Home
Mobile

இதுதான் புதிய ASUS போன்.. 50MP கேமரா.. 512GB மெமரி.. 65W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

ஆசஸ் நிறுவனம் தனித்துவமான வடிவமைப்பைக் கொண்ட போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது. அதன்படி இந்நிறுவனம் விரைவில் ஆசஸ் ஜென்போன் 11 அல்ட்ரா எனும் அசத்தலான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது.

புளூடூத் SIG சான்றிதழ் இணையதளத்தில் ஆசஸ் ஜென்போன் 11 அல்ட்ரா காணப்பட்டது. எனவே இந்த போன் வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. மற்ற போன்களை விட தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது ஆசஸ் ஜென்போன் 11 அல்ட்ரா மாடல். மேலும் ஆன்லைனில் வெளியான ஆசஸ் ஜென்போன் 11 அல்ட்ரா போனின் முக்கிய விவரக்குறிப்புகளை இப்போது பார்க்கலாம்.

இதுதான் புதிய ASUS போன்.. 65W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

ஆசஸ் ஜென்போன் 11 அல்ட்ரா விவரக்குறிப்புகள் (ASUS Zenfone 11 Ultra specifications): 6.78-இன்ச் சாம்சங் அமோலெட் (Samsung AMOLED) டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு இந்த டிஸ்பிளேவில் 2,400 x 1,080 பிக்சல்ஸ், 165Hz ரெஃப்ரெஷ் ரேட், 1200 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன. குறிப்பாக பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அதேபோல் 50எம்பி மெயின் கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 32எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி மெமரி வசதியுடன் ஆசஸ் ஜென்போன் 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த போனில் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆசஸ் ஜென்போன் 11 அல்ட்ரா போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஆசஸ் நிறுவனம்.

சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் (Snapdragon 8 Gen 3 SoC) வசதியுடன் இந்த ஆசஸ் ஜென்போன் 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பான இந்த போனில் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும்.

ஆசஸ் ஜென்போன் 11 அல்ட்ரா ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ப்ளூ (Blue), வெர்டூ கிரீன் (Verdue Green), டெசர்ட் சியன்னா (Dessert Sienna), எடர்னல் பிளாக் (Eternal Black) மற்றும் மிஸ்டி கிரே ( Misty Grey) நிறங்களில் இந்த புதிய ஆசஸ் போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

இதுதான் புதிய ASUS போன்.. 65W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

5500எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ஆசஸ் ஜென்போன் 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் மாடல். எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 65 வாட்ஸ் வயர்டு சார்ஜிங் மற்றும் 15 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவும் உள்ளது.

5ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிடிட்டி ஆதரவுகள் இதில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆசஸ் ஜென்போன் 11 அல்ட்ரா போன் ஆனது சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
ASUS Zenfone 11 Ultra design and specifications leaked online: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X