Home
Mobile

Asus இறக்கிய அசுரன்.. Gaming KING..165Hz டிஸ்பிளே, 24GB ரேம், 1TB ஸ்டோரேஜ், 5500mAh பேட்டரி.. என்ன விலை?

இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த மொபைல் கேமிங் (Mobile Gaming) பிரியர்களுமே.. ஏசஸ் (Asus) நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட்போனின் அறிமுகத்திற்காகத்தான் காத்துகொண்டு இருந்தனர். அந்த ஸ்மார்ட்போன் இன்று (ஜன.8) இந்தியாவில் அறிமுகமாகிறது. என்ன மாடல்? என்ன விலை? என்னென்ன அம்சங்கள்? இதோ விவரங்கள்:

என்ன மாடல்? நாம் இங்கே பேசுவது ஏசஸ் ஆர்ஓஜி போன் 8 சீரீஸை பற்றித்தான். இதன்கீழ் ஏசஸ் ஆர்ஓஜி போன் 8 (Asus ROG Phone 8) மற்றும் ஏசஸ் ஆர்ஓஜி போன் 8 ப்ரோ (Asus ROG Phone 8 Pro) என மொத்தம் 2 மாடல்கள் வெளியாகும். முந்தைய சீரிஸில் 'அல்டிமேட்' வேரியண்ட் (Ultimate Variant) ஒன்றும் இருந்தது. அதை ஆர்ஓஜி 8 போன் சீரீஸிலும் நாம் எதிர்பாக்கலாம்.

Asus இறக்கிய அசுரன்.. Gaming KING.. என்ன விலை?

என்னென்ன அம்சங்கள்? ஏசஸ் ஆர்ஓஜி போன் 8 மற்றும் ஏசஸ் ஆர்ஓஜி போன் 8 ப்ரோ ஆகிய இரண்டுமே ஆண்ட்ராய்டு 14 (Android 14) அடிப்படையிலான ஆர்ஓஜி யுஐ (ROG UI) உடன் வரும் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ப்ரொடெக்ஷன் (Corning Gorilla Glass Victus 2 protection) உடனான 6.78 ஃபுல் எச்டி பிளஸ் அமோஎல்இடி (FHD+ AMOLED) டிஸ்பிளேக்களை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிஸ்பிளேவில் உள்ள முக்கிய வேறுபாட்டை பொறுத்தவரை ப்ரோ மாடலில் எச்டிஆர்10 (HDR10) மற்றும் 165ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட்டிற்கான (165Hz Refresh Rate) ஆதரவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உறுதிப்படுத்தப்பட்ட அம்சங்களை பொறுத்தவரை, இரண்டுமே குவால்காமின் (Qualcomm) லேட்டஸ்ட் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் (Snapdragon 8 Gen 3 SoC) மூலம் இயக்கப்படும்.

பேஸிக் மாடலானது 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மறுகையில் உள்ள ப்ரோ மாடலானது 16ஜிபி மற்றும் 24ஜிபி ரேம் உடனான 512ஜிபி மற்றும் 1டிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

கேமராக்களை பொறுத்தவரை, ஏசஸ் ஆர்ஓஜி போன் 8 சீரிஸின் ப்ரோ மாடலானது, 50 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் மெயின் சென்சார் + அல்ட்ரா-வைட் லென்ஸுடன் கூடிய 13 மெகாபிக்சல் சென்சார் + 32 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ ஷூட்டர் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டிருக்கலாம். முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா இருக்கும் என்று கூறப்படுகிறது. பேஸிக் மாடலின் கேமரா அம்சங்கள் பற்றி தகவல் இல்லை!

பேட்டரியை பொறுத்தவரை ஏசஸ் ஆர்ஓஜி போன் 8 சீரிஸின் 2 மாடல்களுமே 5500mAh பேட்டரிகளை பேக் செய்யலாம், இது குவிக் சார்ஜ் 5.0 (Quick Charge 5.0) மற்றும் பிடி சார்ஜிங் ஆதரவை ( PD charging support) பெற்று இருக்கலாம். கடைசியாக இவ்விரு ஏசஸ் ஸ்மார்ட்போன்களுமே தூசி மற்றும் நீர் தெறிப்பிற்கான ஐபி68 ரேட்டிங் உடன் அனுப்பபடலம்.

இந்தியாவில் ஏசஸ் ஆர்ஓஜி போன் 8 ஸ்மார்ட்போனின் விலை ரூ.79,990 ஆக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல ஏசஸ் ஆர்ஓஜி போன் 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம் ரூ.99,990 ஆக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது,

ஏசஸ் ஆர்ஓஜி போன் 8 சீரிஸை சேர்த்து.. இந்த 2024 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தின் 2வது வாரத்தில் இந்தியா மற்றும் உலகளவில் மொத்தம் 13 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் ஆகின்றன. அவைகளில் மோட்டோரோலா மோட்டோ ஜி34 5ஜி ஸ்மார்ட்போனும் அடங்கும். வேறு என்னென்ன ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் ஆகும் என்கிறகட்டுரை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Asus ROG Phone 8 and ROG Phone 8 Pro Expected Price Specifications India Launch Today Jan 8
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X