வாட்ஸ்ஆப்பில் மீடியா விசிபிலிட்டி, காண்டாக் ஷார்ட்கட் அம்சங்கள் இணைப்பு.!

வாட்ஸ்ஆப்பை பயன்படுத்த தொடங்கும் முன்பே, அதற்கும் ஸ்மார்ட்போனில் உள்ள கான்டாக்ட்ஸ் மற்றும் கேலரியை அணுகும் உரிமையை (சின்க்) நாம் கொடுக்க வேண்டும் என்பதை நாம் அனைவரும் செய்யும் ஒரு காரியம் தான்.

|

வாட்ஸ்ஆப்பை பயன்படுத்த தொடங்கும் முன்பே, அதற்கும் ஸ்மார்ட்போனில் உள்ள கான்டாக்ட்ஸ் மற்றும் கேலரியை அணுகும் உரிமையை (சின்க்) நாம் கொடுக்க வேண்டும் என்பதை நாம் அனைவரும் செய்யும் ஒரு காரியம் தான்.

இதை நிகழ்த்தினால் தான், வாட்ஸ்ஆப்பில் இருந்து கேலரியை அணுக முடியும் என்பதையும், வாட்ஸ்ஆப் வழியாக வரும் மீடியாக்கள் கேலரியில் சேமிக்கப்படும் என்பதையும் வாட்ஸ்ஆப் பயனர்களும் அறிந்த காரியமே.

கேலரியில் காட்சிப்படுத்தலாமா.? வேண்டாமா.?

கேலரியில் காட்சிப்படுத்தலாமா.? வேண்டாமா.?

இந்நிலைப்பாட்டில் தான் வாட்ஸ்ஆப்பின் 2.18.159 பீட்டா பதிப்பில் ஒரு புதிய மற்றும் சுவரசியமான அம்சம் காணப்பட்டுள்ளது. அந்த அம்சத்தின் பெயர் மீடியா விசிபிலிட்டி ஆகும். இதன் பயன் என்னவென்றால், வாட்ஸ்ஆப் புகைப்படங்களை ஸ்மார்ட்போனின் கேலரியில் காட்சிப்படுத்தலாமா.? வேண்டாமா.? என்கிற கட்டுப்பாட்டை பயனருக்கு வழங்கும்.

தற்போது ஆண்ட்ராய்டு தளத்தில் களம் இறங்கியுள்ளது.!

தற்போது ஆண்ட்ராய்டு தளத்தில் களம் இறங்கியுள்ளது.!

இந்த புதிய மீடியா விசிபிலிட்டி அம்சமானது, தனியுரிமை பற்றி கவலைப்படுபவர்களுக்கு எதுவாக அமையும் மறுகையில் ஆண்ட்ராய்டு பதிப்பிற்கான புதிய காண்டாக்ட் ஷார்ட்கட் என்கிற ஒரு அம்சமும் காணப்பட்டுள்ளது. இது முன்பு ஐபோனுக்கு மட்டுமே பிரத்யேகமாக இருந்தது, தற்போது ஆண்ட்ராய்டு தளத்தில் களம் இறங்கியுள்ளது.

பயனர்களே தீர்மானிக்கலாம்.!

பயனர்களே தீர்மானிக்கலாம்.!

கூறப்படும் மீடியா விசிபிலிட்டி அம்சமானது ஏற்கனவே டெலிகிராம் ஆப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆக இதையொரு போட்டித்தன்மை மிக்க பெரிய மேம்பாட்டாக எடுத்துக் கொள்ளலாம். இனி வாட்ஸ்ஆப் எனும் போல்டர் ஆனது ஸ்மார்ட்போனின் கேலரியில் இருக்க வேண்டுமா கூடாத என்பதை பயனர்களே தீர்மானிக்கலாம். இதன் அர்த்தம் வாட்ஸ்ஆப் புகைப்படங்கள் ஆனது வாட்ஸ்ஆப் வழியாக மற்றும் பைல் மேனேஜர் ஆப் வழியாக மட்டுமே அணுக கிடைக்கும் என்பதாய் எடுத்துக்கொள்ளலாம்.

செட்டிங்ஸ் > டேட்டா அண்ட் ஸ்டோரேஜ் யூசேஜ்.?

செட்டிங்ஸ் > டேட்டா அண்ட் ஸ்டோரேஜ் யூசேஜ்.?

சமீபத்திய பீட்டா பதிப்பை பயன்படுத்தும் வாட்ஸ்ஆப் பயனர்கள் இந்த மீடியா விசிபிலிட்டி அம்சத்தை பயன்படுத்த விரும்பினால், கீழ் வரும் வழிமுறைகளை பின்பற்றவும் : செட்டிங்ஸ் > டேட்டா அண்ட் ஸ்டோரேஜ் யூசேஜ் உள்நுழைய, அங்கு 'ஷோ மீடியா இன் கேலரி' என்கிற டீபால்ட் விருப்பத்தை காண முடியும். அந்த விருப்பத்தை மாற்றி அமைப்பதின் வழியாக, கேலரியில் இருந்து வாட்ஸ்ஆப் மீடியாக்களை மறைக்கலாம்.

நியூ மெஸேஜ் பட்டனை டாப் செய்யும் போது.?

நியூ மெஸேஜ் பட்டனை டாப் செய்யும் போது.?

மறுகையில் உள்ள காண்டாக்ட் ஷார்ட்கட் அம்சமானது, ஐஓஎஸ் பயனர்களுக்காக முன்னர் வெளியிடப்பட்ட ஒரு அம்சமாகும். வாட்ஸ்ஆப்பீட்டா இன்ஃபோ தெரிவித்த தகவலின்படி, இந்த அம்சம் தற்போது சாட் ஸ்க்ரீனின் வலது பக்கத்தில் உள்ள நியூ மெஸேஜ் பட்டனை டாப் செய்யும் போது அணுக கிடைக்கும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்க விரும்பாத பயனர்கள்.?

அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்க விரும்பாத பயனர்கள்.?

முயற்சி செய்து பார்க்க தூண்டும் இந்த இரண்டு புதிய அம்சங்களுமே எப்போது பொது தளத்திற்கு வரும் என்கிற விவரங்கள் வெளியாகவில்லை. அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்க விரும்பாத பயனர்கள், Google Play Beta-வின் கீழ் வாட்ஸ்ஆப் பீட்டாவை அல்லது APKMirror வழியாக APK வடிவில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
Latest WhatsApp Beta Update Includes Media Visibility Feature and Contact Shortcut. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X