2024 தீயா இருக்கு.. 2வது வாரமே 13 புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.. என்னென்ன மாடல்கள்? என்ன விலை?
2024 இரண்டாவது வாரத்தில்.. ஒன்றல்ல இரண்டல்ல.. மொத்தம் 6 ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தத்தம் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்ளன. ஜன.8 தொடங்கி ஜன.11 வரையிலாக என்னென்ன மாடல்கள் எப்போது அறிமுகமாகும்? என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இதோ விவரங்கள்:
01. ஆசஸ் ஆர்ஓஜி போன் 8 சீரீஸ் (Asus ROG Phone 8 Series): இது ஜனவரி 8 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த சீரிஸின் கீழ் மொத்தம் 2 மாடல்கள் அறிமுகமாகும்: ஆர்ஓஜி போன் 8 மற்றும் ஆர்ஓஜி போன் 8 ப்ரோ. இவைகளுடன் ஒரு 'அல்டிமேட்' வேரியண்ட்டும் அறிமுகம் செய்யப்படலாம்.

அனைத்துமே குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் சிப்செட் மூலம் இயக்கப்படும். தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி68 ரேட்டிங்கை பெறும். ப்ரோ வேரியண்ட்டில் 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்890 ப்ரைமரி கேமரா + 13எம்பி அல்ட்ராவைடு யூனிட் + 32எம்பி டெலிஃபோட்டோ ஷூட்டர் இடம்பெறலாம்.
எதிர்பார்க்கப்படும் விலை நிர்ணயத்தை பொறுத்தவரை ஆசஸ் ஆர்ஓஜி போன் 8 (Asus ROG Phone 8) ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.70,000-ஐ சுற்றி இருக்கலாம். மறுகையில் உள்ள ஆசஸ் ஆர்ஓஜி போன் 8 ப்ரோ (Asus ROG Phone 8 Pro) ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.85,000-ஐ தொடலாம்.

02. மோட்டோரோலா மோட்டோ ஜி34 5ஜி (Motorola Moto G34 5G): இது ஜனவரி 9 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதவொரு பட்ஜெட் விலை 5ஜி ஸ்மார்ட்போனாக இருக்கும். இது 6.5-இன்ச் 120Hz HD+ டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட், 50எம்பி மெயின் கேமரா, 16எம்பி செல்பீ கேமரா, 5,000mAh பேட்டரி மற்றும் 18W சார்ஜிங் ஆதரவுடன் ரூ.10,999 க்கு அறிமுகமாகலாம்.
03. போக்கோ எக்ஸ்6 சீரீஸ் மற்றும் போக்கோ எம்6 ப்ரோ 4ஜி (Poco X6 Series and Poco M6 Pro 4G): இவைகள் அனைத்தும் ஜனவரி 11 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளன. போக்கோ எக்ஸ்6 சீரீஸின்கீழ் போக்கோ எக்ஸ்6 மற்றும் போக்கோ எக்ஸ்6 ப்ரோ அறிமுகமாகும். இவைகள் ரெட்மி நோட் 13 சீரிஸின் ரீபிராண்டட் வெர்ஷன்களாக இருக்கும். அதே நேரத்தில் எம்6 ப்ரோ 4ஜி ஒரு புதிய தயாரிப்பாக இருக்கும்.
எதிர்பார்க்கப்படும் விலை நிர்ணயத்தை பொறுத்தவரை போக்கோ எக்ஸ்6 ரூ.20,000 க்கு மேலும் போக்கோ எக்ஸ்6 ப்ரோ ரூ.29,499 க்குள்ளும் அறிமுகம் செய்யப்படலாம். கடைசியாக உள்ள உள்ள போக்கோ எம்6 ப்ரோ 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.20,400 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது.
04. ஒப்போ ரெனோ 11 சீரீஸ் (Oppo Reno 11 Series): இது ஜனவரி 11 அன்று உலகளாவில் அறிமுகமாக உள்ளது. இதன்கீழ் ஒப்போ ரெனோ 11 (Oppo Reno 11) ஸ்மார்ட்போனின் விலை ரூ,29,990 ஆக இருக்கலாம். மறுகையில் உள்ள ஒப்போ ரெனோ 11 ப்ரோ (Oppo Reno 11 Pro) மாடலானது ரூ.39,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.

05. ஹானர் மேஜிக் 6 சீரீஸ் (Honor Magic 6 Series): இது ஜனவரி 10, 11 தேதிகளில் திட்டமிடப்பட்டுள்ள நிகழ்வில் அறிமுகம் சீனாவில் செய்யப்படவுள்ளன. இந்தகீழ் ஹானர் மேஜிக் 6 (Honor Magic 6), ஹானர் மேஜிக் 6 ப்ரோ (Honor Magic 6 Pro) மற்றும் ஹானர் மேஜிக் 6 போர்ஷ் டிசைன் (Honor Magic 6 Porsche Design) என 3 மாடல்கள் வெளியாகும்.
06. ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்7 சீரீஸ் (Oppo Find X7 Series): இது ஜனவரி 8 ஆம் தேதியன்று சீனாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த சீரீஸின்கீழ் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்7 (Oppo Find X7) மற்றும் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்7 அல்ட்ரா (Oppo Find X7 Ultra) என 2 மாடல்கள் வெளியாகும். ஃபைண்ட் எக்ஸ்7 ரூ.85,499 க்கும், ஃபைண்ட் எக்ஸ்7 அல்ட்ரா ரூ.1,19,990 க்கும் அறிமுகம் செய்யப்படலாம்.


Click it and Unblock the Notifications








