ஒரே போடு.. Samsung, OnePlus-ஐ ஓரங்கட்டிய ASUS Zenfone 11 Ultra.. மிரட்டலான ஸ்கோரிங் உடன் அறிமுகத்திற்கு ரெடி..
ஆசஸ் (ASUS) நிறுவனம் விரைவில் அதன் புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடலான ஆசஸ் ஜென்போன் 11 அல்ட்ரா (ASUS Zenfone 11 Ultra) அறிமுகம் செய்யவுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் கீக்பென்ச் ஸ்கோரிங் (Geekbench Score) அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஆசஸ் ஜென்போன் 11 அல்ட்ரா (ASUS Zenfone 11 Ultra): கீக்பென்ச் (Geekbench) வலைப்பக்கத்தின் தகவல் படி, வரவிருக்கும் புதிய ஆசஸ் ஜென்போன் 11 அல்ட்ரா (ASUS Zenfone 11 Ultra) ஆனது 6,949 என்ற மல்டி-கோர் ஸ்கோரையும் (multi-core score); 2,226 என்ற சிங்கிள் கோர் ஸ்கோரையும் (single core score) பெற்றுள்ளது என்று பக்கம் தெளிவாக காண்பித்துள்ளது.

அதேபோல், இந்த புதிய ஆசஸ் ஜென்போன் 11 அல்ட்ரா (ASUS Zenfone 11 Ultra) ஸ்மார்ட்போன் சாதனம் விரைவில் உலகளவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஆசஸ் ஜென்போன் 11 அல்ட்ரா (ASUS Zenfone 11 Ultra) ஸ்மார்ட்போன் சாதனம் ஐந்து வண்ண விருப்பங்களில் வெளி வரும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பற்றிய கூடுதல் விபரங்களை இப்போது பார்க்கலாம்.
இந்த புதிய ஆசஸ் ஜென்போன் 11 அல்ட்ரா (ASUS Zenfone 11 Ultra) இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகமான ஆசஸ் ராக் போன் 8 ப்ரோ (ASUS ROG Phone 8 Pro) மாடலை அடிப்படையாகக் கொண்டதாகத் தெரிகிறது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (Qualcomm Snapdragon 8 Gen 3) ஃபிளாக்ஷிப் சிப்செட்டுடன் கீக்பென்ச் (Geekbench) தளத்தில் காணப்பட்டுள்ளது.
இந்த ஆசஸ் ஜென்போன் 11 அல்ட்ரா (ASUS Zenfone 11 Ultra) சாதனம், இந்த ஆண்டு பிராண்டின் முதல் Zenfone தொடர் மாடலாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆஷஸ் நிறுவனம் கடந்த இரண்டு தலைமுறைகளாக அதன் ஸ்மார்ட்போன் சாதனங்களை கையடக்க காம்பாக்ட் சாதனமாக வழங்கி வந்தது. இப்போது ஒருவழியாக ஆசஸ் நிறுவனம் இந்த திட்டத்தை கைவிட்டுள்ளது.

வரவிருக்கும் ஜென்ஃபோன் 11 அல்ட்ரா போனை, மற்ற ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களின் ஃபிளாக்ஷிப்களுடன் போட்டியிடும் வகையில் உருவாக்கியுள்ளது. ஆம், இப்போது வெளியாகும் மற்ற பிறந்தது பால்க்ஷிப் ஸ்மார்ட்போன் சாதனங்கள் போன்ற நார்மல் சைஸ் வடிவமைப்பை இந்த ஆசஸ் ஜென்போன் 11 அல்ட்ரா (ASUS Zenfone 11 Ultra) பெரும் என்று கூறியுள்ளது.
புதிய கீக்பெஞ்ச் பட்டியல், ஸ்மார்ட்போன் உண்மையில் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 சிப்செட்டைக் கொண்டிருக்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த பட்டியலில் ஆசஸ் ஜென்போன் 11 அல்ட்ரா (ASUS Zenfone 11 Ultra) சாதனம் AI2401 என்ற மாடல் எண்ணுடன் காணப்பட்டுள்ளது. இந்த சாதனம் 6,949 மல்டி-கோர் ஸ்கோர்களை பெற்றுள்ளது.
அதேபோல், 2,226 சிங்கிள் கோர் ஸ்கோரைப் பெற்றுள்ளது. மல்டி-கோருக்கு முறையே 6,661 புள்ளிகள் மற்றும் 6,504 புள்ளிகளைப் பெற்ற Samsung Galaxy S24 Ultra மற்றும் OnePlus 12 போன்ற போன்களை இந்த ஆசஸ் ஜென்போன் 11 அல்ட்ரா (ASUS Zenfone 11 Ultra) சாதனம் முறியடித்துள்ளது. இந்த சாதனம் 6.78" இன்ச் AMOLED டிஸ்ப்ளேவை கொண்டிருக்கிறது. இது 65W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








