2 ஜாம்பவான் காலி.. ASUS Zenfone 11Ultra அறிமுக தேதி உறுதி.. AI அம்சத்துடன் ஒரு பட்ஜெட் போன்னா இது?
கூகுள் (Google) மற்றும் சாம்சங் (Samsung) ஆகிய 2 ஜாம்பவான்கள் AI அம்சத்துடன் ஆண்ட்ராய்டு போன்களை அறிமுகம் செய்த பிறகு, இப்போது ஆசஸ் (Asus) நிறுவனம் AI அம்சத்துடன் இயங்கும் புதிய ஆசஸ் ஜென்ஃபோன் 11 அல்ட்ரா போனை வெளியிட தயராகிவிட்டது.
ASUS Zenfone 11 Ultra: ஆசஸ் ஜென்ஃபோன் 11 அல்ட்ரா (ASUS Zenfone 11 Ultra) பல வார ஊகங்களுக்குப் பிறகு அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியைப் பெற்றுள்ளது. மார்ச் மாதத்தில் நேரடி ஆன்லைன் நிகழ்வு மூலம் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்படும் என்று ஆசஸ் உறுதிப்படுத்தியுளளது. Asus Zenfone 11 Ultra சாதனம் ஆனது, நிறுவனம் இந்த முறை காம்பாக்ட் ஸ்மார்ட்போன்களை வெளியிடுவதற்கு பதிலாக பெரிய போனை வெளியிடும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆசஸ் (ASUS): இந்த தகவல், ASUS நிறுவனத்தின் சமூக ஊடகக் X பக்கத்தின் வழியாக வெளிவந்துள்ளது. எக்ஸ் தளம் முன்னர் ட்விட்டர் என அறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஸ்மார்ட்போனின் டீஸர் படத்தை வெளியிட்டு, மார்ச் 14 அன்று ஆசஸ் ஜென்ஃபோன் 11 அல்ட்ரா (ASUS Zenfone 11 Ultra) வெளியிடப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இது ஆன்லைன் நிகழ்வு மூலம் இரவு 8:00 மணிக்கு TST இல் தொடங்கும்.
எப்போது அறிமுகம்: இந்திய நேரப்படி மாலை 5:30 மணி IST நேரத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல், பெர்லின் (பிற்பகல் 1:00 மணி CET) மற்றும் நியூயார்க் (காலை 8:00 EST) நிகழ்வு நேரங்களில் அறிமுகம் செய்யப்படும் என்று இணையதளம் சிறப்பித்துக் காட்டுகிறது. இந்த ஸ்மார்ட்போன் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் வெளியிடப்படலாம் என்று சுட்டிக்காட்டுகிறது.
ஆசஸ் ஜென்ஃபோன் 11 அல்ட்ரா இந்தியா: இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவிற்கு வருமா இல்லையா என்பது தெரியவில்லை. ஆனால், இதற்கு முந்தைய ஆசஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட காரணத்தினால், இந்த ஆசஸ் ஜென்ஃபோன் 11 அல்ட்ரா (ASUS Zenfone 11Ultra) ஸ்மார்ட்போனும் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டுவரப்படும் என்று நம்பப்படுகிறது. இது AI அம்சத்துடன் வரும் என்பதனால், எதிர்பார்ப்பு இப்போது அதிகரித்துள்ளது.

AI அம்சத்துடன் ஆசஸ் போன்: Asus நிறுவனம் அதன் பக்கத்தில், Asus Zenfone 11 Ultra போனை "AI ஒருங்கிணைந்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்" என்று குறிப்பிட்டுள்ளது. அதாவது ஸ்மார்ட்போன் AI அம்சங்களைக் கொண்டிருக்கும். இந்த அம்சங்களைப் பற்றிய விவரங்கள் தெரியவில்லை என்றாலும், இவை கூகுள் பிக்சல் 8 ப்ரோ AI அம்சங்கள், சாம்சங்கின் Galaxy AI போல் இருக்குமென்று கூறப்பட்டுள்ளது.
டிஸ்பிளே: சமீபத்தில், சீனாவில் வெளியிடப்பட்ட Oppo-வின் ColorOS புத்தாண்டு பதிப்பு புதுப்பிப்பில் வெளியிடப்பட்ட AI அம்சங்களைப் போலவே இருக்குமென்று கூறப்பட்டுள்ளது. எப்படியிருந்தாலும், வரவிருக்கும் புதிய ஆசஸ் ஜென்ஃபோன் 11 அல்ட்ரா (ASUS Zenfone 11Ultra) ஸ்மார்ட்போன் சாதனம் AI அம்சத்துடன் வெளிவரும் என்பது உறுதியாகியுள்ளது. இந்த சாதனம் 6.78" இன்ச் கொண்ட LTPO AMOLED டிஸ்பிளேவை கொண்டிருக்கும்.
சிப்செட்: இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (Qualcomm Snapdragon 8 Gen 3 SoC) சிப்செட் உடன் வெளிவரும் எண்டது கூறப்பட்டுள்ளது. இது 16GB கொண்ட LPDDR5x ரேம் உடன் 512GB ஸ்டோரேஜ் UFS 4.0 உடன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. இது OIS ஆதரவுடன் 50MP + 13MP + 32MP ட்ரிபிள் ரியர் கேமராவை கொண்டிருக்கும். முன்பக்கத்தில் 32MP செல்பி கேமராவை கொண்டிருக்கும்.
பேட்டரி: ஆசஸ் ஜென்ஃபோன் 11 அல்ட்ரா 5,500mAh பேட்டரியை பேக் செய்யும். இது 65W வயர்டு பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் அம்சத்தை கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் விலை பற்றிய விபரங்கள் விரைவில் லீக் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications