4 புதிய ஆல்-இன்-ஒன் பிசி கம்ப்யூட்டர்களை வழங்கும் ஆசஸ்!

By Super
|

4 புதிய ஆல்-இன்-ஒன் பிசி கம்ப்யூட்டர்களை வழங்கும் ஆசஸ்!
ஏராளமான பிசி கம்ப்யூட்டர், லேப்டாப், உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன்களை இந்த ஆசஸ் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கிறது. அந்த வகையில் ஆசஸ் நிறுவனம் மீண்டும் 4 புதிய ஆல் இன் பிசி கம்ப்யூட்டர்களை அறிமுகம் செய்கிறது.

இடி-20121-ஜிடிஎஸ், இடி-2210ஐஎன்கேஎஸ், இடி-20-121-ஜிடிஎஸ் மற்றும் இடி-2411-ஐஎன்டிஐ என்ற பெயர் கொண்ட 4 பிசி கம்ப்யூட்டர்களை அறிமுகம் செய்கிறது ஆசஸ் இந்தியா. ஆசஸ் இடி-2012ஐயூகேஎஸ் விண்டோஸ்-7 ஸ்டார்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை கொண்டு இயங்கும். இதில் 2.5 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் இன்டெல் கோர் ஐ5-2400-எஸ் மற்றும் 3.30 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில்

இயங்கும் இன்டெல் கோர் ஐ-3-2120 பிராசஸரினை கொண்டதாக இருக்கும். 2ஜிபியில் இருந்து 8 ஜிபி வரை மெமரி வசதியினையும் பெற முடியும்.

இந்த ஆசஸ் இடி-2012ஐ-ஜிடி மாடலில் விண்டோஸ்-7 இயங்குதளத்தினை கொண்டதாக இருக்கும். இதன் திரையில் 1600 X 900 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் இன்டல் கோர் பிராசஸரினையும் கொடுப்பதாக இருக்கும். இதில் 2ஜிபி முதல் 8 ஜிபி வரை சிறப்பான மெமரி வசதியினையும் பெறலாம். மேலும் இந்த மாடலில் 0.3 மெகா பிக்ஸல் கேமராவும் கொடுக்கப்பட உள்ளது.

இடி-2210-ஐஎன்கேஎஸ் என்ற இந்த மாடலில் விண்டோஸின் லேட்டஸ்ட் வெர்ஷனான விண்டோஸ்-8 இயங்குதளத்தினை பெறாலம் என்று தகவல்கள் கூறுகின்றன. இன்டெல் பிராசஸரினை கொண்டதாக இருக்கும் இந்த ஆல் இன் ஒன் பிசி கம்ப்யூட்டர் 8.3 கிராம் எடை கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசஸ் இடி-2411-ஐஎன்டிஐ மாடலில் விண்டோஸ்-7 இயங்குதளம் கொண்டு சிறப்பான இயக்கத்தினை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்விடியா ஜிடி 630-எம் கிராஃபிக்ஸ் தொழில் நுட்ப வசிதயினையும் பெறலாம். இதன் கேமார பிக்ஸலாக 1.3 மெகா பிக்ஸல் கேமராவினையும் வழங்கும். 20 இஞ்ச் கொண்ட இடி-2012-ஐயூகேஎஸ் மாடல் ரூ. 30,000 ஒட்டிய விலை கொண்டதாக இருக்கும் என்றும், 20 இஞ்ச் இடி-2012ஐ-ஜிடிஎஸ் மாடல் ரூ. 44,400 விலை கொண்டதாகவும், 22 இஞ்ச் திரை கொண்ட இடி-2210-ஐஎன்கேஎஸ் மாடல் ரூ. 43,000 ஒட்டிய விலை கொண்டதாகவும் மற்றும் 24 இஞ்ச் திரை கொண்ட இடி-2411ஐஎன்டிஐ ரூ. 66,600 விலை கொண்டதாகவும் இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.

Most Read Articles
Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X