அடுச்சான் பாரு Asus.. இனி பட்ஜெட்னா இந்த போன் தான்.. மாஸ் காட்ட வரும் Smartphone.. என்ன மாடல்?
ஆசஸ் (Asus) நிறுவனம் அதன் புதிய ஆசஸ் ஜென்போன் 11 அல்ட்ரா (Asus Zenfone 11 Ultra) ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. சமிபத்தில் நிறுவனம், Asus ROG Phone 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ததென்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் வெளியான லீக் தகவலின்படி, ஆசஸ் நிறுவனம் விரைவில் ஆசஸ் ஜென்போன் 11 அல்ட்ரா (Asus Zenfone 11 Ultra) ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்யவுள்ளது என்பது உறுதியாகியுள்ளது. இந்தோனேஷியா சான்றிதழ் தலமான SDPPI வலைத்தளத்தில் மாடல் எண் ASUS_AI2401_H என்ற பெயருடன் Asus Zenfone 11 Ultra பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த மாடல் எண் ஆசஸ் ஜென்போன் 11 அல்ட்ராவுக்கானது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு Asus Zenfone 11 Ultra சாதனம் ப்ளூடூத் SIG (Bluetooth SIG) தளத்தில் காணப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு சான்றிதழ் தளங்களிலும் ஆசஸ் ஜென்போன் 11 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் வருகையை உறுதிப்படுத்தியுள்ளன. ப்ளூடூத் SIG தளத்தில் காணப்பட்ட ஆசஸ் ஜென்போன் 11 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் ப்ளூடூத் 5.4 வெர்ஷன் இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆசஸ் ஜென்போன் 11 அல்ட்ரா (Asus Zenfone 11 Ultra):
ஆசஸ் ஜென்போன் 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பிளாக்ஷிப் (flagship) தரத்தில் ஒரு கையடக்க காம்பெக்ட் டிசைன் (compact design) சாதனமாக வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும், நாம் இங்கு அல்ட்ரா மாடல் பற்றி பார்த்துக் கொண்டிருப்பதனால், ஆசஸ் ஜென்போன் 11 அல்ட்ரா சாதனம் நிச்சயமாக ஒரு பிரீமியம் ஸ்மார்ட்போன் என்பதை அதன் பெயர் தெளிவாக காண்பிக்கிறது.
அதேபோல், அல்ட்ரா வேரியண்ட் ஸ்மார்ட்போன் மாடல் பெரிய டிஸ்பிளே ஸ்க்ரீன் உடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. ஆசஸ் ஜென்போன் 10 (Asus Zenfone 10) ஸ்மார்ட்போன் மாடலின் வாரிசாக இந்த ஆசஸ் ஜென்போன் 11 அல்ட்ரா வெளிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு வெளியான ஆசஸ் ஜென்போன் 10 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை நினைவுகூர, இது 5.92" இன்ச் AMOLED டிஸ்பிளேவுடன் (display) வந்தது.

ஆசஸ் ஜென்போன் 10 (Asus Zenfone 10):
இந்த டிஸ்பிளே FHD+ ரெசொலூஷன் (resolution) உடன் 144Hz ரெஃப்ரஷ் ரேட் (refresh rate) உடன் வந்தது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் (Qualcomm Snapdragon 8 Gen 2 SoC) உடன் வெளிவந்தது. மறுபுறம், ஆசஸ் ஜென்போன் 11 அல்ட்ரா சாதனம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் (Snapdragon 8 Gen 3 chipset) உடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜென்போன் 10 ஸ்மார்ட்போன் சாதனம் 4,300mAh பேட்டரி (battery) உடன் வந்தது. இது 30W வயர்டு பாஸ்ட் சார்ஜிங் உடன் (wired fast charging) வெளிவந்தது. கேமரா அம்சங்களை பற்றி நினைவுகூறுகையில், 50 மெகாபிக்ஸல் டூயல் கேமரா (dual camera setup) அமைப்புடன் வெளிவந்தது. முன்பக்கத்தில், 32 மெகாபிக்ஸல் செல்பி ஷூட்டர் (selfie shooter) உடன் வருகிறது.
ஆசஸ் ஜென்போன் 11 அல்ட்ரா மேம்படுத்தப்பட்ட கேமராவுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இது வயர்லெஸ் சார்ஜிங் (wireless charging) அம்சத்துடன் பட்ஜெட் விலை பிரிவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆசஸ் ஜென்போன் 10 சதானத்திற்கு இந்திய சந்தையில் அதிக வரவேற்பு இருந்ததினால், நிச்சயம் ஆசஸ் ஜென்போன் 11 அல்ட்ரா சாதனத்திற்கும் அதிக வரவேற்பு கிடைக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








