சனி கிரகத்தை சுற்றிவரும் 20 அறியப்படாத நிலவுகள்! விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு.!

|

சூரிய குடும்பத்தில் அதிக நிலவுகளை கொண்ட கிரகம் என்ற பெயரை வியாழன் கிரகத்திடம் இருந்து சனி கிரகம் பறித்துக்கொண்டதாக கார்னகி அறிவியல் நிறுவனம் கடந்த திங்களன்று அறிவித்ததுள்ளது. இதற்கு முன்னர் அறியப்படாத 20 நிலவுகள் சனி கிரகத்தை சுற்றி வருவதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள நிலையில், தற்போது சனி கிரகம் 82 நிலவுகளுடன் , 79 நிலவுகளை கொண்டுள்ள வியாழன் கிரகத்தை பின்னுக்கு தள்ளியுள்ளது.

உலகின் மிகப்பெரிய தொலைநோக்கிகள்

உலகின் மிகப்பெரிய தொலைநோக்கிகள்

இந்த கண்டுபிடிப்பு சனி கிரகமும் அதன் சந்திரன்களும் எப்படி தற்போதுள்ள நிலைக்கு வந்தன என்பதனை அறிவதற்கான புதிய குறிப்புகளுக்கு வழிவகுத்துள்ளன.


உலகின் மிகப்பெரிய தொலைநோக்கிகள் சிலவற்றைப் பயன்படுத்தி, மாபெரும் கிரகங்களைச் சுற்றியுள்ள சிறிய நிலவுகளை நாங்கள் இப்போது கண்டுபிடித்துள்ளோம். நமது சூரிய குடும்பத்தின் கிரகங்கள் எவ்வாறு உருவாகின மற்றும் உருமாறின என்பதை தீர்மானிக்க உதவுவதில் அவை முக்கிய பங்கு வகிக்கின்றன" என்று இந்த கண்டுபிடிப்பு குழுவை வழிநடத்திய கார்னகி வானியலாளர் ஸ்காட் ஷெப்பார்ட் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

17 நிலவுகள் பின்னோக்கி செல்கின்றன

17 நிலவுகள் பின்னோக்கி செல்கின்றன

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட நிலவுகள் ஒவ்வொன்றும் சுமார் 3 மைல் (5 கிலோமீட்டர்) விட்டம் கொண்டவை மற்றும் அவற்றில் 17 நிலவுகள் பின்னோக்கி செல்கின்றன. அதாவது சனியின் சுழற்சிக்கு எதிர் திசையில் சுழல்கின்றன. அவற்றில் ஒன்று இப்போது சனியிலிருந்து வெகு தொலைவில் அறியப்பட்ட சந்திரன் ஆகும்.

 சிறு துண்டுகளாக உடைந்ததால் உருவாகியிருக்கலாம்

சிறு துண்டுகளாக உடைந்ததால் உருவாகியிருக்கலாம்

தற்போதைய இந்த கண்டுபிடிப்புகள் கிரகத்தைச் சுற்றி வரும் கோணங்களால் தொகுப்பாக உள்ள சனியின் வெளிப்புற நிலவுகளின் மூன்று குழுக்களை இணைகின்றன. பின்னோக்கி செல்லும் நிலவுகள் நார்ஸ் குழுவில் இணைகின்றன (அனைத்துமே நார்ஸ் புராணங்களின் படி பெயரிடப்பட்டது). மற்ற இரண்டு இன்யூட் குழுவில் (இன்யூட் புராணங்களால் பெயரிடப்பட்டது) இணைகின்றன. மேலும் இறுதி நிலவு கேலிக் குழுவுடன் (மீண்டும் புராணத்தின் படி) இணைகிறது.

விஞ்ஞானிகள் அந்த குழுக்கள் ஒவ்வொன்றும் ஒரு பெரிய நிலவிலிருந்து சிறு துண்டுகளாக உடைந்ததால் உருவாகியிருக்கலாம் என்று கருதுகின்றனர்.

 மோதல்கள் ஏற்பட்டதைக் குறிக்கிறது

மோதல்கள் ஏற்பட்டதைக் குறிக்கிறது

"இந்த வகையான வெளிப்புற நிலவுகளின் குழுவானது வியாழனைச் சுற்றிலும் காணப்படுவது, சனியின் அமைப்பில் நிலவுகளுக்கு இடையில் அல்லது சிறுகோள்கள் அல்லது வால்மீன்கள் கடந்து செல்வது போன்ற வெளிப்புற பொருட்களுடன் மோதல்கள் ஏற்பட்டதைக் குறிக்கிறது" என்று ஷெப்பர்ட் கூறுகிறார்.

புதிய கேலிக் நிலவு

புதிய கேலிக் நிலவு

இந்த புதிய கேலிக் நிலவு அதன் தோழர்களை விட வெகுதூரம் தொலைவில் சுற்றுகிறது என்பதால் ஏதோ அதை வெளிப்புறமாக இழுத்துவிட்டது அல்லது அது மற்ற சந்திரன்கள் உருவான அதே மோதலில் இருந்து உருவாகவில்லை என்பதை குறிக்கிறது.


இன்று நாம் காணும் குழுக்களை எந்த வகையான மோதல்கள் உருவாக்கியது என்பதையும், அந்த நேரத்தில் சனியைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் எப்படி இருந்தன என்பதையும் தீர்மானிக்க பிற்கால ஆய்வுகள் உதவும்.

 வியாழனைச் சுற்றும் அதிக சந்திரன்கள்

வியாழனைச் சுற்றும் அதிக சந்திரன்கள்

ஆராய்ச்சியாளர்கள் இந்த புதிய நிலவுகளை ஹவாயின் மவுனா கியாவின் மேலுள்ள சுபாரு தொலைநோக்கி மூலம் கண்டறிந்தனர். நட்சத்திரங்கள் மற்றும் விண்மீன்களின் பின்னணியில் சனி கிரகத்தின் நகரும் நிலவுகள் அவற்றின் தூரத்தின் காரணமாக விஞ்ஞானிகளால் பார்க்க முடிந்தது.

கடந்த ஆண்டு வியாழனைச் சுற்றும் அதிக சந்திரன்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவற்றிற்கு பெயரிடுவதற்காக ஷெப்பர்ட் மற்றும் கார்னகி நிறுவனம் ஒரு ஆன்லைன் போட்டியை நடத்தியது. இந்த புதிய நிலவுகளுக்கும் அவர்கள் அதே அணுகுமுறையை கையாளவுள்ளனர். இந்த பெயரிடல் வைபவம் தொடர்பாகவும், புதிய பெயர் பரிந்துரைகளாலும் டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் விதவிதமான பதிவுகள் களைகட்ட துவங்கியுள்ளன.

Best Mobiles in India

English summary
Scientists Just Discovered 20 Previously Unknown Moons Orbiting Saturn: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X