மிரள விடும் Asus.. உலகின் முதல் Snapdragon 8 Gen 4 சிப்செட் போன்.. யாருமே எதிர்பார்க்காத 16GB ரேம் மாடல்?
ஆசஸ் (Asus) நிறுவனம் அதன் அடுத்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை (Flagship) ஜென்போன் சீரிஸ் இல் அறிமுகம் செய்யவுள்ளது. இது ஆசஸ் ஜென்போன் 11 (ASUS Zenfone 11) என்ற பெயருடன் வெளிவருமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசஸ் ஜென்போன் 11 (ASUS Zenfone 11) ஸ்மார்ட்போன் சாதனம் இப்போது கூகுள் பிளே கன்சோல் (Google Play Console) தளத்தில் காணப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 4 சிப்செட் (Snapdragon 8 Gen 4) உடன் வெளிவரும் என்று விபரங்கள் குறிப்பிடுகின்றன. இன்னும் குவால்காம் நிறுவனம் இந்த சிப்செட்டை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குவால்காம் (Qualcomm) நிறுவனம் கடந்த ஆண்டின் இறுதியில் தான் அதன் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (Snapdragon 8 Gen 3) என்ற சக்தி வாய்ந்த சிப்செட் மாடலை உலகிற்கு அறிமுகம் செய்தது. இதுவொரு பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் வகை சிப்செட் ஆகும். இதனை தொடர்ந்து குவால்காம் நிறுவனம் இந்த ஆண்டின் இறுதி அல்லது நடுப் பாதியில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 4 சிப்செட்டை அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசஸ் ஜென்போன் 11 (ASUS Zenfone 11):
ஸ்னாப்டிராகன் 8 ஜென் 4 சிப்செட் (Snapdragon 8 Gen 4) உடன் வெளிவரும் முதல் ஸ்மார்ட்போன் சாதனமாக இந்த ஆசஸ் ஜென்போன் 11 (ASUS Zenfone 11) சீரிஸ் இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆசஸ் நிறுவனம் அதன் ஜென்போன் 10 மாடலுடன் அதன் ஜென்போன் வரிசையை நிறைவடைய செய்கிறது என்று வதந்திகள் வெளியாகின.
ஆனால், இப்போது அதெல்லாம் பொய் என்று தெரிவிக்கும் படி, நிறுவனம் அதன் ஜென்போன் 11 சீரிஸ் தொடர்பான தகவல்களை பரப்பி வருகிறது. கூகுள் பிளே கன்சோல் தளத்தில் வரவிருக்கும் புதிய ஆசஸ் ஜென்போன் 11 (ASUS Zenfone 11) ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சங்களில் சில குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போன் பற்றி நமக்கு என்ன தெரியும் என்பது இங்கே.

ஸ்னாப்டிராகன் 8 ஜென் 4 சிப்செட் (Snapdragon 8 Gen 4):
ஆசஸ் ஜென்போன் 11 (ASUS Zenfone 11) ஸ்மார்ட்போன் சாதனம் குவால்காம் சிப்செட் அட்ரினோ 830 ஜிபியு (Adreno 830 GPU) உடன் காணப்பட்டுள்ளது. இது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 4 சிப்செட்டிற்குரியது என்று கூறப்படுகிறது. இந்த சிப்செட் இந்த ஆண்டின் இறுதிக்கு முன்பு வெளியிடப்படும் என்பதனால், இந்த ஸ்மார்ட்போன் சாதனமும் அதே காலவரிசையில் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்பு ஆசஸ் நிறுவனம் அதன் ஆசஸ் ஜென்போன் 10 (ASUS Zenfone 10) சீரிஸ் ஸ்மார்ட்போன் ஜூன் அல்லது ஜூல்லி மாதத்தில் வெளிவரலாம் என்று கூறப்படுகிறது. இது 16GB ரேம் உடன் 256GB ஸ்டோரேஜ் அல்லது 512GB ஸ்டோரேஜ் உடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இந்த ஆசஸ் ஜென்போன் 11 சாதனம் ஆண்ட்ராய்டு 14 (Android 14) உடன் வெளிவரும் என்று கூகுள் பிளே கன்சோல் தகவல் குறிப்பிடுகின்றன.
இந்த ஸ்மார்ட்போன் சாதனம் பன்ச்-ஹோல் கட்அவுட் கொண்ட டிஸ்பிளேவுடன் காணப்பட்டுள்ளது. இதன் கேமரா பற்றிய விபரங்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. ஆனால், இது ஆசஸ் ஜென்போன் 10 சாதனத்தில் இருந்த கேமரா அம்சத்தை விட மேம்படுத்தப்பட்டதாக இருக்குமென்று கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications








