அதிரவிடும் விலை.. Sony கேமரா.. 512GB மெமரி.. 65W சார்ஜிங்.. அறிமுகமானது புது ASUS போன்.. எந்த மாடல்?
மிகவும் அதிகம் எதிர்பார்த்த ஆசஸ் ஜென்போன் 11 அல்ட்ரா நேற்று (14-3-2024) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஸ்னாப்டிராகன் சிப்செட், 65 ஃபாஸட் சார்ஜிங், 16ஜிபி ரேம் உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இப்போது ஆசஸ் ஜென்போன் 11 அல்ட்ரா போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
ஆசஸ் ஜென்போன் 11 அல்ட்ரா அம்சங்கள் (ASUS Zenfone 11 Ultra specifications): 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் சாம்சங் இ6 அமோலெட்(Samsung E6 AMOLED) டிஸ்பிளே வசதியுடன் ஆசஸ் ஜென்போன் 11 அல்ட்ரா போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக எச்டிஆர் ஆதரவு, 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 250 நிட்ஸ் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் இதில் உள்ளது.

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (Snapdragon 8 Gen 3) சிப்செட் வசதியுடன் ஆசஸ் ஜென்போன் 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பின்பு இந்த போனுக்கு அட்ரினோ 750 ஜிபியு (Adreno 750 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.
12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் ஆசஸ் ஜென்போன் 11 அல்ட்ரா போன் விற்பனைக்கு வரும். மேலும் Zen UI சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும்.

50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்890 சென்சார் (Sony IMX890 sensor)+ 13எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 32எம்பி 3எக்ஸ் டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஆசஸ் போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
3.5மிமீ ஆடியோ ஜாக், டூயல் ஸ்பீக்கர், 5-மேக்னட் ஸ்டீரியோ ஸ்பீக்கர் (5-magnet stereo speaker),ஹெட்ஃபோன் ஸ்பேஷியல் சவுண்டிற்கான டைராக் விர்டுவோ (Dirac Virtuo), டிரை-மைக்ரோஃபோன்கள் (Tri-microphones), இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் (In-display fingerprint sensor) உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஆசஸ் ஜென்போன் 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன்.
5500எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் ஆசஸ் ஜென்போன் 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 65 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் 15 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த போனுக்கு IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கொடுக்கப்பட்டுள்ளது.

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 7 802.11 பிஇ, புளூடூத் 5.4, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன.எடர்னல் பிளாக் (Eternal Black), மிஸ்டி கிரே ( Misty Grey), ஸ்கைலைன் ப்ளூ (Skyline Blue), டெசர்ட் சாண்ட்(Desert Sand) நிறங்களில் ஆசஸ் ஜென்போன் 11 அல்ட்ரா போன் வெளிவந்துள்ளது.
ஆசஸ் ஜென்போன் 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது தற்போது ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த போனின் ஆரம்ப விலை 999 Euros (இந்திய மதிப்பில் ரூ.90,550)-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications








