Edition Goes On Sale In India Via Vijay Sale and Official Site Check Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X