Home
Mobile

ஆத்தாடி.. என்ன இப்படி இருக்கு! Aero Active கூலிங் ஃபேன்.. 24GB ரேம்.. விற்பனை ஆரம்பம்.. என்ன மாடல்? என்ன விலை?

உலகின் மிகப்பெரிய டெக் ஈவென்ட் ஆன சிஇஎஸ் 2024-ல் ஆசஸ் (Asus) நிறுவனத்தின் புதிய கேமிங் ஸ்மார்ட்போன்களான ஆர்ஓஜி போன் 8 (ROG Phone 8) மற்றும் ஆர்ஓஜி போன் 8 ப்ரோ (ROG Phone 8 Pro) அறிமுகம் செய்யப்பட்டன.

பின்னர் இவ்விரு கேமிங் ஸ்மார்ட்போன்களும் (Gaming Smartphones) இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டன. தற்போது ஆசஸ் ஆர்ஓஜி போன் 8 மற்றும் ஆசஸ் ஆர்ஓஜி போன் 8 ப்ரோ ஆகிய இரண்டுமே இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளன. இவைகள் எங்கே வாங்க கிடைக்கிறது? என்ன விலை? என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது? இதோ விவரங்கள்:

Aero Active கூலிங் ஃபேன்.. 24GB ரேம்.. விற்பனை ஆரம்பம்.. என்ன மாடல்?

என்னென்ன அம்சங்கள்? ஆசஸ் ஆர்ஓஜி போன் 8 சீரீஸின் 2 மாடல்களுமே ஆண்ட்ராய்டு 14 (Android 14) அடிப்படையிலான நிறுவனத்தின் சொந்த ஆர்ஓஜி யுஐ (ROG UI) கொண்டு இயங்குகின்றன. மேலும் இரண்டுமே 1080x2400 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 165ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் (165Hz Refresh Rate) மற்றும் 2500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் (Peak Brightness) உடனான 6.78-இன்ச் முழு-எச்டி+ சாம்சங் AMOLED LTPO டிஸ்பிளேவை கொண்டுள்ளன.

இரண்டு ஸ்மார்ட்போன்களின் டிஸ்பிளேக்களுமே கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்புடன் (Gorilla Glass Victus 2 Protection) வருகின்றன மற்றும் குவால்காமின் சமீபத்திய சிப்செட் ஆன ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (Qualcomm Snapdragon 8 Gen 3 Chip) கொண்டு இயக்கப்படுகின்றன. மேலும் இவ்விரு ஆசஸ் ஸ்மார்ட்போன்களுமே 24ஜிபி வரையிலான LPDDR5x ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளன.

Aero Active கூலிங் ஃபேன்.. 24GB ரேம்.. விற்பனை ஆரம்பம்.. என்ன மாடல்?

கேமராக்களை பொறுத்தவரை, இரண்டிலுமே ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் (Triple Rear Camera Setup) உள்ளது. அதில் 50-மெகாபிக்சல் சோனி IMX890 1/1.56-இன்ச் மெயின் சென்சா + 13-மெகாபிக்சல் அல்ட்ரா வைட்-ஆங்கிள் கேமரா + 32-எம்பி டெலிபோட்டோ கேமரா உள்ளன. முன்பக்கத்தில், செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய 12 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.

1டிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜை கொண்டுள்ள ஆசஸ் ஆர்ஓஜி போன் 8 சீரீஸில் 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 7, ப்ளூடூத் 5.3, ஜிபிஎஸ் மற்றும் என்எஃப்சி போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் (Connectivity Options) உள்ளன. மேலும் இரண்டிலுமே 3.5மிமீ ஆடியோ ஜாக் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட், இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சாரும் (In-display fingerprint sensor) உள்ளது.

Aero Active கூலிங் ஃபேன்.. 24GB ரேம்.. விற்பனை ஆரம்பம்.. என்ன மாடல்?

ஆசஸ் ஆர்ஓஜி போன் 8 சீரீஸின் 2 மாடல்களுமே 65W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் க்யூஐ 1.3 வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவு (Qi 1.3 wireless charging) உடனான 5000mAh பேட்டரியை கொண்டுள்ளன. மேலும் தூசி மற்றும் நீர் எதிர்ப்புக்கான ஐபி68 ரேட்டிங்கையும் (IP68 Rating) கொண்டுள்ளன.

இவ்விரு பிளாக்ஷிப் கேமிங் ஸ்மார்ட்போன்களுக்கும் இடையேயான முக்கிய வேறுபாட்டினை பொறுத்தவரை ஹை-எண்ட் மாடலான ஆசஸ் ஆர்ஓஜி போன் 8 ப்ரோ ஆனது நிறுவனத்தின் சொந்த ஏரோஆக்டிவ் கூலர் எக்ஸ் கூலிங் ஃபேன் (AeroActive Cooler X cooling fan) உடன் வருகிறது.

ஆசஸ் ஆர்ஓஜி போன் 8 சீரீஸின் இந்திய விலை மற்றும் விற்பனை விவரங்கள்: இந்தியாவில் ஆசஸ் ஆர்ஓஜி போன் 8 ஸ்மார்ட்போனின் சிங்கிள் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.94,999 க்கு வாங்க கிடைக்கும்.

மறுகையில் உள்ள ஆசஸ் ஆர்ஓஜி போன் 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் 24 ஜிபி ரேம் + 1 டிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ. 1,19,999 க்கு வாங்க கிடைக்கிறது. ஆசஸ் ஆர்ஓஜி போன் 8 சீரீஸின் 2 மாடல்களுமே ஃபாண்டம் பிளாக் கலர் ஆப்ஷனின் கீழ் (இந்தியாவில் ஆசஸ் நிறுவனத்தின் ரீடெயில் பார்ட்னர் ஆன) விஜய் சேல்ஸ் வழியாக வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Asus ROG Phone 8 ROG Phone 8 Pro India Sale Begins On Vijay Sales Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X